சர்வேஸ்வரனான ஸ்ரீமந் நாராயணரை நிந்திப்பதையே குறிக்கோளாகக்கொண்ட சில சைவர்கள் கூறும் பெரும் அபத்தமான புரட்டு கதையொன்று "ஆலயங்களில் எழுந்தருளி இருக்கும் சிவலிங்க மூர்த்தியை யோனிவடிவாய்த் தாங்கி இருப்பவர் திருமால்" என்று இந்த புரட்டுக்கு பதிலடியாக பதிவு அமைகிறது.
"பிருகுகோத மன்முன் பெருஞ்சினங்கொண் டின்பம் பருகுமையீ சன்குறிகள் பாரில்--- அருகிவிழ இட்டசா பத்தினா லிற்றகுறி யன்றோநும் இட்டதெய்வ மாயிருத்த லீங்கு."
என்றும், ஸ்ரீஸர்வேஸ்வரனை வாய்மதம்கொண்டு பேசுகிறவர்கள் அடையும் பயன் இன்னது என்று காட்ட,
"கையிருக்கக் காலிருக்கக் கண்ணிருக்க நக்கனுக்கு மெய்யிருக்க வன்பா விரும்பாதே-- வைதுவிழும் ஆண்குறியைப் பூசித் தழிவதெல்லாம் மாயவனை வீண்குறியாற் பேசும் வினை."
என்று கூறி அவர்கள் கூற்றினை மறுப்பு. 'பிருகுகோதமன்...ஈங்கு' என்ற பாடலின் கருத்து:--- முன்பொரு காலத்தில் சிவன் உமாதேவியோடு கூடி இன்பம் நுகர்ந்து கொண்டிருக்க, அவ்வமயம் பிருகு மகாமுனிவர் அங்குவர, இவர்கள் இருக்கும் நிலைகண்டு கோபங்கொண்டு சாபம்கொடுக்க, அதே சமயம் பூவுலகில் கோதமன் என்ற முனிவரும் இவர்கள் செயலைக் கண்டு சாபமிட, இவ்விருவர் சாபத்தினாலும் அறுந்து விழுந்த குறியன்றோ இங்கு உங்களது இஷ்டதெய்வமாயிருக்கும் சிவபிரான் என்பதாகும்.
'கையிருக்க......வினை' திகம்பரனாகிய சிவனுக்கு கை, கால், கண், உடல் முதலிய அவயவங்கள் இருக்கும்போது அவைகளைக்கண்டு ஆசைகொள்ளாமல், முனிவரிருவரின் சாபத்தினால் அறுந்து விழும் ஆண்குறியை ஆராதித்து அழிவதெல்லாம் மாயவனை வாய்மதம்கொண்டு பேசுவதனால் ஏற்பட்ட தீவினையேயாகும் என்பது இதன் கருத்தாகும். இனி இதன் வரலாறு;
பிருகுவின் சாபம்
மாமேருவின் பக்கத்தில் விளங்குகின்ற மாதவத்தினர் சபை கூடி பரதத்துவநிரூபணம் செய்த காலத்தில் அங்குள்ள சிலர் தாமத புராணங்கள் பல்வேறுபடியாக மொழிகின்றவற்றைக் கருதி ஒருவருக்கொருவர் சங்கிக்கலாயினர். அவர்கள் தம்மிலும் சிலர் 'ஜகத்காரணவஸ் துவாய் விளங்குகின்றவன் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூவர்க்குள் ஒருவனாகவன்றோ இருத்தல்வேண்டும்: அவன் எவன் ஆராய்வோமாகில். தாமச, ராஜசகுணப் பற்றில்லாது சுத்த சாத்விக இலக்கணமுடையவனே பரனென்று தெளியலாம்' என்றனர்
வேறு சிலர் 'போமின்! இங்ஙனமுரைத்த சுத்த சாத்விக இலக்கணமுடையவன் இன்னவன் என்று ஆராய்ந்து தெளிவோ மென்றாலோ அந்த மூவர்க்குள் எந்த மூர்த்தியேனும் சிறிது கோபம் கொள்வனேல் நம்மைக்கொல்வன் அதன்பின் எவன் மேன்மையாருக்கிலென்? தாழ்மை யாயிருக்கிலென்? இங்ஙனம் நாம் கருதியது அழகான செயலன்று' என்று அச்சமுற்றனர். அப்பொழுது அங்கிருந்த பிருகுமுனிவர் வேதக் குன்று போல் நின்று ஒன்று சொல்லத் தொடங்கினார்.
