||ஸ்ரீமதே இராமாநுஜாய நம||
"சர்வம் விஷ்ணு மயம் ஜகத்"
"ஜெய் ஸ்ரீராம்"
சிவப்பிரியர்கள் தங்கள் தெய்வத்தை உயர்த்த வேண்டும் ஸ்ரீமந் நாராயணனையும் அவர் அவதாரங்களையும் சிறுமைப் படுத்த வேண்டும் என்று எண்ணத்தினால் பல விதமான புரட்டுக் கதைகளையும், ஸ்தல புராணங்களையும் இயற்றியுள்ளார்கள் அவைகளில் ஒன்றுதான்"ராமமேஸ்வர ஸ்தல புராணம்" இந்த தாமஸ புராணத்தில் புனைந்துள்ள பாஷாண்டா புரட்டுதான் "ஸ்ரீராமர் லிங்க பூஜை செய்தார்" என்பது.
இந்த புரட்டுக்கதையைப் பார்ப்போம்:
"ஸ்ரீராமபிரான், சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து அவனைக் கொன்றார். ராவணனைக் கொன்ற பாவத்தைப் போக்குவதற்காக, மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார் ஸ்ரீராமர். இதனால், மூலவருக்கு ராமநாத சுவாமி என்றும் தலத்துக்கு ராமேஸ்வரம் என்றும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது இந்த பாஷாண்ட தல புராணம்!"
இது வெறும் புனைப்புக் கதையாகும் வால்மீகி,கம்ப இராமாயணத்தில் இல்லாத விடயமாகும். இந்த புரட்டுக்கு மறுப்பினை பார்ப்போம்;..
முதலில் சிவபிரான் பகவான் ஸ்ரீ ராமரின் சிறந்த பக்தராவார் என்பதை ஆதாரத்துடன் காண்போம்,..
எப்போதும் ராம நாமத்தை உச்சரித்து அதில் இன்பம் காண்பதாக சிவபெருமான் தனது மனைவியிடம் கூறுகிறார்:
"ராம ராமேதி ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ர-நாமபிஸ் துல்யம் ராம-நாம வரானனே"
“தேவி! நான் ராம, ராம, ராம என்று திருநாமங்களை உச்சரித்து அந்த அழகிய ஒலியினால் இன்பமடைகிறேன். இராமரின் இந்த திருநாமம் பகவான் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுக்கு சமமானதாகும்.” (பத்ம புராணம், உத்தர-காண்டம், பிருஹத்-விஷ்ணு-ஸஹஸ்ர-நாம-ஸ்தோத்ரம் 72.335)
"கையில் துளசிமாலை, நெஞ்சில் இராமதத்துவம், சிரசில் கேசவனுடைய ஸ்ரீபாததீர்த்தம், நாவின் நுனியில் தாரக நாம மாகிய இராம மந்திரம், இவைகளைத் தரித்து நிற்க்கும் சிவனை மஹா பாகவதனாக நினைக்கிறேன்" என்ற கருத்துக்கொண்ட,
"ஹஸ்தேSக்ஷமாலம் ஹ்ருதி ராமதத்வம்
ஸ்வமஸ்தகே கேஸவபாத தீர்த்தம்
ஜிஹ்வாக்ரபாகே வரராமமந்த்ரம்
ஸிவம் மஹாபாகவதம் ஸ்மராமி||" என்ற ச்லோகம் இங்கு கருதத் தக்கது.
மற்றும் ஸ்ரீராமபிரான் ஸ்ரீமந் நாராயணன்(விஷ்ணு) என்பதை ராவண வதத்திற்குபின் தேவர்கள் ஸ்ரீராமனை "பவாந் நாராயணோ தேவ: ஸ்ரீமாந் சக்ராயுதோ விபு:" என்றும் சக்கரத்தைத் தரித்த நாராயணனே ஸ்ரீராமபிரான் என்றும் "த்ரயாணாம்த்வம் ஹி லோகாநாம் ஆதி கர்த்தா" எல்லாவுலகுக்கும் அவனே ஆதிகர்த்தா என்றும் துதித்தனர்.
முழுமுதற் கடவுளான விஷ்ணுவின் மிகச்சிறந்த பக்தரான சிவபெருமான் தனது எஜமானரை எண்ணி எப்போதும் தியானத்தில் இருக்கின்றார் என்பதே உண்மை. தனது இருப்பிற்கு மூல காரணமான விஷ்ணுவை தான் எப்போதும் தியானிப்பதாக சிவபெருமானே ஸ்ரீமத் பாகவதத்தில் (5.17.16) கூறியுள்ளார்.
மேலும்;..
