Showing posts with label சிவலிங்க வரலாறு. Show all posts
Showing posts with label சிவலிங்க வரலாறு. Show all posts

Saturday, March 3, 2018

சிவலிங்க வரலாறு

சர்வேஸ்வரனான ஸ்ரீமந் நாராயணரை நிந்திப்பதையே குறிக்கோளாகக்கொண்ட சில சைவர்கள் கூறும் பெரும் அபத்தமான புரட்டு கதையொன்று "ஆலயங்களில் எழுந்தருளி இருக்கும் சிவலிங்க மூர்த்தியை யோனிவடிவாய்த் தாங்கி இருப்பவர் திருமால்" என்று இந்த புரட்டுக்கு பதிலடியாக பதிவு அமைகிறது.

"பிருகுகோத மன்முன் பெருஞ்சினங்கொண் டின்பம் பருகுமையீ சன்குறிகள் பாரில்--- அருகிவிழ இட்டசா பத்தினா லிற்றகுறி யன்றோநும் இட்டதெய்வ மாயிருத்த லீங்கு."

என்றும், ஸ்ரீஸர்வேஸ்வரனை வாய்மதம்கொண்டு பேசுகிறவர்கள் அடையும் பயன் இன்னது என்று காட்ட,

"கையிருக்கக் காலிருக்கக் கண்ணிருக்க நக்கனுக்கு மெய்யிருக்க வன்பா விரும்பாதே-- வைதுவிழும் ஆண்குறியைப் பூசித் தழிவதெல்லாம் மாயவனை வீண்குறியாற் பேசும் வினை."

என்று கூறி அவர்கள் கூற்றினை மறுப்பு. 'பிருகுகோதமன்...ஈங்கு' என்ற பாடலின் கருத்து:--- முன்பொரு காலத்தில் சிவன் உமாதேவியோடு கூடி இன்பம் நுகர்ந்து கொண்டிருக்க, அவ்வமயம் பிருகு மகாமுனிவர் அங்குவர, இவர்கள் இருக்கும் நிலைகண்டு கோபங்கொண்டு சாபம்கொடுக்க, அதே சமயம் பூவுலகில் கோதமன் என்ற முனிவரும் இவர்கள் செயலைக் கண்டு சாபமிட, இவ்விருவர் சாபத்தினாலும் அறுந்து விழுந்த குறியன்றோ இங்கு உங்களது இஷ்டதெய்வமாயிருக்கும் சிவபிரான் என்பதாகும்.

'கையிருக்க......வினை' திகம்பரனாகிய சிவனுக்கு கை, கால், கண், உடல் முதலிய அவயவங்கள் இருக்கும்போது அவைகளைக்கண்டு ஆசைகொள்ளாமல், முனிவரிருவரின் சாபத்தினால் அறுந்து விழும் ஆண்குறியை ஆராதித்து அழிவதெல்லாம் மாயவனை வாய்மதம்கொண்டு பேசுவதனால் ஏற்பட்ட தீவினையேயாகும் என்பது இதன் கருத்தாகும். இனி இதன் வரலாறு;

              பிருகுவின் சாபம்

மாமேருவின் பக்கத்தில் விளங்குகின்ற மாதவத்தினர் சபை கூடி பரதத்துவநிரூபணம் செய்த காலத்தில் அங்குள்ள சிலர் தாமத புராணங்கள் பல்வேறுபடியாக மொழிகின்றவற்றைக் கருதி ஒருவருக்கொருவர் சங்கிக்கலாயினர். அவர்கள் தம்மிலும் சிலர் 'ஜகத்காரணவஸ் துவாய் விளங்குகின்றவன் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூவர்க்குள் ஒருவனாகவன்றோ இருத்தல்வேண்டும்: அவன் எவன் ஆராய்வோமாகில். தாமச, ராஜசகுணப் பற்றில்லாது சுத்த சாத்விக இலக்கணமுடையவனே பரனென்று தெளியலாம்' என்றனர்

