Monday, October 29, 2018

ப்ரஹ்மஜ்ஞாநி ஜிஜ்ஞாஸு ஸம்வாதம்

ப்ரஹ்மஜ்ஞானி ஜிஜ்ஞாஸு ஸம்வாதம்.

||ஸ்ரீமதே இராமாநுஜாய நம||

"சர்வம் விஷ்ணு மயம் ஜகத்"

ஜிஜ்ஞாஸு:- கஸ்த்வம்?-- நீர் யார்?
ஞானி:- தத்வவித,ஸ்மி-சித், அசித்,ஈச்வரன் என்னும் மூன்று தத்துவங்களையும் தெளிவாக அறிந்தவன் யான்.

ஜிஜ்ஞாஸு:- வஸ்து பரமம் கிம் தர்ஹி? -- அப்படியாகில் பரதத்துவமாய் -- மேலான உண்மையாய் -- இருப்பது எது?

ஞானி:- விஷ்ணு:- விஷ்ணுவே பரதத்துவமாவான்.

ஜிஜ்ஞாஸு:- கதம்? -- விஷ்ணுவே பரதத்துவம் என்று நீர் சொல்லுவது எப்படி பொருந்தும்?

ஞானி:- தத்வேதம்பர தைத்திரீயகமுக த்ரய்யந்த ஸந்தர்ஸநாத் -- பரதத்துவத்தை நிர்ணயிப்பதற்காகவே வந்த தைத்திரீயக நாராயணாநுவாகம், நாராயணோபநிஷத், மஹோபநிஷத், புருஷஸூக்தம், விதிசிவாதிகளுக்குப் பிறப்பைச் சொல்லும் பற்பல வேதவாக்கியங் கள், ந்ருஸிம்ஹதாபிந்யுபநிஷத், தசோபநிஷத்துக்கள் முதலான பற்பல வேதாந்த பாகங்களிலே யுள்ளவையான.....;

"நாராயண பரம்ப்ரஹ்ம தத்த்வம் நாராயண: பர:| நாராயணபரோ ஜ்யோதி: ஆத்மா நாராயண: பர|| யச்ச கிஞ்சித் ஐகத்யஸ்மிந் த்ருஸ்யதே ஸ்ரூயதேபி வா| அந்ததர் பஹிஸ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித:||

"நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே| நாராயணாத் ருத்ரோ ஜாயதே"

"ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேஸாந:... தத்ர ப்ரஹ்மா சதுர்முகோஜாயத ...லலாடாத் தர்யக்ஷ: ஸூலபாணி: புருஷோஜாயத"

"லலாடாத் க்ரோதஜோ ருத்ரோ ஜாயதே"

"தாதா விதாதா கர்த்தா விகர்த்தா திவ்யோ தேவ ஏக ஏவ நாராயண ...உத்பவஸ் ஸம்பவோ திவ்யோ தேவ ஏக நாராயண:, மாதா பிதா ப்ராதாநிவாஸ: ஸரணம் ஸுஹ்ருத் கதிர் நாராயண:"  

"ஸஹஸ் ஸீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத்"

"புருஷ ஏவேதம் ஸர்வம்
உதாம்ருதத்வஸ்யேஸாந:"  

"தஸ்மாத் விராடஜாயத"   

"புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம்"

"ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மீஸ்ச பத்ந்யௌ"

"விஸ்வம் நாராயணம்....பரமம் ப்ரபும் விஸ்வத: பரமம் நித்யம் விஸ்வம் நாராயணம் ஹரிம் | பதிம் விஸ்வஸ்யாத்மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸிவ மச்யுதம் நாராயணம் மஹாஜ்ஞேயம் விஸ்வாத்மாநம் பராயணம்"

"ஸ ப்ரஹ்மா ஸ ஸிவஸ் ஸேந்த்ர:"

"பரம் ப்ரஹ்ம புருஷம்"

"ப்ரஹ்மா தேவாநாம் ப்ரதமஸ் ஸம்பபூவ"

"புருஷம் ப்ரஹ்ம யோநிம்"

"யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்"

"தேவத்ரா க்ஷத்ராணி இந்த்ரோ வருணஸ் ஸோமோ ருத்ர: பர்ஜந்யோ யமோ ம்ருத்யூரீஸாந இதி"

"ஸதஸீர்ஷா ருத்ரஸ்ஸமபவத்"