"மாதவத்தினையுடைய அந்தணாளரே! குற்றமற்ற சுத்த சாத்விக இலக்கணமுடைய ஞான நாயகனான ஸர்வேஸ்வரன், அவன் யாவன் என நிர்ணயிக்கவந்த நம்மிடம் குற்றங் காண மாட்டான். துன்பத்தைத் தருகின்ற தாமச ராஜஸ குணக்கடவுளர் கோபித்தபோது அவர்களுக்கு நாமெளியமோ? அவர்களோடெதிர்த்துச் சபித்தற்கு நமக்கு வலியில்லையோ சொல்லீர்? அந்த சுத்தசாத்விக இலக்கணமுடைய பரதேவதை இன்னானென்று பரிசோதிப் பதற்கு உங்களுடைய பேரருளைக் கொண்ட யான் ஒருவனே சாலும்;" என்று பகர்ந்து, 'முப்புரங்களைத் தீயெழும்படி வென்றனாகிய சிவனுடைய குணத்தை முன்னர் ஆராய்வோம்' என்று பூத கணங் களும் வேதாளங்களும் முடியுடைய அமரரும் கைதொழவிருக்கும் கைலையங்கிரியை அணுகி, மகர தோரணங்களையும் பல சிகரங் களையுமுடைய கோயிலையடை ந்தார். அப்பொழுது நந்திதேவன், 'எங்கள் அகில நாயகருக்கு இப்பொழுது உங்கள் வருகையை அறிவிப்பதற்குச் சந்தர்ப்பமில்லை' என்று தடுத்தனன். பிருகுமுனிவர் ஆங்கு ஏழுநாள் வரை தங்கி யிருந்தனர். இதனையறியாது சிவன் உமையுடன்கூடி, கலவி செய்து கொண்டிருந்தனன்.
அஞ்ஞான்று பிருகுமுனிவர் கோபமுற்று, 'யான் ஏழுநாள் வரை ஈண்டுக் காத்துக்கொண்டிருக்க, தாமத குணத்தினால் என்னை ஸத்கரியாமல் காமவலையுள் கட்டுண்டிருக்கிற உமேசுவரரது குறிகள் அற்று விழக்கடவன' என்று சபித்துச் சென்றார்.
பின்னர் உமையுடன் கலவியின் பெருங்கடலைக் கடந்து வந்து சிவன் வாயிலையடைய, அங்கிருக் கின்ற நந்திதேவன் பிருகுமுனிவர் தங்கியிருந்த செய்தியைச் செப்பினன். அதனைக் கேட்ட சிவன் கணநாதனையழைத்து, 'நீ ஈண்டு பிருகுமுனி வரையழைத்து வருவாய்' என்று கட்டளையிட்டனன் கணநாதனும் விரைவிற் சென்றழைக்க, முனிவரர் அதற் குடன்பட்டு மீண்டும்வர, அதனைக் கண்ட சங்கரன், 'முனிவர்க்குற்ற முனிவு மாற அன்பு புலனாதற்குரிய ஓர் சீரிய செயலைச்செய்வோம்' என்று அவரை ஆலிங்கனம் செய்யத் தொடங்கினன். அப்பொழுது முனிவர்,
"சுடலை மேவியும் பேய்களான துர்ச்சங்க மெய்தியுந் தோலெலும் பணிந்
தடலைபூசியுங் காமமோகனத் தவசமுற்று மிங்கசுசியான நீ மடலைமேவு தாமரையயன் றருமைந்தனா மெனுமமதை கொண்டெனைத்
தொடலைநில்லெனப் புவியும் வானமுஞ் சுழல் சுழன்றிடச் சூலபாணியும்"
என்கிறபடி 'என்னைத் தொடவேண்டாம்' என்று சொல்லி யவுடன் சிவன் கோபமுற்றுப் புவியினுள்ளாரும், வானத்தி லுள்ளாரும் அலமரும்படி வாய்துடிப்ப மயிர்க்கூச்செறியக் கொக்கரித்து நெற்றிக்கண்ணை விழித்து முனிவரைத் தகிக்கத் தொடங்கினன். இதனைக் கண்ட முனிவர் தம் பாதத்தின் பெருவிரலிலுள்ள சண்டாக்கினி யால் முக்கண்ணினின்றுந் தோன்றிய அக்கியைச் சங்கரித்து, முன்னிட்ட சாபமன்றி, 'இனி நீ பிராமண்ய தெய்வமாகா தொழிவதோடு நீ அநுபவித்துக் கழிந்தவை எல்லாம் எவர்க்கும் அருகமாகாதொழிந்திடுக' என்றுஞ் சபித்து, நான்முகப்புத்தேளுரையு மிடத்தை அணுகியபோது நான்முகன் மதிப்பாளனாகவிருப்ப தைக்கண்டு, புற்றிலுறையும் பாம்பு போலக் கோபமுற்று இவன் தமக்கு த்தந்தையாயிருப்பதையும் நோக்காது, 'இன்றுமுதல் பூமியிலுள்ளவர்கள் உன்னை ஆலயங்களில் பிரதிஷ்டித்துத் தொழாதிருக்கக் கடவர்கள்' என்று சபித்தனர்.
