||ஸ்ரீமதே இராமாநுஜாய நம||
"விஷ்ணு மயம் சர்வம் ஜகத்"
சைவர்கள் கூறுவர் "சிவபெருமானையே மஹேஸ்வரன் என்று" திருமாலை அல்ல என்றும். இதற்கான மறுப்பினை ஸ்வாமி "பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்"
வளங்கியிருக்கிறார் அதை பார்ப் போம்;..
"செய்தவங்கள் செய்து சிவனாயி னானைநீர் எய்தம கேச்சுரனென் றேத்தல்---வைதசிறு புன்கள்ளி தன்னைப் புவியின் மகாவிருக்கம் என்கை யொக்கு மொக்குமே ஈங்கு."
என்ற வெண்பாவைக் கூறி மறுத்தார்.
"பூமியிலுள்ள சிலர் அற்பமான கள்ளி மரத்தைக்கூட மஹா விருக்ஷமென்று கூறுகிறார்கள். அதுபோல, சிறந்த தவங்கள் மிகச் செய்து சிவன் என்ற பேர்பெற்ற வனை மஹாதேவன், மஹேஸ் வரன் என்று நீர் ஏத்தித் துதிப்பது மாகும்" என்பது இதன் கருத்தாகும். இனி இதன் சான்று;..
மஹாதேவன் என்பதனாலோ, மஹேஸ்வரனென்பதனாலோ சிவனை முழுமுதற்கடவுளென்று கூற இயலாது. இராவணேஸ்வரன், சநீஸ்வரன் என்று பலருக்கு ஈஸ்வர ப்பட்டம் உண்டு. அவர்களிலும் உயர்ந்தவன் என்பதைக் காட்டு வதற்காகவே மஹேஸ்வரன் என்று சிவனை வடநூலார் கூறுவர்.
இதன்விளக்கமாக (ஸ்ரீவைஷ்ணவ சுதர்சனம் வெளியீடான) 'விஷ்ணுசித்த விஜயம்' பக்கம் 175-இல்; "மஹாதேவ:--- இது உருத்திர னுக்கு அஸாதாரணமான பெயர் களின் ஒன்று. "மஹா தேவன்" என்றதினால் இவன் தேவர்களுக் குள் உயர்ந்தவன் என்று ஏற்படுகிற தே எனில்; 'மஹேந்திரன்' என்றால் வாயு, அக்னி முதலிய தேவதைகளுக்குத் தலைவன் என்றே ஏற்படும். அதுபோலவே "மஹாதேவன்" என்பது இந்திராதி தேவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் என்றே பொருள்படும். "கள்ளி விருக்ஷத்தை மஹாவிருக்ஷம் என்னுமாப்போலே உருத்திரனை மஹாதேவன் என்பது" என்று நம் ஆசாரியர்கள் அருளிச்செய்வார்கள்.
"மஹாவ்ருக்ஷஸமாக்யேவ பலவந்மாந பாதிதா| மஹேஸ்வர மஹேந்த்ராதிஸமாக்யாப்யத்ர நிஷ்பலா|"
[ப்ரபலமான ப்ரமாணங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மஹேஸ்வர ன், மஹேந்த்ரன் முதலிய பெயர்களும், இதர தேவதைகளுக் குப் பரத்துவத்தை ஸாதிக்கும் விஷயத்தில், 'மஹாவ்ருக்ஷம்' என்னும் பெயர் போலவே பிரயோஜனமற்றவை.] என்றல்லவோ சொல்லப்பட்டது" என்பதைக் காணவும். மேலும்; பகவத்கீதை ஐந்தாம் அத்தியாயம் 29-வது ஸ்லோகத்தில்,
"போக்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோக மஹேஸ்வரம் | ஸுஹ்ருதம் ஸர்வபூதாநாம் ஜ்ஞாத்வா மாம் ஸாந்திம் ருச்சதி|| [கீதை 5-29]