"ப்ரஜாபதிர் வை ப்ரஜாகாமஸ் தபோதப்யத | சமஸமகரோத்.... தஸ்மிந்ரேதஸ் ஸமஸிஞ்சத்| தத உததிஷ்டத் ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத்| ஸ ஏஷோஷ்டநாமா அஷ்டதா விஹிதோ மஹாேதேவ:"

"பூதாநாம் ச ப்ரஜாபதிஸ் ஸம்பவத்ஸராய தீக்ஷித: உஷ: பத்நீ| பூதாநாம் பதிஸ் ஸம்வத்ஸர உஷஸி ரேதோஸிஞ்சத் | ஸம்வத்ஸரே குமாரோஜாயத | ஸோரோதீத் | தம் ப்ரஜாபதிரப்ரவீத் | குமார கிம் ரோதிஷி | யச்ச்ரமாத் தபஸோதி ஜாதோஸீதி | ஸோப்ரவீத் | அநபஹதபாப்மா வாஹம் அநாஹிதநாமா | நாம மே தேஹி பாப்மநோ அபஹத்யை | தம் புந: ப்ரஜாபதிரப்ரவீத் | ருத்ரோஸீதி||"

"யதோ ஜஜ்ஞே உக்ரஸ் த்வேஷ ந்ரும்ண:"

"ஸ ப்ரஜாபதிரேக: புஷ்கரபர்ணே ஸம்பவத்"

"தத் விஷ்ணோ: பரமம் பதம்"

"புருஷாந்ந பரம் கிஞ்சித்"

"விஷ்வரூபம் ஹரிணம் ஜாதவேதஸம் பராயணம் ஜ்யோதிேரேகம் தபந்தம்"

"பராத்பரம் புரிஸயம் புருஷமீக்ஷதே"

"திவி திஷ்டத்யேகஸ் தேநேதம் பூர்ணம் புருஷேண"

"புருஷோ மநோமய:.... கேஸாந்தோ விவர்த்தே"

"அநந்தம் ப்ரஹ்ம"

"விஷ்ணுக்ராந்தே வஸுந்தரா"

"உத்த்ருதாஸி வராஹேண க்ருஷ்ணேந"

"ஹிரண்யகர்ப்பம் பஸ்யத ஜாயமாநம்"

"உத்திஷ்ட புருஷ ஹரீ லோஹிதபிங்களாக்ஷி"

"அம் பஸ்யபாரே"

"யமந்தஸ் ஸமுதரே கவயோ வயந்தி"

"ய ஏஷோந்தராதித்யே ஹிரண்மய: புருஷோ த்ருஷ்யேதே....தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவமக்ஷிணீ"

"க்ருஷ்ணாய தேவகீபுத்ராய"

"ய ஏஷோக்ஷிணி புருஷோ த்ருஸ்யதே....ஏஷ உ ஏவ வாமநீ .:"

"ஆத்மைவேதமக்ர ஆஸீத் புருஷவித:"

"ஸ யத் பூர்வோஸ்மாத் ஸர்வஸ்மாத் ஸர்வாந் பாப்மந ஔஷத் தஸ்மாத் புருஷ:"

"புருஷோவ அக்ஷிதி:"

"அயம் வை ஹரய:

"வாமேக்ஷிணி புருஷரூபம் ஏஷாஸ்ய பத்நீ விராட்"

"விராடஸி ப்ருஹதீ ஸ்ரீரஸி இந்த்ரபத்நீ தர்மபத்நீ"

"ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் தத ஏதே வ்யஜாயந்த் | விஸ்வே ஹிரண்யகர்ப்போக்நிர் வருணவிஷ்ணுருத்ரேந்த்ரா: "

"அஷ்டபாதம் ஸுசிம் ஹம்ஸம் த்ரி ஸூத்ரமணுமவ்யயம்"

"த்யாநக்ரியாப்யாம் பகவாந் புங்க்தே"

"புருஷம் நிர்க்குணம் ஸாங்க்யம்" * முதலான நூற்றுக்கணக்கான வேதாந்த வாக்கியங்களிலே நாராயணன் ஒருவனே பிரமன் உருத்திரன் முதலிய அனைவருக்கும் காரணணமாயிருப்பவன் என்று காணப்படுவதால்தான் விஷ்ணுவே பரதத்துவம் என்று நான் கூறினேன்.

ஜிஜ்ஞாஸு:- அந்யாஸ் தர்ஹி கிர: கதம் -- "ஸர்வோ வை ருத்ர:" [எல்லாம் ருத்ரனே) என்றாப் போலே சிவனுக்கு பெருமையைச் சொல்லும் மற்ற வாக்கியங்கள் என்னாவது?