அதன்பிறகு முனிவர் வைகுந்தத்தையடைந்து சிறந்த இரத்தினங்களால் அமைக்கப் பெற்ற பொற்கோயிலைச் சார்தலும் அங்குள்ள வாயிற்காப்பாளர் வெருவி நின்றனர். பின்னர் முனிவர் தடையறச் சென்று நீலமலைபோல த்திருவனந்தாழ்வான் மீது பிராட்டி மார்களும் பெரியதிருவடி முதலிய நித்யசூரிகளும் கோடிசூர்யப் பிரகாசம்போலப் புடைசூழ அறிது யிலமரும் அச்சுதனைக்கண்டு தம் காலால் உதைத்தனர். இங்ஙனம் செய்த இக்கொடுஞ்செயலை, பக்தவத்ஸலன் தன் திருவுள்ளத்தில் சிறிதுங் கருதாது மக்கள் மெய்தீண்டத் தாயுகப்பது போல மகிழ்ந்து கடிதெழுந்து, 'முனிவரே! இன்று என்பொருட்டாக உமது சிறந்த பாதங்கள் என்னை யுதைத்து நொந்தனவே' என்று அருள்ததும்ப வினவினன். அப்பொழுது முனிவர்செய்ததைக் கூறும் பாடலானது:-----
"சுத்தசாத்திக சொரூப நற்பரஞ்சோதியென்று தாள்தொழுது சென்னியில்
கைத்தலங் குவித்தாழியாய் செகத்காரணன்றனைக் காணவென்று நான் புத்தியின்மையா லிங்கிழைத்திடும் புன்மை நீ பொறுத்தருள்க வென்றுபோய் மெய்த்தவத்து மாமுனிவருக்கெலாம் விண்டுவத்துவென்பது விளம்பினார்"
[சுத்த சாத்விக ஸ்வரூபனாய் பரஞ்சோதியாய் விளங்குகின்றவன் இவனே என்று திருவடியைத் தொழுது, தலையிற் கைகுவித்து ஆழிப்படையுடையாய! ஜகத்காரணவஸ்து எது? என்று ஆராய்ந்து காணுதற்காக யான் புத்தியில்லாமல் ஈண்டுச்செய்த பெரும்பிழையைப் பொறுத்தருள வேண்டும்' என்று பிரார்த்தித்துச் சென்று, தத்துவதரிசியராகிய முனிவரனைவருக்கும் விஷ்ணுவே பரதேவதையாவான் என்றுரைத் தனர்.] இவ் வரலாறு பாகவதம், பத்மம் முதலிய புராணங்களில் காண்பது.
கௌதமர் விடுசாபம்
பிருகுமுனிவர் கைலையங்கிரியை யணுகி உமையோர்பாகனைச் சாபமிட்ட காலத்தில் கௌதம முனிவர் நீராடி அநுஷ்டானம் முடிப்பதற்காக வைகறைப் பொழுதிற் சென்றனர். அங்கு இந்திரிய வெள்ளருவி யோடக்கண்டு 'இஃதோர் கான் யாறு' என்று மதித்து அதிலிறங்கித் தம் கையால் தீண்டி எடுக்க, அது இந்திரியமாக இருக்கக்கண்டு, 'இங்ஙனம் ஓய்வொழிவின்றிச் சம்போகம் எய்துகின்றவர்களின் குறிகள் இப்பொழுதே புவியில் துணிந்து (அறுந்து) விழக்கடவன' என்று சபித்தனர். இப்பொழுது கவுதமரிட்ட சாபமும் முன் பிருகு முனிவரிட்ட சாபமும் ஒரே காலமாகும். இந்தச் சாபமானது தன்னின் மிக்க ஓர் இறைவனில் லையென்று மதித்துக்கொண்டி ருக்கிற சடாதரனிடத்தில் வந்து சார்ந்தது. இந்தச் சாப காரணந் தனை விலக்குவதற்காக ஆங்குள்ள முனிவர்கள் கூடி, 'கௌதமனை நாம் முனிவது முறையன்று' என்று அவர் ஏகாந்த மாயிருக்கின்ற சூழலையடைந்து, "கௌதமா! புத்தியற்றனை கொல்; புகுகின்ற வீட்டில் நெருப்பை வைப்பது போல நமக்குப் புகலிட மாக இருக்கின்ற பிறையேறு செஞ்சடையோனை சபிப்பது? 'நீ அந்தணர்க்குள்ளாகாது போதி' என்று நின்னை யாம் சபிப்போம்" என்ன, அதற்கு கௌதமர் அச்சமுற்று, அத்தபோதனர்கள் மகிழ்வுற்றுச் சம்மதிக்குமாறு ஒரு மொழி சொல்லத் தொடங்கினார்:--
'முனிவர்களே! அற்றொழிந்த உமேசுவரரது குறிகள் அருச்சனைக் கருகமாமாறு யான் இப்பொழுதே அளவற்ற நூல்களை ச்செய்கின்றேன்' என்றனர். தபோதனர்களும் அதற்குடன் பட்டார்கள். இவ்வாறு கந்தபுராணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இவ் வண்ணமாக இருசமயவிளக்கம் இவ்வரலாறு களைத் தெளிவாக தெரிவிக்கிறது.
