||ஸ்ரீமதே இராமாநுஜாய நம||
"சர்வம் விஷ்ணு மயம் ஜகத்"
சங்க காலச் சான்றோர்கள் வழி வந்த ஆழ்வார்கள் தம் திவ்யப்ரபந்தங்களில் திருமாலேயே பரம்பொருளாகவும், ஸர்வந்தர்மியாகவும் கூறும் விசிஷ்டாத்வைத ஸ்ரீ வைஷ்ணவ மதமே வைதிக மதம் என்று நிலைநாட்டினர். இவ்வுண்மையை த் தெளிவாகக் காட்டுவதற்காக, பரம் பொருளுக்கே உரிய பெருமை களை ஒன்பது தலைப்புக்களில் எடுத்துக்கொண்டு வேதங்களும், சங்கநூல்களும், ஆழ்வார்களும் அப் பெருமைகளைத் திருமாலாகிற நாராயணனுக்கே கூறுவதை காண்க.
1. நாராயணனே உலகனைத் தையும் படைத்து அளித்து அழிக்கும் ஜகத்காரணன்.
"நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே நாராயணாத் இந்த்ரோ ஜாயதே நாராயணாத் த்வாதஸாதித்யா ருத்ரா வஸவ:"
[நாராயணோபநிஷத்]
[நாராயணனிடமிருந்து பிரமன் உண்டாகிறான்(பிரமனுக்கு அந்தர் யாமியான) நாராயணனிடமிருந்து உருத்திரன் உண்டாகிறான். (கஸ்யபருக்கு அந்தர்யாமியான) நாராயணனிடமிருந்தே இந்திரன் உண்டாகிறான்....நாராயணனிடமி ருந்து(இவ்வண்ணமாக) பன்னிரு ஆதித்யர்களும், பதினொரு உருத் திரர்களும் எட்டு வஸுக்களும் தோன்றினார்கள்]
"ஏகோஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேஸாந" [மஹோபநிஷத்]
[நாராயணன் ஒருவனே(ப்ரளய காலத்தில்) இருந்தான். பிரமனுமில்லை சிவனுமில்லை.]
"மா அயோயே மாஅயோயே! மறுபிறப்பு அறுக்கும் மாசுஇல் சேவடி மணிதிகழ் உருபின் மாஅயோயே!...
விதியின்மக்களும் மாசுஇல் எண்மரும் பதினொரு கபிலரும் தாமாஇருவரும் தருமனும் மடங்கலும் மூ ஏழுலகமும் உலகினுள் மன்பதும் மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் மாயா வாய்மொழி உரைதரவலந்து வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரை ப்பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீஎன மொழியுமால் அந்தணர் அருமறை"
"மாநிலம் இயலா முதல்முறை அமையத்து நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய வாய்மொழி மகனொடு மலர்ந்த தாமரைப் பொகுட்டு நின்"[பரிபாடல் -3]
"நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான்" [நான்..திருவ-1]
"போதுதங்கு நான்முகன் மகன் அவன் மகன்சொலில் மாதுதங்கு கூறன் ஏறதூர்தி என்று வேதநூல் ஓதுகின்றதுண்மை அல்லதில்லை"
[திருச்சந்தவிருத்தம்-72]
"கள்வா! எம்மையும் ஏழுலகும் நின் உள்ளே தோற்றிய இறைவ! என்று வவெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளுர்தி கழல்பணிந்து ஏத்துவரே"
[திருவாய்மொழி-2-2-10]
2. நாராயணனே அனைத்துலகையும் வியாபிக்கும் அந்தர்யாமியாகவும் , அதனாலேயே அனைத்துமாகச் சொல்லத்தக்கவனாகவும் இருப்பவன்.
"நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண: பர:|
நாராயண பரோ ஜ்யோதிராத்மா நாராயண: பர: ||
யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மிந் த்ருஸ்யதே ஸ்ரூயதேபி வா |
அந்தர்பஹிஸ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித:||
[தைத்திரீய நாராயணவல்லி]
[நாராயணனே பரப்ரஹ்மம், நாராயணனே பரதத்வம், நாராயணனே பரஞ்சோதி, நாராயணனே பரமாத்மா, இவ்வுலகில் காண்பனவும் கேட்பனவுமாக எந்தெந்தப் பொருள்கள் உள்ளனவோ, அவையனைத்திலும் உள்ளும் புறமும் வியாபித்து விளங்குபவன் நாராயணனே]
"ப்ரஹ்மா நாராயண: ஸிவஸ்ச நாராயண:...நாராயண ஏவேதம் ஸர்வம்" [நாராயணோப நிஷத்]
[பிரமனும் நாராயணனே. சிவனும் நாராயணனே. நாராயணனே இவ்வுலகனைத்தும் ஆவான்]
"ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை ஒருவனும் மடங்கலும் நீ....