வேறு சிலர் 'போமின்! இங்ஙனமுரைத்த சுத்த சாத்விக இலக்கணமுடையவன் இன்னவன் என்று ஆராய்ந்து தெளிவோ மென்றாலோ அந்த மூவர்க்குள் எந்த மூர்த்தியேனும் சிறிது கோபம் கொள்வனேல் நம்மைக்கொல்வன் அதன்பின் எவன் மேன்மையாருக்கிலென்? தாழ்மை யாயிருக்கிலென்? இங்ஙனம் நாம் கருதியது அழகான செயலன்று' என்று அச்சமுற்றனர். அப்பொழுது அங்கிருந்த பிருகுமுனிவர் வேதக் குன்று போல் நின்று ஒன்று சொல்லத் தொடங்கினார்.

"மாதவத்தினையுடைய அந்தணாளரே! குற்றமற்ற சுத்த சாத்விக இலக்கணமுடைய ஞான நாயகனான ஸர்வேஸ்வரன், அவன் யாவன் என நிர்ணயிக்கவந்த நம்மிடம் குற்றங் காண மாட்டான். துன்பத்தைத் தருகின்ற தாமச ராஜஸ குணக்கடவுளர் கோபித்தபோது அவர்களுக்கு நாமெளியமோ? அவர்களோடெதிர்த்துச் சபித்தற்கு நமக்கு வலியில்லையோ சொல்லீர்? அந்த சுத்தசாத்விக இலக்கணமுடைய பரதேவதை இன்னானென்று பரிசோதிப் பதற்கு உங்களுடைய பேரருளைக் கொண்ட யான் ஒருவனே சாலும்;" என்று பகர்ந்து, 'முப்புரங்களைத் தீயெழும்படி வென்றனாகிய சிவனுடைய குணத்தை முன்னர் ஆராய்வோம்' என்று பூத கணங் களும் வேதாளங்களும் முடியுடைய அமரரும் கைதொழவிருக்கும் கைலையங்கிரியை அணுகி, மகர தோரணங்களையும் பல சிகரங் களையுமுடைய கோயிலையடை ந்தார். அப்பொழுது நந்திதேவன், 'எங்கள் அகில நாயகருக்கு இப்பொழுது உங்கள் வருகையை அறிவிப்பதற்குச் சந்தர்ப்பமில்லை' என்று தடுத்தனன். பிருகுமுனிவர் ஆங்கு ஏழுநாள் வரை தங்கி யிருந்தனர். இதனையறியாது சிவன் உமையுடன்கூடி, கலவி செய்து கொண்டிருந்தனன்.

அஞ்ஞான்று பிருகுமுனிவர் கோபமுற்று, 'யான் ஏழுநாள் வரை ஈண்டுக் காத்துக்கொண்டிருக்க, தாமத குணத்தினால் என்னை ஸத்கரியாமல் காமவலையுள் கட்டுண்டிருக்கிற உமேசுவரரது குறிகள் அற்று விழக்கடவன' என்று  சபித்துச் சென்றார்.

பின்னர் உமையுடன் கலவியின் பெருங்கடலைக் கடந்து வந்து சிவன் வாயிலையடைய, அங்கிருக்  கின்ற நந்திதேவன் பிருகுமுனிவர் தங்கியிருந்த செய்தியைச் செப்பினன். அதனைக் கேட்ட சிவன் கணநாதனையழைத்து, 'நீ ஈண்டு பிருகுமுனி வரையழைத்து வருவாய்' என்று கட்டளையிட்டனன் கணநாதனும் விரைவிற் சென்றழைக்க, முனிவரர் அதற் குடன்பட்டு மீண்டும்வர, அதனைக் கண்ட சங்கரன், 'முனிவர்க்குற்ற முனிவு மாற அன்பு புலனாதற்குரிய ஓர் சீரிய செயலைச்செய்வோம்' என்று அவரை ஆலிங்கனம் செய்யத் தொடங்கினன். அப்பொழுது முனிவர்,