இனி இதன் சான்றுகள்:---- "பிருகு மகரிஷி சாபத்தினால் உபயருடைய லிங்கங்களும் அறுந்து காட்டில் திரிந்துகொண்டி ருந்த சிவன், செண்பகப் புஷ்பங்கள் ஆயிரங்களினால் அரியை அர்ச்சித்தான். அதில் ஒரு புட்பம் குறைந்ததென்று தன் மூக்கை அரிந்து அர்ச்சித்தான். ஹரியானவர் உலகத்தில்லாத அந்த பக்தியைப் பார்த்து ப்ரீதியினாலே பார்வதிக்கும் சிவனுக்கும் லிங்கங்களுண்டாகும் படியாகவும், பரஸ்பரம் போதிக்கும் படியாகவும் வரங்கொடுத்தார் என்று, ருத்ர கீதையில் அகஸ்திய சம்ஹிதையில் சிவன் சொல்லி யிருக்கையால் சிவனுடைய லிங்க மறுந்து விழுகையில் விஷ்ணுவானவர் யோணியாய்ப் போய்த் தாங்கினார் என்று சைவர்கள் சொல்லுவதும், அபத்தங்களும் மாச்சரிய வசனங்களுமாய் விட்டன" என்பது கூரேச விஜயத்தில் கண்ட உண்மை.
அடுத்து இவ்வரலாறு பற்றி, பாகவதம் தசமஸ்கந்தம் 89-வது அத்தியாயத்திலுள்ள ஸம்ஸ்கிருத சுலோகங்களையும் அதன் தமிழ் உரையினையும்; பாத்ம புராணத்தி லுள்ள இவ் வரலாற்றின் ஸம்ஸ்கிருத ச்லோகங்களையும் அதன் தமிழாக்கத்தினையும், ஸ்ரீவைஷ்ணவ சுதர்சனத்தின் வெளியீடான 'ஸாத்விகவிஜய ஸர்வஸ்வம்' என்ற நூலில் விரிவாகக் கண்டு தெளிக.
இனித் தமிழ் நூல்களில் காணும் சான்றுகள்;
"வல்லைவரம் பில்லாத மாயவினை தன்னுன் மயங்கினர் களோடே மதிமயங்கி மேனாள் அல்லை யிறைவனீ யாதியெனப் பேதுற் றலமரு வோர்முன்னை யறப்பய னுண்டாக எல்லை வலயங்க ளெம்முழையென் றந்நா ளெரியோனைத் தீண்டி யெழுவ ரெனநின்ற தொல்லை முதன்முனிவர் சூளுற்ற போதே தொகைநின்ற வையந் துடைத்திலையோ வெந்தாய்"
[கம்பராமாயணம்: சரபங்கர் 31]
என, கம்பர்பெருமான் தம் பரமகருணையால் உலகுக்கு அளித்த இராமாயணத்தில் சரபங்கர் பிறப்பு நீங்கு படலத்தில் 31வது கவியால் இவ்வரலாற்றி னை விளக்குவது காண்க.