ஞானி:- குணவஸாத் -- வ்யாபகத்வம் முதலிய பரமாத்ம குணத்தில் ஒரு சிறு பகுதி ருத்ராதி களிடத்திலும் காணப்படுவதால் அவ்வாக்கியங்கள் பொருளுடைய வையாகின்றன. "தத்ர பூஜ்யபதார்த் தோக்தி பரிபாஷாஸமந்வித: ஸப்தோயம் நோபசாரேண அந்யத்ர ஹ்யுபசாரத:" [பூஜ்யபதார்த்தத்தைச் சொல்லும் வழக்குடன் கூடிய இந்த பகவச்சப்தம் அந்த பகவத் விஷயத்திலேயே ஔபசாரிகமல் லாமலிருக்கிறது. மற்றவிடங்களில் உபசாரமாகவே பிரயோகிக்கப்படு கிறது.] என்றாப்போலே வ்யாபகத் வாதி குணலேஸயோகத்தாலே "ஆபோ வா இதம் ஸர்வம்" [இவையெல்லாம் ஜலமே] என்றதுபோன்ற பிரயோகங்களும் வேதத்தில் காண்பதுபோலே "ஸர்வோ வை ருத்ர:" முதலிய பிரயோகங்களையும் நிர்வஹித்து விடலாம்.

ஜிஜ்ஞாஸு:- அத்ராஹ ருத்ர: கதம் --- நானே ஆதிகாலததிலிருந்த அருமறைப் பொருள் என்று ருத்ரன் உரைத்தது எப்படி ஒட்டும்? அதர்வசிரஸ் என்னும் உபனிஷத்திலே "தேவா ஹ வை ஸ்வர்க்கம் லோகமகமந் தே தேவா ருத்ரமப்ருச்சந் கோ பவாநிதி ஸோப்ர வீத் அஹமேக: ப்ரதமமாஸம் வர்த்தாமி ச பவிஷ்யாமி ச நாந்ய: கஸ்சிந்மத்தோ வ்யதிரிக்த இதி ஸோந்தராதந்தரம் ப்ராவிஸத் திஸஸ்சாந்தரம் ப்ராவிஸத் ஸோஹம் நித்யாநித்ய:..." [தேவர்கள் ஸ்வர்க்கலோகத்திற்குச் சென்றனர். அவர்கள் "தாங்கள் யார்" என்று ருத்ரனைக் கேட்டனர். அவர் பின்வருமாறு பதிலுரைத்தார்:-- "நான் ஒருவனே முதலில் இருந்தேன். இப்போது இருக்கிறேன். இனியும் இருப்பேன். என்னைக்காட்டிலும் வேறானவன் ஒருவனுமில்லை." என்று அவர் ஸூக்ஷ்மத்தைக்காட்டிலும் ஸூக்ஷ்மத்தில் பிரவேசித்தார். திக்குகளினுள்ளிருக்கும் வஸ்துவில் பிரவேசித்தார். "அப்படிப்பட்ட நான் நித்யாநித்ய வஸ்துக்களாயிருக்கிறேன்"] என்று தொடங்கி சிவன் தானே ஸர்வகாரணன் என்றும் ஸர்வாந் தர்யாமியென்றும் உரைத்தது விஷ்ணுவே பரதத்துவம் என்றுரை க்கும் உம்முடைய பக்ஷத்திலே எப்படி ஒட்டும்?