காசியில் இறப்பவர்களுக்கு சிவன் மோக்ஷம் கொடுக்கின்றார் என்பதை பெரும்பாலானோர் அறிவர். ஆனால் அவர் எவ்வாறு மோக்ஷம் கொடுக்கின்றார் என்பதை வெகு சிலரே அறிவர். ஒருவர் காசியில் மரணத்தைத் தழுவுவதற்கு சற்று முன்பு, அவரது காதுகளில், சிவபெருமான் "ராம"நாமத்தை ஓதுகிறார். அந்த இராம நாமமே ஒருவருக்கு முக்தியைக் கொடுக்கின்றது (பார்க்க, பத்ம புராணம், பாதாள காண்டம், மதுரா-மஹாத்மியம்), சிவபெருமானின் தனிச் சக்தி அல்ல.
மற்றும்,
முன்னொரு காலத்தில் சிவன் பிரமனின் சிரசை அறுக்க, அச்சிரம் அரனின் கையைவிட்டு அகலாதிருக்க; பிரமஹத்தியால் வந்த வினையைத் தீர்க்கப் பிக்ஷாடராய், பூமி எங்கும் சுற்றித் திரிந்து திருமகள் நாதன் உகந்தறைகின்ற காசி நகரை அணுகியதும், அவ்வரன் கையிலிருந்த கபாலம் கழன்று விழுந்தது. இதைக்கண்டு சிவன், திருமாலை வணங்கி "இறைவா! நீ உகந்துறைகின்ற இத்திருப்பதியை அடைந்ததும் என்னைப்பற்றிய பாதகம் விலகியது. நீ வாழும் பதிக்கே இவ்வளவு மகிமை என்றால் உன் புகழை யாரால் ஓதமுடியும்?" என்று துதித்தார் சிவன். என்று இவ் வரலாறு தொடர்ந்து செல்கிறது நிற்க.
இப்படி ஸ்ரீராம பிரான் சிவபெருமானின் வழிபாட்டுக்குரியவர் என்றும் தனக்கு ஏற்பட்ட பிரம்ம ஹத்தி தோசத்தை போக்கியவர் பகவான் ஸ்ரீஹரியே என்று புலப்படும்.
இனி, ஸ்ரீமத் ராமாயணத்தைப் பார்ப்போம்;
ராவண வதம் முடிந்ததும் ஸ்ரீராமன் அனைவருடன் ஸ்ரீலங்காவிலிருந்து புறப்பட்டது முதல், பரதாழ்வானை சந்தித்தது வரை உள்ள நிகழ்ச்சிகள் குறித்து, ஸ்ரீ ராமாயணத்தினை ஆராய்ந்து பார்த்தால்... (வால்மீகி ராமாயணம் ஸர்க்கம் 125 – 130)
ராவண வதம் முடிந்ததும் ஸ்ரீராமன் சீதை பிராட்டியுடனும், வானர சேனைகளுடனும், விபீஷணனுடனும், புஷ்பக விமானத்தில் புறப்படுகிறார். 14 வருடங்கள் முடிந்தவுடன் வரவில்லை எனில் ஒரு நாள் கூட தாமதமானாலும் தீயில் இறங்கி விடுவேன் என ஸ்ரீ பரதாழ்வான் சபதம் மேற்கொண்டிருப்பதால், புஷ்பக விமானத்தில் புறப்படும் ஸ்ரீராமன், அயோத்தியில் உள்ள பரத்வாஜ ஆஸ்ரமத்திற்கு, வழியில் எங்கும் இறங்காது வந்து, அனுமன் மூலம் பரதனுக்கு தங்கள் வருகையை தெரிவிக்கிறார்.
ஸ்ரீலங்காவிலிருந்து, சீதையுடனும் பரிவாரங்களுடனும் புறப்பட்ட ஸ்ரீராமர் பரதனைக் காக்க நேரே அயோத்தி வந்ததாகத் தான் வால்மீகி மற்றும் கம்பன் என இரண்டு ஆதாரபூர்வமானராமாயணங்களிலும் காணப்படுகிறது. அவர் வேறு எங்கும் இறங்கியதாகவோ, லிங்கபூஜை செய்ததாகவோ, எந்தக் குறிப்பும் இல்லை.
ஒரே பகலில் ஸ்ரீலங்காவிலிருந்து அயோத்தியாவிற்கு புஷ்பக விமானத்தில் வந்து கொண்டிருக்கும் போது ராவணன் சீதையை பிரிந்த பிறகு நடந்த நிகழ்ச்சிகளையும், தான் கடந்து வந்த இடங்களையும் சீதையிடம் சுட்டிக் காட்டிக் கொண்டு வரும் போது...