"சார்ந்தன னன்ன காலைத் தழல்வண னுமையாள் கொங்கை ஆர்ந்தன னின்பந் துய்க்கு மமைதியென் றறிந்தன் னோர்க்குப் பேர்ந்திரு குறியும் வீழப் பெரிதுரைத் தகல லோடும் ஓர்ந்துமுக் கணன ழைப்ப வொய்யெனப் பெயர்ந்தும் வந்தான்"
"உற்றவிம் மறைவ லோனம் முடன்பிறப் பென்று வெவ்வாய்ப் புற்றர வணிந்த நம்பன் புல்லுவா னுறலுந் தீண்டேல் நிற்றியோ தூய்மை நீத்தா யென்னலு நீடு செந்தீ நெற்றியிற் கண்டி றந்து நீடழல்தோற்றி நின்றான்"
"மாதவ னடுக்கு றாது வளர்கழற் பெருவி ரற்கண் வேதுறு செந்தீ யேவி விருத்தழல் செகுத்து மற்றும் ஓதுநான் மறையோர் போற்று முயர்பிரா மணிய தெய்வம் ஆதனீ யொழிக வென்னா வறைந்தனன் கடுகிச் சென்றான்"
[பாவதம்: பிருகு அத்]
என்று இவ்வரலாற்றினை பாகவதம் பிருகுமுனி சென்ற அத்தியாத்தில், செவ்வைச் சூடுவார் தெளிவுறக் கூறுவது நோக்குக.
nice
ReplyDeleteஇவர்கள் சொல்வதை உண்மை என நம்ப
Deleteவேண்டாம்
நீ கூறுவதில் பாதி பொய்யானது
ReplyDeleteபாத்மோத்தரம் கருடோத்தரம் முதலியவை வைஷ்ணவர்களால் வஞ்சகமாக இயற்றப்பட்டவை
ReplyDeleteமகாபாரதத்தில் சிவபெருமானுக்கே பரத்துவம் கூறப்பட்டுள்ளது
ReplyDeleteபிருகு முனிவர் விஷ்ணு மூர்த்தியையே சபித்தார். இந்த அவமானத்தை ஏற்றுக்கொள்ள
ReplyDeleteமுடியாத வைஷ்ணவர்கள் பிருகு சிவபெருமானை சபித்தார் என்னும் புளுகுமூட்டையை அவிழ்த்து விடுகின்றனர்.
சிவபெருமானுடையதே இராம நாமம்.இது தசரத புத்திரன் பிறப்பதற்கு முன்னமே சிவபெருமானுக்கு இராம நாமம் ராம ரஹஸ்ய உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது
உங்களால் ஏற்க முடியவிலை ..........
Deleteபொய்யை யார் தான் ஏற்பார்கள்?சைவர்கள் எக்காலமும்
Deleteவிஷ்ணுவை நிந்திகட்டமாட்டார்கள்.ஏனெனில் அவர்கள் புருஷோத்தமர்கள்.எந்த செல்வத்தையும் இழிவுபடுத்தும் நோக்கம் சைவர்களுக்கில்லை.
சிவலிங்க மகிமையை உணராத பாவிகள்
Deleteஇந்த வைஷ்ணவர்கள்.சுருதிப் பொருள் தெரியாத மூடர்கள்.சிவனுக்கு திருமாலைக்காட்டிலும் அதிக கோவில்கள் இருப்பதாலும் அதிக புராணங்களில் சிவபரத்துவம் சொல்லப்பட்டதாலும் யமனையே அழிக்கும் வல்லமையும் யாராலும் வெல்ல இயலாத காம தேவனை
நெற்றிக்கண்ணால் எரித்த திடசித்தத்தை உடையவரும் திருமால் தனது பத்துப் பிறவிகளிலும் அரனை அருச்சித்தலாலும் யாராலும் அடக்க முடியாத ஆலால விஷத்தை கண்டத்தில் அடக்கி பிரம்ம விஷ்ணு முதலான தேவர்களை இரட்சித்ததாலும் சிவனுக்கு சமானமான தெய்வம் உண்டென்று சொல்ல முடியுமோ?