ஞானி:- தத்த்ருஷ்ட்யா --- தனக்கு அந்தர்யாமியாயிருக்கும் பரமாத் மாவை நினைத்து சிவன் அப்படிப் பேசியிருக்கிறாராகையாலே விரோதமில்லை. பரமாத்மவிஷய மான பாவநாப்ரகர்ஷத்தாலே (நினைவின் முதிர்ச்சியாலே) அப்படிப் பேசுவதாகவும் கொள்ளலாம் இப்படிப் பேசினார் பலர் உளர். "தத்தைதத் பஸ்யந் ரிஷிர் வாமதேவ: ப்ரதிபேதே அஹம் மநுரபவம் ஸூர்யஸ்ச" [பரமாத்மாவின் ஸர்வாத்மபாவத்தை அறிந்த வாமதேவ ரிஷியானவர், நானே மனுவாகவும் ஸூர்மனாகவும் ஆகிறேன் என்றுரைத்தார்.] என்கிற படியே வேதத்திலும் வாமதேவர் என்னும் ரிஷியானவர் பரமாத்மாவின் ஸர்வாத்மபாவத்தைத் தன்னிட முள்ளதாகப் பேசினார் என்பது ப்ரஸித்தம். இதையே "ஸாஸ்த்ரத்ருஷ்ட்யா தூபதேஸோ வாமதேவவத்" [வாமதேவரைப் போலே சாஸ்த்ரத்ருஷ்டியினாலே இங்கு உபதேசம் செய்யப்படுகிறது.] என்று ஸூத்ர காரரும் ஸித்தாந்தம் செய்தார். இந்திரனும் "மாமுபாஸ்ஸ்வ" [என்னை --- (அதாவது:-- என்னை சரீரமாகக் கொண்ட பரமாத்மாவை) - உபாஸிப்பாயாக] என்றான். "மத்தஸ் ஸர்வமஹம் ஸர்வம்" [என்னிடமிருந்து எல்லா முண்டாகிறது. நானே உலகெல்லாம்.] என்றான் ப்ரஹ்லாதன். திருவாய்ப்பாடியில் பெண்களும் பாவநா ப்ரகர்ஷத்தாலே தங்களை க்ருஷ்ணனாக அனுகரித்தார்கள். "கடல் ஞாலம் செய்தேனும் யானேயென்னும்" என்றார் ஆழ்வார். ப்ரஹ்லாதனுக்கும், கோபிகளுக்கும்,நம்மாழ்வாருக்கும், வாமதேவரிஷிக்கும்,இந்திரனுக் கும் மேலே கண்ட வாக்கியங்களி லிருந்து பரமாத்மத்வமும் ஸர்வ காரணத்வமும் உண்டாகில், சிவனுக்கும் இந்த வாக்கியத்தி லிருந்து பரமாத்மத்வமும் காரணத் வமும் ஏற்படலாம். "ஸோந்தராதந்தரம் ப்ராவிஸத்" என்னும் வாக்கியத்தினால் வேதமே, இங்கு ருத்ரனின் பேச்சு பரமாத்மத்ருஷ்டியினாலே ஏற்பட்டது என்பதை விளக்குகிறது. ஆகையாலே அதர்வசிரஸ்ஸி லுள்ள ருத்ரவாக்யத்தாலும் ருத்ர பரத்வம் ஸித்திக்க வழியில்லை.

ஜிஜ்ஞாஸு:- கதமுத்பவதி ? -- விஷ்ணுவுக்குப் பிறப்பைச் சொல்லும் வாக்கியம் விஷ்ணு பரத்வத்துடன் எப்படி ஒட்டும்.? அதர்வஸிகை என்னும் உபநிஷத்திலே "த்யாயீதேஸாநம் ப்ரத்யாயிதவ்யம் | ஸர்வ மிதம் ப்ரஹ்மவிஷ்ணு ருத்ரேந்த்ராஸ் தே ஸர்வே ஸம்பரஸூயந்தே ஸர்வாணி சேந்த்ரியாணி ஸஹ பூதை:| ந காரணம் காரணாநாம் தாதாத்யதா" [தியானிக்கத்தகுந்த வனான ஈசானனை தியானிக்க வேண்டும். இந்திரியங்களும் பஞ்ச பூதங்களும் ப்ரஹ்மவிஷ்ணு ருத்ரே ந்திரர்களும் ஆகிய இவையெல்லாம் பிறப்புடையவை யாகின்றன. தாதாவாகிற பிரமனும், த்யாதா எனப்பட்ட ருத்ர னும் காரணபூதராயிருந்த போதிலும் காரணகாரணரல்லர்.] என்று விஷ்ணுவுக்கு ப்ரஹ்மருத் ரேந்தர பூதேந்த்ரியங்களோடு கூடப் பிறப்பைச் சொல்லியிருப்பது எப்படி பொருந்தும்?