“அத்ர பூர்வம் மகாதேவ: ப்ரஸாதம் அகரோத் ப்ராபு:” என்கிறார் ஸ்ரீராமர். இதன் பொருள் ஸமுத்திர ராஜன் தன் மீது அணை கட்டிக் கொள்ளச் சொன்ன நிகழ்ச்சியைக் குறிப்பது. அதனை உறுதி செய்யும் விதமாக, சேது தரிசனம் பாபத்தினை போக்கக்கூடியது என்றும் ஸ்ரீ ராமன் கூறுகிறார். இங்கு மகாதேவம் எனப்படுவது கடல் ராஜனை குறிப்பது,. சிவனை குறிப்பதல்ல. மேலும் அப்போது சீதையும் ஸ்ரீராமனுடன் இல்லை. மேலும் லிங்கபூஜைக்கு காரணமாக கூறப்படும் ராவண வதமும் நடைபெறவில்லை.
மேலும்,..போரில் கொல்வது பாபமாகாது, கொல்லப்படுவது வீர ஸ்வர்க்கத்தினை தரும். இது தர்மம். மேலும் சிவனே, ராமனை ராவண வதத்திற்காக நேரில் சென்று துதி செய்கிறார் (ஸர்க்கம் 120- ஸ்லோகம் 10-15) ராமர், ஒருவேளை சிவ பூஜை செய்ய வேண்டி இருந்தால் நேரில் சிவன் வந்த போதே செய்திருக்கலாமே?
பல அவதாரங்களில் பகவான் தர்மத்தினைக்காக்கும் பொருட்டு பல தீயவர்களை வதம் செய்துள்ளார், மேலும் முருகன், சூரனை சம்ஹாரம் செய்துள்ளான். அதனால் முருகன் பிரம்மஹத்தி தோஷத்தினை அடையவில்லை. அப்பொழுதெல்லாம் பகவானுக்கோ, முருகனுக்கோ ஏற்படாத பிரம்மஹத்தி தோஷம், ராவணவதத்தின் போது மட்டும் ஸ்ரீ ராமனுக்கு எப்படி ஏற்படும்?
பிற்காலத்தில் இந்த தவறான பொய் செய்தி ராமர் லிங்க பூஜை செய்ததாக ஸ்தல புராணமாக மாறிவிட்டது.
இவை ஸ்ரீ ராமாயணத்தில் இல்லாத தவறான பொய்யான விஷயங்கள்... மீண்டும் மீண்டும் ஆன்மீக பத்திரிகைகளில், ஆன்மீக பிரசாரகர்களால் செய்யப்படும் இது போன்ற கட்டுக்கதைகள் உண்மையான ஆன்மீக, பக்தி, வளர்ச்சியை கெடுத்துவிடும். பக்தர்கள் விழிப்புடன் இருப்பார்களாக.
"ஜெய் ஸ்ரீராம்"
எம்பெருமானார் திருவடிகளே சரணம்...!
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
இராமபிரான் சிவபூசை செய்தது உண்மையே இதனை எனவும் மறுக்க முடியாது.அவருக்கு இராவணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி வந்ததும் உண்மையே.அந்த இராமன் பஸ்ம ருத்ராஷத்தை அணிபவன் என்பதும் உண்மையே.
ReplyDeleteஇராமயணத்தில் ஏன் இராமர் சிவலிங்க
ReplyDeleteபூசையை சொல்லவில்லை என்றால் இராமனின் பெருமை கூறவந்த இடத்தில் இழிவு கூறலாகாது என்னும் கருத்து பற்றியே ஆகும்
'ராமம்.. பஸ்மோத் தூளித ஸர்வாங்கம்'என்பது ராமரஹஸ்யம்."இராமர் சர்வாங்கங்களிலும் விபூதி தாரணமுடையவர்" என்பது அதன் பொருள்.அதற்கு உபப் பிராமணமாக வான்மீகம் 'த்யாத்வா ரகுபதிம்
ReplyDeleteக்ருத்தம் காலாநலமிவாபரம் பீதக்ருஷ்ணாஜிநதரம் பஸ்மோத் தூளித விகரஹம்' என்று கூறும்.இச்சுலோகம் இப்போதுள்ள சிலபதிப்புகளில் நீக்கப்பட்டுள்ளது.ஆனால் "க்ருதாபிஷேகஸ் ஸரராஜராமஸ் ஸீதாத்விதீயஸ் ஸஹலக்ஷ்மணேந க்ருதாபிஷேகஸ்த் வகராஜ புத்ர்யா விஷ்ணுச்ச பகவாநிவேச" என்பது அதில் பிரசித்தம்."பகவானும் ஈசருமான உருத்திரர் பார்வதியாரோடு ஸ்நானம் பண்ணி
விஷ்ணு தேவருடன் விளங்கினது போல் இராமர் சீதையோடு கோதாவரியில் மூழ்கி இலக்குமணருடன் விளங்கினார்" என்பது அதன் பொருள்.இராமர் நீராடிய பின் திருநீறு அணியாவிட்டால் சிவன் போல் விளங்கியிருக்கமாட்டார்.