என்று கீதாசாரியன் அருளிச் செய்யுமிடத்து, தானே 'மஹேஸ்வரன்' என்று கூறுவதும் குறித்துக்கொள்ளத் தக்கது. மேலே கண்ட கீதா ஸ்லோகத்திற்கு "மஹேஸ்வரம்" என்று மாத்திரம் சொன்னால் ரூடியாலே உருத்திரனைக் குறிப்பதாகச் சிலர் மயங்கக்கூடும் என்று பார்த்து "ஸர்வலோகங்களுக்கும் மஹேஸ் வரன்" என விஸேஷிக்கிறார். "தமீஸ்வராணாம் பரமம் மஹேஸ் வரம்"[ஸ்வேதாஸ் 6-7] [ஈஸ்வரர்களுக்கெல்லாம் மேலான மஹேஸ்வரனான அவனை] என்றன்றோ உபநிஷத்தும் ஓதிற்று ஸ்ருதியில் பரம மஹச்சப்தங்களா லே விஸேஷித்திருப்பதும் உருத்தி ரனுக்கு ஒட்டாதன்றோ? "ஸர்வேஸ்வரேஸ்வர: க்ருஷ்ண:" [விஷ்ணுதர்மம் 74-44] முதலான ஆயிரக்கணக்கான இடங்களில் மஹர்ஷிகள் உருத்திரன் முதலான ஈஸ்வரர்களு க்கும் ஈஸ்வரனாகக் கண்ணனை யன்றோ அறுதியிட்டனர். என கீதார்த்த விவரணத்தில் சுதர்சனம் ஆசிரியர் விளக்குவது காண்க.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
அறிவிலிகளே! உங்கள் உளறல்களுக்கு
ReplyDeleteஎல்லாம் தக்க உத்தரம் சொல்ல சைவர்கள் காத்திருக்கிறார்கள்
உங்கள் பாஷாண்ட வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே பாம்பன் சுவாமிகள் "சைவ சமய சரபம்"என்னும் நூலில் கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளார்
ReplyDeleteமூடர்களே! சங்கரரே மும்மூர்த்திகளுக்கும் மேலான நான்காம் தெய்வம் என்று வேதங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன
ReplyDeleteவேதங்களில் சிவபெருமானைப் புகழாத உபநிடதங்களே இல்லை.பிள்ளைப் பெருமாளின் பித்துரைகளுக்கு சாதாராண பாமரர்களே மயங்குவார்களன்றி அறிவுடைய நல்லோர் மயங்கமாட்டார்கள்
ReplyDeleteச்சீ சாஸ்திரப் புரட்டு பல செய்து பரமென வந்திக்கப்பட்ட தெய்வம் எதுவாயினுமாக அது
ReplyDelete"அந்தோ பாவி என்னையும் கெடுத்தாய் என்று அலறுமென்க"
ஈஸ்வர சப்தம் சிவபெருமானுக்கே உரியது.
ReplyDeleteஅவன் தேவர்களின் தேவன் என்பதனால் தான்
மகாதேவன் என வந்திக்கப்பட்டான்.அந்த
தேவர்களில் விஷ்ணுவும் அடங்குவர்.விஷ்ணுவுக்கு மகேஸ்வர சப்தம் வேதங்களில் சொல்லப்படவே இல்லை.
'ஹிரண்யபாஹூம் ஹிரண்யரூபம் ஹிரண்யவர்ணம் ஹிரண்யநிதி மத்வைதம் சதுர்த்தம் ப்ரஹ்ம விஷ்ணு ருத்ராதீத மேக மாசாஸ்யம் பகவந்தம் சிவம்' என்று பஸ்ம ஜாபால உபநிடதம் சிவபெருமானை மூவருக்கும் முதல்வன் என வந்தித்து இருப்பதை அறியாத
ReplyDeleteமடமையே வைணவர்களின் பித்துரைகளுக்கு காரணம்
திருஞான சம்பந்தர் திருமங்கையாழ்வாரிடம் தோற்று வேலை கொடுத்து ஸேவித்தார் என்பது உலகறிந்த விஷயம். இதுபோல் ஒருநாளும் வைணவர் எவரும் வெற்றி மட்டுமே கொண்டனர். அறிவிலிகள் எதிர்த்து வாதம் செய்வது கலிகாலமே.