"சுடலை மேவியும் பேய்களான துர்ச்சங்க மெய்தியுந் தோலெலும் பணிந்
தடலைபூசியுங் காமமோகனத் தவசமுற்று மிங்கசுசியான நீ மடலைமேவு தாமரையயன் றருமைந்தனா மெனுமமதை கொண்டெனைத்
தொடலைநில்லெனப் புவியும் வானமுஞ் சுழல் சுழன்றிடச் சூலபாணியும்"

என்கிறபடி 'என்னைத் தொடவேண்டாம்' என்று சொல்லி யவுடன் சிவன் கோபமுற்றுப் புவியினுள்ளாரும், வானத்தி லுள்ளாரும் அலமரும்படி வாய்துடிப்ப மயிர்க்கூச்செறியக் கொக்கரித்து நெற்றிக்கண்ணை விழித்து முனிவரைத் தகிக்கத் தொடங்கினன். இதனைக் கண்ட முனிவர் தம் பாதத்தின் பெருவிரலிலுள்ள சண்டாக்கினி யால் முக்கண்ணினின்றுந் தோன்றிய அக்கியைச் சங்கரித்து, முன்னிட்ட சாபமன்றி, 'இனி நீ பிராமண்ய தெய்வமாகா தொழிவதோடு நீ அநுபவித்துக் கழிந்தவை எல்லாம் எவர்க்கும் அருகமாகாதொழிந்திடுக' என்றுஞ் சபித்து, நான்முகப்புத்தேளுரையு மிடத்தை அணுகியபோது நான்முகன் மதிப்பாளனாகவிருப்ப தைக்கண்டு, புற்றிலுறையும் பாம்பு போலக் கோபமுற்று இவன் தமக்கு த்தந்தையாயிருப்பதையும் நோக்காது, 'இன்றுமுதல் பூமியிலுள்ளவர்கள் உன்னை ஆலயங்களில் பிரதிஷ்டித்துத் தொழாதிருக்கக் கடவர்கள்' என்று சபித்தனர்.

அதன்பிறகு முனிவர் வைகுந்தத்தையடைந்து சிறந்த இரத்தினங்களால் அமைக்கப் பெற்ற பொற்கோயிலைச் சார்தலும் அங்குள்ள வாயிற்காப்பாளர் வெருவி நின்றனர். பின்னர் முனிவர் தடையறச் சென்று நீலமலைபோல த்திருவனந்தாழ்வான் மீது பிராட்டி மார்களும் பெரியதிருவடி முதலிய நித்யசூரிகளும் கோடிசூர்யப் பிரகாசம்போலப் புடைசூழ அறிது யிலமரும் அச்சுதனைக்கண்டு தம் காலால் உதைத்தனர். இங்ஙனம் செய்த இக்கொடுஞ்செயலை, பக்தவத்ஸலன் தன் திருவுள்ளத்தில் சிறிதுங் கருதாது மக்கள் மெய்தீண்டத் தாயுகப்பது போல மகிழ்ந்து கடிதெழுந்து, 'முனிவரே! இன்று என்பொருட்டாக உமது சிறந்த பாதங்கள் என்னை யுதைத்து நொந்தனவே' என்று அருள்ததும்ப வினவினன். அப்பொழுது முனிவர்செய்ததைக் கூறும் பாடலானது:-----

"சுத்தசாத்திக சொரூப நற்பரஞ்சோதியென்று தாள்தொழுது சென்னியில்
கைத்தலங் குவித்தாழியாய் செகத்காரணன்றனைக் காணவென்று நான் புத்தியின்மையா லிங்கிழைத்திடும் புன்மை நீ பொறுத்தருள்க வென்றுபோய் மெய்த்தவத்து மாமுனிவருக்கெலாம் விண்டுவத்துவென்பது விளம்பினார்"