"ஊர்த்தவாய நமஹ:ஊர்த்வ லிங்காய நமஹ:ஹிரண்யாய நமஹ:ஹிரண்ய லிங்காய நமஹ:திவ்யாய நமஹ:திவ்யாய லிங்காய நமஹ:பவாய நமஹ:பவலிங்காய நமஹ:சர்வாய நமஹ:சர்வலிங்காய நமஹ:்சிவாய நமஹ:சிவலிங்காய நமஹ:ஜ்வலாய நமஹ:ஜ்வலலிங்காய நமஹ:ஆத்மாய நமஹ:ஆத்மலிங்காய நமஹ: பரமாய நமஹ பரமலிங்காய நமஹ:எதத்ஸோமஸ்ய ஸுர்யஸ்ய ஸர்வலிங்கம் ஸ்தபாயதி பாணி பவித்ரம் "என்று மகாநாராயண உபநிஷதமே சிவலிங்கத்தை வாயாரத் துதிக்கிறது
Deleteருக்வேத ஸம்ஹிதா 'தவச்ரியே மருதோ மர்ஜயந்தே ருத்ரயத்தே ஜநிம சாரு சித்ரம் பதம்யத் விஷ்ணோ ருபமந்ய தாயிதே ந பாஸி குஹ்யம் நாமகோநாம்' என்றது. தேவர் யாவரும் சிவலிங்காராதனையால் எல்லா ஐசுவரியமுமெய்தினர். இலக்குமியோடு கூடிய விஷ்ணுவும் பரமபதவாழ்வடைந்தன னென்பது அதன் பொருள். இன்னும் சிவலிங்காராதனத்தைப் பகலிங்காராதனமெனக் கொண்டும் அநுசாஸனம் 45-வது அத்தியாயம் 'ஈசுவரர் காரணங்களுக்குங் காரணமென்பதற்கு வேறு நியாயங்களால் ஆவதென்ன? மற்றொருவருடைய லிங்கத்தைத் தேவர்கள் அர்ச்சித்ததாக நாம் கேட்கவில்லையன்றோ? மகேச்வரரைவிட வேறு யாருடைய லிங்கமாவது எல்லாத் தேவர்களாலும் இப்போதாவது முன்னேயாவது பூஜிக்கப்பட்டிருக்கிறது?....ப்ரம்மாவும் விஷ்ணுவும்....யாருடைய லிங்கத்தை எப்போதும் பூஜிக்கிறீரோ அவர் அந்தக் காரணத்தினாலேயே மிகச் சிறந்தவரல்லரோ? தாமரை மலரையாவது சக்கரத்தைய்வாவது வச்சிராயுதத்தையாவது அடையாளமாகக் கொண்டு பிரஜைகள் பிறப்பதில்லை; லிங்கத்தையும் பகத்தையும் அடையாளமாகவுடையவைகளாகப் பிறக்கின்றன. ஆதலால் பிரஜைகள் ஈச்வரருடையவை. பெண்களெல்லாரும் உமாதேவியின் காரண ரூபத்திலிருந்து உண்டாக்கப் பட்டதனால் பகம் அடையாளமாகப் பிறந்திருக்கின்றனர். புருஷர்களனைவரும் சிவனுடைய லிங்கத்தினால் அடையாளம் செய்யப்பட்டிருப்பது பிரத்தியக்ஷமாயிருக்கிறது. சரசரங்களடங்கிய இம்மூவுலகங்களிலும் ஈசுவரரைவிட வேறு காரணம் உளதென்றும் தேவியின் அடையாளம் இல்லையென்றும் சொல்லும்கெடுமதியுள்ள மனிதன் நாஸ்திகனாவான். ஆண்குறியுள்ளவை யனைத்தும் ஈசுவரரென்றும் பெண்குறியுள்ளவை யனைத்தும் உமையென்றும் அறி. சராசரங்களாகிய இவ்வுலகமனைத்தும் இவ்விரண்டு ரூபங்களினாலும் வியாபிக்கப்பட்டது' என்று பிரசங்கித்துச் சிவலிங்க நிந்தகர்வாயில் மண்போடுகிறது. அப்பிரசங்கம் அப்பர்வத்தில் ஸ்ரீகிருஷ்ணர் வாக்காகப் பிரகாசிப்பதும் அறியத்தக்கது. 'புல்லிங்கம் ஸர்வமீசாநம் ஸ்த்ரீலிங்கம் பகவத் யுமா' (ஆண் பாலாரெல்லாம் ஈசான சொரூபம். பெண்பாலாரெல்லாம் பகவதியாகிய உமாசொரூபம்) என்ற ருத்ர ஹ்ருதயத்தின் உபப்பிரும்மணமாக அப்பாரதப் பகுதி விளங்குகிறது. சிவலிங்கம் என்பதற்குச் சிவபிரானது பிரபாவம் என்பதே பொருள்.