பூவனும் நாற்றமும் நீ" [பரிபாடல்-1]
"இனைத்து என எண்வரம்பு அறியா யாக்கையை"
"அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ ஆதலின்"
[பரிபாடல்-3]
"கெடுஇல் கேள்வியில் நடு ஆகுதலும்" [பரிபாடல்-2]
"ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும் நீக்கமின்றி எங்கும் நின்றாய்" [திருவாய்-4-7-6]
"நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்" திருவாய் -6-9-1]
1. நாராயணனே எல்லாம் அறிந்த ஸர்வஜ்ஞனாகவும் எல்லாம்வல்ல ஸர்வசக்தனாக வும் இருப்பவன்.
"அத புருஷோ ஹவை நாராயணோகாமயத- ப்ரஜாஸ்ருஜேயேதி | நாராயணாத் ப்ராணோ ஜாயதே மந: ஸர்வேந்த்ரியாணி ச | கம் வாயு: ஜ்யோதிராப: ப்ருதிவீ விஸ்வஸ்ய தாரிணி || [நாராயணோபநிஷத்து]
[புருஷன் எனப்படும் நாராயணன்
'அனைத்துப் பொருள்களையும் ஸ்ருஷ்டிக்கக் கடவேன்' என்று ஸங் கல்பித்தான். நாராயணனிடமிருந் தே ப்ராணன் உண்டாகிறது; மனமும் எல்லா இந்திரியங்களும், ஆகாயமும், வாயுவும், அக்னியும், நீரும், அனைத்தையும் தரிக்கும் பூமியும் உண்டாகின்றன.]
"யஸ்ஸர்வஜ்ஞ: ஸர்வவித் யஸ்ய ஜ்ஞாநமயம் தப:" [முண்டக..-1-1-10]
[எந்தப் பரமாத்மா அனைத்தையும் அறிகிறானோ, அனைத்தையும் அடைந்திருக்கிறானோ அவனுடைய ஜகத் ஸ்ருஷ்டியாகிற தவம் ஸங்கல்பமயமாயிருக்கிறது.]
"பராஸ்ய ஸக்தி: விவிதைவ ஸ்ருயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பல க்ரியா ச" [ஸ்வேத..6-7]
[இந்தப் பரமாத்மாவினுடைய சக்தியும் ஜ்ஞானமும் செயலும் மேலானதாகவும், பலவிதமாகவும், இயல்வானதாகவும் உள்ளன.]
"நூறு ஆயி ம் கை ஆறுஅறி கடவுள் நின்னைப் புரைநினைப்பின் நீஅலது உணர்தியோ முன்னை மரபின் முதுமொழி முதல்வ!"
"நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும் வலியினு மனத்தினும் உணர்வினும் எல்லாம் வனப்பு வரம்பு அறியா மரபிணோயே!"
"இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை" [பரிபாடல் 3]
"எல்லையில் ஞானத்தன் ஞானம் அஃதேகொண்டு எல்லாக் கருமங்களும் செய் எல்லையில் மாயன்" [திருவாய் -3-10-8]
4. நாராயணனே தலைசிறந்த மோக்ஷத்தை அளித்து ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை அளிப்பவன்.
"உதாம்ருதத்வஸ்யேஸந: ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மீஸ்ச பத்ந்யௌ--- இஷ்டம் மநிஷாண"[புருஷஸூக்தம்]
[மோக்ஷத்தை அளிக்கவல்ல தலைவன் புருஷன் என்னும் நாராயணனே; லக்ஷ்மிதேவியும், பூமி தேவியும் பரம புருஷனாகிய உன்னுடைய பத்தினிகள் உன்னிடம் நாங்கள் விரும்பியது அனைத்தையும் பெறக் கடவோம்.]
"தத்விஷ்ணோ: பரமம்பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய:"
[ரிக் வேதம் மண்டலம் -5-22-5]
[விஷ்ணுவினுடைய அந்த மேலான பரமபதத்தை நித்ய ஸூரிகள் எப்போதும் கண்டு கொண்டிருக்கிறார்கள்.]
"மறுபிறப்பு அறுக்கும் மாசுஇல் சேவடி மணிதிகழ் உருபின் மாஅயோயே!" [பரிபாடல்-3]
"நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம் அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம் எளிதில் பெறல் உரிமை" [பரிபாடல் -15]
"வீடு முதலாம்" [திருவாய்-2-8-1]
"சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும் நீ கண்டுகொள் என்று வீடு தரும் நின்று நின்றே" [திருவாய்-3-9-9]
"இவ்வுடல் நீங்கிப்போய்ச் சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி ஒன்றிஒன்றி உலகம் படைத்தான்"[திருவாய்-10-10-11]
5. நாராயணனே எல்லாக் கல்யாண குணங்களுக்கும் இருப்பிடமாய், தாழ்ந்த குணங்கள் எதுவும் இல்லாதவ னாய் இருப்பவன்.