ReplyDeleteசம்பந்தரை காமுகனான மங்கைஆழ்வான் வென்றான் என நீ கூறுவது பொய் அவ்விருவர் காலமும் ஒன்றல்ல என்பது ஆராய்ச்சி முகத்தால் நிரூபித்திருக்கிறது சைவசமய சரபம் போன்ற நூற்கள்
Deleteஅரதத்திரிடம் வாசுதேவனும் அப்பயரிடம் தாதாசாரியும் தோற்றுப் போனது தெரியாமல் புலம்புவது உன்னைப் போன்ற மூடர்களுக்கு வழக்கமே
எங்கள் சம்பந்தப் பெருமானின் கால் தூசிக்கும் உங்கள் பேயாழ்வார்கள் நிகராகமாட்டார்கள்.
Deleteஉங்கள் பஞ்சராத்திரச் சுவடியிலும் கூரேசவிசயத்திலும் கண்டதையும் எழுதிவைத்து
அவைதிகத்தைப் பரப்ப முயற்சிப்பது கலிகால தோஷமே அன்றி வேறல்ல.
நீ செத்த பிறகு உனது உயிர் கண்டிப்பாக நரகத்தை அடையும் அங்கு உனது பூர்வாச்சாரியார்களான இராமானுசன்,கூரத்தாழ்வான்,தாதாசாரி, போன்றவர்கள் நரகத்தை அனுபவித்துக் கொண்டிருப்பர், அவர்களோடு சேர்ந்து நீயும் அனுபவித்தாலன்றி நீ செய்த தூஷணை நீங்காது.
உங்கள் மங்கைஆழ்வான் சமணர்களை வென்று வைணவத்தை நிலைநாட்டினானோ? இல்லை ஆண்பனைகளை பெண்பனைகளாக மாற்றினானோ?
தேவாரப் பாடல்களைப் பார்த்து சொல்லமைதி வழுவமைதியோடு தனது பந்தத்தில் எழுதிவைத்துக் கொண்டனர் உங்கள் பேயாழ்வார்கள்.அதனாலன்றோ அதனை நாயளவிற்குக் கூட உங்கள் வடகலை வைணவர் மதிக்கவில்லை
எங்கள் சம்பந்தப் பெருமானின் கால் தூசிக்கும் உங்கள் பேயாழ்வார்கள் நிகராகமாட்டார்கள்.
ReplyDeleteஉங்கள் பஞ்சராத்திரச் சுவடியிலும் கூரேசவிசயத்திலும் கண்டதையும் எழுதிவைத்து
அவைதிகத்தைப் பரப்ப முயற்சிப்பது கலிகால தோஷமே அன்றி வேறல்ல.
நீ செத்த பிறகு உனது உயிர் கண்டிப்பாக நரகத்தை அடையும் அங்கு உனது பூர்வாச்சாரியார்களான இராமானுசன்,கூரத்தாழ்வான்,தாதாசாரி, போன்றவர்கள் நரகத்தை அனுபவித்துக் கொண்டிருப்பர், அவர்களோடு சேர்ந்து நீயும் அனுபவித்தாலன்றி நீ செய்த தூஷணை நீங்காது.
உங்கள் மங்கைஆழ்வான் சமணர்களை வென்று வைணவத்தை நிலைநாட்டினானோ? இல்லை ஆண்பனைகளை பெண்பனைகளாக மாற்றினானோ?
தேவாரப் பாடல்களைப் பார்த்து சொல்லமைதி வழுவமைதியோடு தனது பந்தத்தில் எழுதிவைத்துக் கொண்டனர் உங்கள் பேயாழ்வார்கள்.அதனாலன்றோ அதனை நாயளவிற்குக் கூட உங்கள் வடகலை வைணவர் மதிக்கவில்லை?
வைணவம் பல அவமானங்களை சந்தித்து இருக்கிறது
ReplyDeleteஅடி அறியாத விஷ்ணுவை பரமெனக் கொண்டாடும் மதியிலார் பேச்சை ஒரு பொருட்டாக மதியார் அறிவுடையோர்
ReplyDeleteஅந்தப் பிள்ளைப் பெருமாள் என்னும் மூடசிகாமணி
ReplyDelete"செங்கையால் இரந்தவன் கபாலமார் அகற்றினார்" என்றான்
அயனது கபாலத்தை ஏந்திய சிவனுக்கு பிரம்மஹத்தி ஏற்பட்டது என்றாய் ! பிரமன் தலையரிந்த பின்னும் சாகாமல் இருக்க சிவனார் க்கு ஹத்தி வந்தது எங்ஙனம்??