Deleteஇந்த அர நிந்தை வைஷ்ணவர்கள் பாஷாண்டர்கள். வேத சிவாகம விரோதிகள்.இந்திரனுக்கு உடம்பெல்லாம் பெண்குறி இருப்பதைப் போல இவர்கள் தங்கள் நெற்றியிலும் மற்ற இடங்களிலும் பெண்குறியாகிய யோனி புண்டரத்தைத் தரிக்கும் மகாபாவிகள்.இவர்களை எவனொருவன் நேரில் கண்டாலும் உடனே ஸ்நானம் செய்வது அவசியம்
Delete"ஊர்த்வாய நமஹ: ஊர்த்வ லிங்காய நமஹ: ஹிரண்யாய நமஹ:ஹிரண்ய லிங்காய நமஹ: திவ்யாய நமஹ:திவ்யலிங்காய நமஹ: பவாய நமஹ: பவலிங்காய நமஹ:சர்வாய நமஹ: சர்வலிங்காய நமஹ: சிவாய நமஹ: சிவலிகங்காய நமஹ:ஜ்வலாய நமஹ: ஜ்வலலிங்காய நமஹ:ஆத்மாய நமஹ: ஆத்மலிங்காய நமஹ:பரமாய நமஹ:பரமலிங்காய நமஹ: எதத்ஸோமஸ்ய
ReplyDeleteஸுர்யஸ்ய ஸர்வலிங்கம் ஸ்தாபயதி பாணி பவித்ரம்"என்று சிவலிங்கத்தை நாராயண உபநிஷதமே வாயாரத் துதிக்கிறது
ருக்வேத ஸம்ஹிதா 'தவச்ரியே மருதோ மர்ஜயந்தே ருத்ரயத்தே ஜநிம சாரு சித்ரம் பதம்யத் விஷ்ணோ ருபமந்ய தாயிதே ந பாஸி குஹ்யம் நாமகோநாம்' என்றது. தேவர் யாவரும் சிவலிங்காராதனையால் எல்லா ஐசுவரியமுமெய்தினர். இலக்குமியோடு கூடிய விஷ்ணுவும் பரமபதவாழ்வடைந்தன னென்பது அதன் பொருள். இன்னும் சிவலிங்காராதனத்தைப் பகலிங்காராதனமெனக் கொண்டும் அநுசாஸனம் 45-வது அத்தியாயம் 'ஈசுவரர் காரணங்களுக்குங் காரணமென்பதற்கு வேறு நியாயங்களால் ஆவதென்ன? மற்றொருவருடைய லிங்கத்தைத் தேவர்கள் அர்ச்சித்ததாக நாம் கேட்கவில்லையன்றோ? மகேச்வரரைவிட வேறு யாருடைய லிங்கமாவது எல்லாத் தேவர்களாலும் இப்போதாவது முன்னேயாவது பூஜிக்கப்பட்டிருக்கிறது?....ப்ரம்மாவும் விஷ்ணுவும்....யாருடைய லிங்கத்தை எப்போதும் பூஜிக்கிறீரோ அவர் அந்தக் காரணத்தினாலேயே மிகச் சிறந்தவரல்லரோ? தாமரை மலரையாவது சக்கரத்தைய்வாவது வச்சிராயுதத்தையாவது அடையாளமாகக் கொண்டு பிரஜைகள் பிறப்பதில்லை; லிங்கத்தையும் பகத்தையும் அடையாளமாகவுடையவைகளாகப் பிறக்கின்றன. ஆதலால் பிரஜைகள் ஈச்வரருடையவை. பெண்களெல்லாரும் உமாதேவியின் காரண ரூபத்திலிருந்து உண்டாக்கப் பட்டதனால் பகம் அடையாளமாகப் பிறந்திருக்கின்றனர். புருஷர்களனைவரும் சிவனுடைய லிங்கத்தினால் அடையாளம் செய்யப்பட்டிருப்பது பிரத்தியக்ஷமாயிருக்கிறது. சரசரங்களடங்கிய இம்மூவுலகங்களிலும் ஈசுவரரைவிட வேறு காரணம் உளதென்றும் தேவியின் அடையாளம் இல்லையென்றும் சொல்லும்கெடுமதியுள்ள மனிதன் நாஸ்திகனாவான். ஆண்குறியுள்ளவை யனைத்தும் ஈசுவரரென்றும் பெண்குறியுள்ளவை யனைத்தும் உமையென்றும் அறி. சராசரங்களாகிய இவ்வுலகமனைத்தும் இவ்விரண்டு ரூபங்களினாலும் வியாபிக்கப்பட்டது' என்று பிரசங்கித்துச் சிவலிங்க நிந்தகர்வாயில் மண்போடுகிறது. அப்பிரசங்கம் அப்பர்வத்தில் ஸ்ரீகிருஷ்ணர் வாக்காகப் பிரகாசிப்பதும் அறியத்தக்கது. 'புல்லிங்கம் ஸர்வமீசாநம் ஸ்த்ரீலிங்கம் பகவத் யுமா' (ஆண் பாலாரெல்லாம் ஈசான சொரூபம். பெண்பாலாரெல்லாம் பகவதியாகிய உமாசொரூபம்) என்ற ருத்ர ஹ்ருதயத்தின் உபப்பிரும்மணமாக அப்பாரதப் பகுதி விளங்குகிறது. சிவலிங்கம் என்பதற்குச் சிவபிரானது பிரபாவம் என்பதே பொருள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHistory of civilization in Ancient India based on Sanskrit Literature by Romesh Chandra Dutt of the Bengal Civil Service and of the Middle Temple, Barrister-at-law; Member of the Artistic society of Bengal; Author of a Bengali Translation of the Rig Veda Samhita and other works.