[சுத்த சாத்விக ஸ்வரூபனாய் பரஞ்சோதியாய் விளங்குகின்றவன் இவனே என்று திருவடியைத் தொழுது, தலையிற் கைகுவித்து ஆழிப்படையுடையாய! ஜகத்காரணவஸ்து எது? என்று ஆராய்ந்து காணுதற்காக யான் புத்தியில்லாமல் ஈண்டுச்செய்த பெரும்பிழையைப் பொறுத்தருள வேண்டும்' என்று பிரார்த்தித்துச் சென்று, தத்துவதரிசியராகிய முனிவரனைவருக்கும் விஷ்ணுவே பரதேவதையாவான் என்றுரைத் தனர்.] இவ் வரலாறு பாகவதம், பத்மம் முதலிய புராணங்களில் காண்பது.

               கௌதமர் விடுசாபம்

பிருகுமுனிவர் கைலையங்கிரியை யணுகி உமையோர்பாகனைச் சாபமிட்ட காலத்தில் கௌதம முனிவர் நீராடி அநுஷ்டானம் முடிப்பதற்காக வைகறைப் பொழுதிற் சென்றனர். அங்கு இந்திரிய வெள்ளருவி யோடக்கண்டு 'இஃதோர் கான் யாறு' என்று மதித்து அதிலிறங்கித் தம் கையால் தீண்டி எடுக்க, அது இந்திரியமாக இருக்கக்கண்டு, 'இங்ஙனம் ஓய்வொழிவின்றிச் சம்போகம் எய்துகின்றவர்களின் குறிகள் இப்பொழுதே புவியில் துணிந்து (அறுந்து) விழக்கடவன' என்று சபித்தனர். இப்பொழுது கவுதமரிட்ட சாபமும் முன் பிருகு முனிவரிட்ட சாபமும் ஒரே காலமாகும். இந்தச் சாபமானது தன்னின் மிக்க ஓர் இறைவனில் லையென்று மதித்துக்கொண்டி ருக்கிற சடாதரனிடத்தில் வந்து சார்ந்தது. இந்தச் சாப காரணந் தனை விலக்குவதற்காக ஆங்குள்ள முனிவர்கள் கூடி, 'கௌதமனை நாம் முனிவது முறையன்று' என்று அவர் ஏகாந்த மாயிருக்கின்ற சூழலையடைந்து, "கௌதமா! புத்தியற்றனை கொல்; புகுகின்ற வீட்டில் நெருப்பை வைப்பது போல நமக்குப் புகலிட மாக இருக்கின்ற பிறையேறு செஞ்சடையோனை சபிப்பது? 'நீ அந்தணர்க்குள்ளாகாது போதி' என்று நின்னை யாம் சபிப்போம்" என்ன, அதற்கு கௌதமர் அச்சமுற்று, அத்தபோதனர்கள் மகிழ்வுற்றுச் சம்மதிக்குமாறு ஒரு மொழி சொல்லத் தொடங்கினார்:--
'முனிவர்களே! அற்றொழிந்த உமேசுவரரது குறிகள் அருச்சனைக் கருகமாமாறு யான் இப்பொழுதே அளவற்ற நூல்களை ச்செய்கின்றேன்' என்றனர். தபோதனர்களும் அதற்குடன் பட்டார்கள். இவ்வாறு கந்தபுராணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இவ் வண்ணமாக இருசமயவிளக்கம் இவ்வரலாறு களைத் தெளிவாக தெரிவிக்கிறது.