ஞானி:- அவதரதி -- விஷ்ணுவுக்கு ச்சொல்லப்படும் பிறப்பு அவதார ரூபமாயிருக்கையால் பொருந்தும். ஈஸான பரமாத்மஸப்தவாச்யனான பரமபுருஷனை தியானிக்க வேண்டும் என்னும் விதிவாக்கிய த்தில் சொல்லப்பட்ட அர்த்தம் பொருத்தமுள்ளதே என்பதை இதர வேத வாக்கியங்களில் ஸுப்ரஸித்தமான சில அர்த்தங்ளைச்சொல்லி நிரூபிப்ப தற்காகத் தோன்றியது "ஸர்வமிதம் ப்ரஹ்மவிஷ்ணுருத்ரேந்த்ராஸ் தே ஸர்வே ஸம்ப்ரஸூயந்தே" என்னும் அர்த்தவாதவாக்கியம். ஆகையாலே இவ்வேதவாக்கியத் தை மற்ற வேதவாக்கியங்களைத் துணைகொண்டே பொருள் கொள்ள வேண்டும். அப்படிப் பார்க்கும்போது, "நாராணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே" முதலான வாக்கி யங்களில் ப்ரஹ்மருத்ராதிகளுக்கு நாராயணனிடமிருந்து பிறவியும், தாழ்ச்சியும், "அஜாயமாநோ பஹுதா விஜாயதே" [பிறப்பற்ற வனாகயிருந்தும் பலபடியாகப் பிறக்கிறான் பரமபுருஷன்] முதலான வாக்கியங்களிலே புருஷோத்தமனுக்கு அவதார ரூபமானதேயாக வேண்டும். ஆகையால், "ப்ரஹ்மருத்ராதிகள் தாழ்வான பிறப்பை உடையவர்க ளாகையாலே உபாஸிக்கத்தக்க வர்களல்லர்; பரமாத்மா விஷ்ணு வாகிற அவதாரரூபமான பிறப்பை யடைந்து ஸுலபனாயிருக்கிறா னாகையாலே உபாஸிக்கத்தகுந்த வனாகிறான்" என்பதே இவ்வாக்கி யத்தின் திரண்ட பொருளாகும். "ந காரணம் காரணாநாம் தாதா த்யாதா" என்னும் அடுத்த வாக்கிய த்தில் ப்ரஹ்மருத்ரர்கள் இருவரை மட்டும் எடுத்துக் காரணகாரணர் களல்லர் என்று சொல்லியி ருப்பதும் இவ்வர்த்தத்தையே வலியுறுத்துகின்றது.

ஜிஜ்ஞாஸு:- அந்யத் கதம்:- சிவருத்ராதி ஸப்தங்களால் சொல்லப்படுபவனே பரமாத்மாவென்றும், காரணபுருஷ னென்றும் வேதத்திலே பலவிடங் களில் ஓதியிருப்பதை எப்படி நிர்வஹிப்பது.? "ஸிவ ஏகோ த்யேய: ஸங்கரஸ் ஸர்வமந்யத் பரித்யஜய" "ஸர்வைஸ்வர்ய ஸம்பந்ந: ஸர்வேஸ்வர: ஸம்புராகாஸமத்யே த்யேய:" "ஏகோஹி ருத்ரோ ந த்விதீயாய தஸ்து:" "விஸ்வாதிகோ ருத்ரோ மஹர்ஷி: ஹிரண்யகர்ப்பம் ஜநயாமாஸ" "தஸ்மாத் ஸர்வகத: ஸிவ:" மாயிநம் து மஹேஸ்வரம்" "ஜ்ஞாத்வா ஸிவம் ஸாந்திமத்யந்தமேதி" "ஸிவம் ஸர்வபூதேஷு கூடம்" "ஸிவ ஏவ கேவல:" "ஈஸஸ் ஸர்வாதிபத்பம் குருதே" "பாவாபாவகரம் ஸிவம்" முதலான வாக்கியங்களில் பரமாத்மாவுக்கேயுள்ள தர்மங்கள் சிவனிடமுள்ளதாகச் சொல்லி யிருப்பது எப்படிப் பொருந்தும்?

ஞானி:- நீயதாம் -- பரமாத்மாக்கள் இருவர் இருக்கமுடியா தாகையாலும், வேதத்தில் படிக்கப்படும் நாரயணாதி நாமங்கள் சிவாதி நாமங்களைக் காட்டிலும் அர்த்தத்திலும் ஸப்தத்தி லும் ப்ரபலமானவை யாகையாலும் இந்த சிவாதி ஸப்தங்கள் நாராயணனைச் சொல்லுவதாகவே கொள்ள வேண்டும். சிற்சிலவிடங்களில் சிவாதிகளைக் குறிப்பதற்காகவே ஏற்பட்டாலும், அர்களுக்கு அந்தர் யாமியான நாராயணபர்யந்தம் பொருள்கொண்டால்தான் ஸர்வ வேத வாக்கியங்களும் பொருந்தி யிருக்கும். ஆகையால் ஒரு விரோதமுமில்லை.

எம்பெருமானார் திருவடிகளே சரணம்!

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.

ஆதாரம்:-[புத்தூர் ஸ்வாமியின் "விஷ்ணு சித்த விஜயம்". என்னும் உன்னத படைப்பிலிருந்து]

No comments:

Post a Comment