"நிஷ்கலங்கோ நிரஞ்ஜநோ நிர்விகல்போ நிராக்யாத: ஸுத்தோ தேவ ஏகோ நாராயண: ந த்விதீயோஸ்தி கஸ்சித்||"
[நாராயணோபநிஷத்]
[ஸ்வரூபரூப குணங்களில் எவ்விதக் குற்றமும் அற்றவனாய், ப்ராக்ருதமான குணங்களும் பெயர்களும் அற்றவனாய்,சுத்தனா ய் இருக்கும் தேவன் நாராயணன் ஒருவனே. இரண்டாமவன் ஒருவனுமில்லை.]
"தாதா விதாதா கர்த்தா விகர்த்தா திவ்யோ தேவ ஏக ஏவ நாராயண:|.. உத்பவ: ஸம்பவோ திவ்யோ தேவ ஏகோ நாராயண:||"
[ஸுபாலோபநிஷத்]
[அனைத்தையும் தரிப்பவனும், அனைத்தையும் விதிப்பவனும், செய்பவனும், சிறந்த விகாரங்க ளையுடையவனும், பரமபதத்திலிரு க்கும் தேவனான நாராயணன் ஒருவனே; பலவித அவதாரங்களை எடுப்பவன் பரமபதத்திலிருக்கும் தேவனான நாராயணன் ஒருவனே.]
"நின் ஒக்கும் புகழ் நிழலவை.... எண்ணிறந்த புகழவை"[பரிபாடல்1]
"வாய்மை வயங்கிய வைகல் சிறந்த நோன்மைநாடின் இருநிலம்" [பரிபாடல்-2]
"நின் புகழ் உருவின கை"
[பரிபாடல்-3]
"சேவல் ஓங்கு உயர்கொடிச் செல்வ ஏவல்இன் முதுமொழி கூறும் நற்புகழவை" [பரிபாடல்-13]
"அன்பது மேஎய் இருங்குன்றத்தான்"[பரிபாடல்-15]
"நல்லவை எல்லாம் இயைதரும் தொல்சீர் குளவாய் அமர்ந்தான் நகர்" [பரிபாடல் திரட்டு]
"தாவா விழுப்புகழ் மாயோன்"
[தொல்காப்பியம் பூவைநிலை]
"தேயா விழுப்புகழ் தெய்வம்"
[முல்லைக்கலி-3]
"புகழ் ஒத்தீயே இகழுநர் அடுநனை" [புறநானூறு-56]
"வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் புகழ்தல் உற்றார்க்கு மாயோன் அன்ன"[புறநாநூறு-57]
"ஈறில வண்புகழ் நாரணன்"
[திருவாய்-1-2-10]
"உயர்வற வுயர்நல முடையவன்யவனவன்"
[திருவாய்-1-1-1]
"வல்வினையேனை ஈர்கின்ற குணங்களையுடையாய்"
[திருவாய்-8-1-8]
"தோற்றக்கேடவை இல்லவன்"
[திருவாய்-3-6-6]
6. நாராயணனே தேவர்களுக் கெல்லாம் முதல்வனான தேவாதிதேவன்.
"அக்நிரவமோ தேவதாநாம் விஷ்ணு: பரம:"[யஜூஸ்ஸம்ஹிதா-5-5]
[தேவதைகளுக்குள் அக்கினியான வன் கீழ்நிலையில் இருப்பவன். விஷ்ணு தனக்குமேல் ஒருவர் இல்லாத மேல் நிலையில் இருப்பவன்]
"தம் தேவதாநாம் பரமம் ச தைவதம்" [ஸ்வேதாஸ்வர]
[தேவதைகளுக்குள் மேலான தேவதையாயிருப்பவன் அந்தப் பரமாத்மாவே]
"அமரர்க்கு முதல்வன் நீ"
[பரிபாடல்]
"மனிசர்க்குத் தேவர்போலத் தேவர்க்கும் தேவாவோ"
[திருவாய்-8-1-3]
"தேவாதிதேவனை" [திருப்பாவை8]
7. நாராயணனே எவராலும் அளத்தற்கரியவன்.
"ந ஸந்தருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சக்ஷுஷா பஸ்யதி கஸ்சநைநம்"
[தைத்திரீய நா..1-10]
[அந்தப் பரமாத்மாவின் உருவம் எவனுடைய கண்ணுக்கும் புலனா காது; எவனும் அவனைக் கண்ணால் பார்த்ததில்லை.]
"யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ"
[தை-ஆந-9]
[எந்தப் பரமாத்மாவிடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அவனை அறிய முடியாமல் திரும்பி வருகின்றனவோ.]