இனி இதன் சான்றுகள்:---- "பிருகு மகரிஷி சாபத்தினால் உபயருடைய லிங்கங்களும் அறுந்து காட்டில் திரிந்துகொண்டி ருந்த சிவன், செண்பகப் புஷ்பங்கள் ஆயிரங்களினால் அரியை அர்ச்சித்தான். அதில் ஒரு புட்பம் குறைந்ததென்று தன் மூக்கை அரிந்து அர்ச்சித்தான். ஹரியானவர் உலகத்தில்லாத அந்த பக்தியைப் பார்த்து ப்ரீதியினாலே பார்வதிக்கும் சிவனுக்கும் லிங்கங்களுண்டாகும் படியாகவும், பரஸ்பரம் போதிக்கும் படியாகவும் வரங்கொடுத்தார் என்று, ருத்ர கீதையில் அகஸ்திய சம்ஹிதையில் சிவன் சொல்லி யிருக்கையால் சிவனுடைய லிங்க மறுந்து விழுகையில் விஷ்ணுவானவர் யோணியாய்ப் போய்த் தாங்கினார் என்று சைவர்கள் சொல்லுவதும், அபத்தங்களும் மாச்சரிய வசனங்களுமாய் விட்டன"  என்பது கூரேச விஜயத்தில் கண்ட உண்மை.

அடுத்து இவ்வரலாறு பற்றி, பாகவதம் தசமஸ்கந்தம் 89-வது அத்தியாயத்திலுள்ள ஸம்ஸ்கிருத சுலோகங்களையும் அதன் தமிழ் உரையினையும்; பாத்ம புராணத்தி லுள்ள இவ் வரலாற்றின் ஸம்ஸ்கிருத ச்லோகங்களையும் அதன் தமிழாக்கத்தினையும், ஸ்ரீவைஷ்ணவ சுதர்சனத்தின் வெளியீடான 'ஸாத்விகவிஜய ஸர்வஸ்வம்' என்ற நூலில் விரிவாகக் கண்டு தெளிக.

இனித் தமிழ் நூல்களில் காணும் சான்றுகள்;

"வல்லைவரம் பில்லாத மாயவினை தன்னுன் மயங்கினர் களோடே மதிமயங்கி மேனாள் அல்லை யிறைவனீ யாதியெனப் பேதுற் றலமரு வோர்முன்னை யறப்பய னுண்டாக எல்லை வலயங்க ளெம்முழையென் றந்நா ளெரியோனைத் தீண்டி யெழுவ ரெனநின்ற தொல்லை முதன்முனிவர் சூளுற்ற போதே தொகைநின்ற வையந் துடைத்திலையோ வெந்தாய்"
[கம்பராமாயணம்: சரபங்கர் 31]

என, கம்பர்பெருமான் தம் பரமகருணையால் உலகுக்கு அளித்த இராமாயணத்தில் சரபங்கர் பிறப்பு நீங்கு படலத்தில் 31வது கவியால் இவ்வரலாற்றி னை விளக்குவது காண்க.

"சார்ந்தன னன்ன காலைத் தழல்வண னுமையாள் கொங்கை ஆர்ந்தன னின்பந் துய்க்கு மமைதியென் றறிந்தன் னோர்க்குப் பேர்ந்திரு குறியும் வீழப் பெரிதுரைத் தகல லோடும் ஓர்ந்துமுக் கணன ழைப்ப வொய்யெனப் பெயர்ந்தும் வந்தான்"

"உற்றவிம் மறைவ லோனம் முடன்பிறப் பென்று வெவ்வாய்ப் புற்றர வணிந்த நம்பன் புல்லுவா னுறலுந் தீண்டேல் நிற்றியோ தூய்மை நீத்தா யென்னலு நீடு செந்தீ நெற்றியிற் கண்டி றந்து நீடழல்தோற்றி நின்றான்"

"மாதவ னடுக்கு றாது வளர்கழற் பெருவி ரற்கண் வேதுறு செந்தீ யேவி விருத்தழல் செகுத்து மற்றும் ஓதுநான் மறையோர் போற்று முயர்பிரா மணிய தெய்வம் ஆதனீ யொழிக வென்னா வறைந்தனன் கடுகிச் சென்றான்"
[பாவதம்: பிருகு அத்]
என்று இவ்வரலாற்றினை பாகவதம் பிருகுமுனி சென்ற அத்தியாத்தில், செவ்வைச் சூடுவார் தெளிவுறக் கூறுவது நோக்குக.