ReplyDeletePeople’s Edition, Complete in one Volume, Calcutta, Tacker Spink & Co., 1891, Page 664.
Padma purana: - The Uttara Khanda which is probably later than the other portions of the Purana, is intensely Vaishnava in its tone; the nature of Bhakti or faith in Vishnu, the use of the Vaishnava marks on the body, the legends of Vishnu’s incarnations and the construction of images of Vishnu are all explained by Siva to his consort Parvati and they both finish by adoring Vishnu! We are also told that of the Hindu Trinity, Vishnu alone is entitled to respect! There can be no doubt much of this sectarian controversy has been added after the Moslem conquest of India. There is mention, even in the earlier books of this Purana, of mlechchas flourishing in India, while to the last portions of the work Dr. Wilson gives the 15th or 16th century A. D. as the probable date’
(பாத்ம புராணத்தின், உத்தர கண்டமானது அப்புராணத்தின் மற்றைப் பாகங்கள் தோன்றிய நெடுங்காலத்திற்குப் பிறகு பெரும்பாலும் வைஷ்ணவ நடையில் எழுதப்பட்டதாகவே இருக்கிறது. விஷ்ணு பத்தியின் சொரூபமும், வைஷ்ணவ புண்டரதாரணப் பிரயோசனமும், விஷ்ணுவின் அவதார சரித்திரங்களும், விஷ்ணு விக்கிரகங்கள் செய்யும் விதிகளும் சிவனால் தன் தேவியாகிய பார்வதிக்குக் கூறப்பட்டனவென்பதும், அவ்விருவரும் இறுதிக்கண் விஷ்ணுவை வணங்கி நின்றனரென்பதும் வரையப்பட்டுள்ளன. இந்துக்கள் வணங்கும் திருமூர்த்திகளில் விஷ்ணுவே வணக்கத்திற்குரியாரென்றுங் கூறுகிறது. (ஆகையால்) இந்தியாவை முஹம்மதியர் ஜயித்துக் கைக்கொண்ட காலத்திற்குப் பிறகு தான் மதச்சண்டைகள் நடந்ததற்கு அறிகுறியாகிய இவ்விஷயங்களெல்லாம் எழுதப்பட்டனவென்பது சந்தேகமற்ற விஷயம். இந்த உத்தர கண்டத்தின் சில பூர்வ பாகங்களில் இந்தியாவில் மிலேச்சர் விருத்தியடைந்தமையுங் குறிக்கப்பட்டது. உவில்சன் என்னும் பண்டிதரும், இந்த இறுதிப் பாகங்கள் பெரும்பான்மையும் கி.பி. 15-ம், 16-ம் நூற்று ஆண்டுகளில் உண்டாயிருக்கலாமென்று காலவரையறையுங் குறித்தனர் ப-664). ஆகவே பாத்ம உத்தர கண்டமானது மதாபிமானத்தால் நவீனமாக எழுதிச் சேர்க்கப்ட்டதொரு கற்பனைச் சுவடியென்பது தெரிகின்றது. சமய வாராய்ச்சிக்கு அது சிறிதும் பிரமாணம் ஆகாது. அதனைத் தள்ளிவிடுவதே மேல். அம்மதாபிமானிகளாலும், அவரைச் சார்ந்தவராலும் மற்றைப் புராணங்களிலும் அப்படிப் பல அவைதிகங்கள் சேர்க்கப்பட்டிருக்கும், அல்லது உண்மைப் புராண வசனங்கள் அங்கங்கே தம் மதாநுகூலமாகத் திரிவு செய்யப்பட்டிருக்கும். அப்பகுதிகளிளெல்லாம் சைவசமய பண்டிதோத்தமர்கள் கூர்ந்த கவனஞ் செலுத்த வேண்டியது மிகமிக அவசியம்
காலப்புரட்டர் மதப்புரட்டோடு கலகஞ்செயுந் தாலப்புரட்டர்
ReplyDeleteமயில்வாகனேசன் தலஞ் சுருதி நாலையும் புரட்டிப் பரத்துவமென்பர் தந்நாரணனாம் மாலைப் புரட்டும் வைணவப்புன்மதவாதிகளே"
மாயவன் திருவடி என்றும் தந் நெற்றியில் மாட்டுகிறார் பட்டை நாமத்தையே அவ்வாயானார் நெற்றியில் சாத்தும் பட்டை நாமம் ஆர்திருவடி என்பார் குணசீலனே
ReplyDeleteஅவுசாரி வைணவனே! கேட்ட கேள்விக்கு பதில் எங்கே?
ReplyDelete