"அன்னமரபின் அனையோய்! நின்னை இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது?"
[பரிபாடல்-1]
"நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ முன்னை மரபின் முதுமொழி முதல்வ"
[பரிபாடல்-4]
"அளப்பரியவை" [பரிபாடல்-4]
"இலனது உடையனிது என நினவரியவன்" [திருவாய்-1-1-3]
"யானுமேத்தி ஏழுலகும் முற்றும் ஏத்திப் பின்னையும் தானும் ஏத்திலும் தன்னை ஏத்த ஏத்த எங்கெய்தும்" [திருவாய்-4-3-10]
8. நாராயணனே அனைத்துயிர்களுக்கும் எல்லா உறவுமாய் இருக்கும் உறவினன்.
"மாதா பிதா ப்ராதா நிவாஸ: ஸரணம் ஸுஹ்ருத் கதி: நாராயண:|" [ஸுபால உப]
[தாய், தந்தை ஸகோதரன் முதலான எல்லா உறவாகவும், புகலிடமாகவும், உபாயமாகவும், நண்பனாகவும், ப்ராப்யமாகவும் இருப்பவன் நாராயணனே]
"அன்னை என நினைஇ நின் அடிதொழுதனெம்" [பரிபாடல்-18]
"எவ்வயின் உலகத்தும் தோன்றி அவ்வயின் மண்பது மறுக்கத் துன்பம் களைவோன் அன்பதுமோய் இருங்குன்றத்தான்"
[பரிபாடல்-15]
"பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தை நீ மற்றையாராவாரும் நீ பேசில்" [பெரிய திருவ-5]
"தஞ்சமாகிய தந்தைதாயொடு தானுமாய் அவை அல்லனாய்"
[திருவாய்-3-6-9]
9. நாராயணனே வேதங்களின் முழுமுதல்வனாக முழங்கப்படுபவன்.
"த்வே வித்யே வேதிதவ்யே...பரா சைவாபரா ச | தத்ராபரா ரிக்வேதோ யஜூர்வேத: ஸாமவேத: அதர்வவேத:||
[முண்டக 1-1-4-5]
[பரமாத்மாவைக் காட்டும் இரண்டு வித்யைகளை ஜீவன் அறிய வேண்டும். பக்தியானது மேலான வித்யை. வேதங்கள் இரண்டாவதான வித்யை. அந்த வேதங்கள் ரிக், யஜூர், ஸாமம், அதர்வணம் என்று நாலு வகைப் படுகின்றன.]
"வாய்மொழிப் புலவ"
"நலம்முழுது அளைஇய புகர் அருகாட்சிப் புலமும் நீ"
"நாவல் அந்தணர் அருமறைப் பொருளே நின் ஏவல் உழந்தமை கூறும்" [பரிபாடல்-1]
"வடுஇல் கொடுகையின் உயர்ந்தோர் ஆய்ந்த கெடுஇல் கேள்வியின் நடு ஆகுதலும்"
"என்னும் நாவல் அந்தணர் அருமறைப் பொருளே"
"கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும் நின்உருபு" [பரிபாடல்-2]
"மூ ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும் மாயோய் நின் வயின் பரந்தவை உரைத்தேம் மாயா வாய்மொழி உரைதர வலந்து வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீஎன மொழியுமால் அந்தணர் அருமறை"
"ஏஎ இன கிளத்தலின் இனமை நற்கு அறிந்தனம்"
"பதினாயிரம் கை முதுமொழி முதல்வ"
"முன்னைமரபின் முதுமொழி முதல்வ"
"தொல் இயல் புலவ"
"வேதத்து மறை நீ" [பரிபாடல்-3]
"அவை நின் ஓர் அன்ஓர் அந்தணர் அருமறை"
"பாப்புப் பகையைக் கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை ஏவல்இன் முதுமொழி கூறும்"
[பரிபாடல்-13]
"நலம்புரீஇ அம்சீர் நாம வாய்மொழி இது என உரைத்தலின்" [பரிபாடல்-15]
"உளன் சுடர் மிகு சுருதியுள்"
[திருவாய்-1-1-7]
"மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே" [திருவாய்-3-1-10]
"நம்முடைய நாயகனே! நான்மறையின் பொருளே"
[பெரியாழ்திரு 1-5-3]
"வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே"[பெரியாழ்திரு4-3-11
"அரன் நாரணன் நாமம் உரை நூல்மறை" [முதல் திருவ 5]
"போதில் மங்கை பூதலக்கிழத்திதேவி ... என்று வேதநூல் ஓதுகின்றதுண்மை அல்லதில்லை" [திருச்சந்த -72]
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.
ஆதாரம்:-[வேதம் தமிழ் செய்த ஆழ்வார்களும் தமிழ் வேத பாஷ்யகாரரும்]