"ஸவர்ண வர்ண ஐடாபாரம் ஸாக்ஷாத் ருத்ர மிவாபரம் பஸ்மோத் தூளித ஸர்வாங்கம் த்ருஷ்ட்வாகாம வசம்கதா"என்று அத்யாதம இராமாயணம் "இராமர் விபூதி ருத்ராஷத்தை உடையவர் என்பதும் சங்கரன் போல் ஐடாமுடி மரவுரி தரித்ததாக சொல்லப்பட்டது. எனவே
இராமர் சங்கரனுக்கு அடியவரே என்க.
சேது புராணத்தை பாஷாண்ட தலபுராணம் என
ReplyDeleteநீ அவமதிப்பாயானால் நீங்கள் வணங்கும் விஷ்ணு ஆலயம் அனைத்தும் பாஷாண்டமே என்று சொல்ல வேண்டி வரும்
"ஸாஹி கௌதம வாக்யே நுதிர் நிரீக்ஷ்யா பபூவஹத்ர யாணாமபி லோகா நாம் யாவது ராமஸ்ய தர்சநம் சாபஸ்யாந்த முபாகம் யதேஷாம் தர்சனமாகதா/ராகவௌது: பாதை ஐக்ரஹ துர்முதா" (அந்த அகலியை அந்தக் கௌதமர் வாக்கியத்தால் மூவுலகத்தாராலும் பார்க்கவொண்ணாத உருவம் கொண்டவளாயினாள்.ராமர் தர்சனமானவுடன் சாபநீக்கம் பெற்று ராம லக்ஷ்மி விசுவாமித்திரர் எதிரில் காணப்பட்டாள்.மிகுந்த அன்புடன் இராமரும் இலக்குமணரும் அவளடிகளைத் தொட்டு வணங்கினர்) என்பது வான்மீகம்.அகலியையை வணங்கிய இராமர்
ReplyDeleteசிவபிரானை வணங்கமாட்டார் என்பது
பொருந்தாது
பக்த்யாநம் ரதநோ விஷ்ணோ:ப்ரஸாத மகரோச் சிவ:(பக்தி நிறைந்தவர் விஷ்ணு,பிராஸாதிக்கிறவர் சிவபிரான்)என்பது சரப உபநிஷதம்.அத்ர பூர்வம் மஹாதேவம் ப்ரஸாத மகரோத் பிரபு:''பரதாநம் மஹேந்த்ரேண ப்ரமஹணா வருணேநச மஹாதேவ ப்ரஸாதாச்ச பித்ரா மம ஸமாகம:'என்பன வான்மீகம்.இதன் பொருள்:
ReplyDelete"எனக்கு இவ்விடத்தில் பிரபுவாகிய மகாதேவர் முன்னே பிரசாதம் புரிந்தருளினார்.நான் இந்திரனிடத்தும் பிரமனிடத்தும் வருணனிடத்தும் வரம் பெற்றேன்.மகாதேவருடைய பிரசாதத்தால் என்
பிதாவை தரிசித்தேன்" என்பன முறையே அவற்றின் பொருள்கள்.இவை இராமவாக்கியங்கள்.ராமருக்கு பித்ருதரிசனம் ஏற்பட்டதே சிவகடாக்ஷவிசேஷம் என்பதை
உணரவில்லையா?
சமதக்கினி புத்திரர் பரசுராமன்.தசரதபுத்திரர் இரகுராமர்.வசுதேவ புத்திரர் பலராமர்.முன் பிறந்தவர் பரசுராமர்.இரகுராமர் இடையில் பிறந்தார்.பலராமர் கடைப்பிறவி. பரசுராமர்
ReplyDeleteபிறந்து இராம நாமம் பெற்றபோது இரகுராமர் பிறக்கவில்லை.அப்படி இரகுராம சனனத்துக்கு
முன்பே உலகில் வழங்கி வந்த இராமநாமம் இரகுராமருக்கு சொந்தமாவது எப்படி?
வசுதேவரேனும் இராமநாமம் தாசரதியாகிய இரகுராமருக்கு உரியது என்றா நம்பிக்கைக்கு இட்டார்?அதுவுமில்லை சமதக்கினி போன்றும் தசரதர் போன்றுமே வசுதேவரும் தம்பிள்ளைக்குப் பெயரிட்டார்.
அம்மூன்று தந்தையாரும் சைவர்கள்.'ஹரா,உமா'என்பன சைவ நாமங்கள் அவற்றின் ஈற்றெழுத்தைச் சேர்த்தால் "ராமா" என்பது வரும்.அதனையே
அச்சைவர்கள் தம்பிள்ளைக்கிட்டனர்.அங்ஙனம்
இராமநாமம் சைவமென்பது "சிவோமா ராம
மந்த்ரோயம் " என்ற இராம ரஹஸ்ய உபநிஷத
வாக்கால் விளங்கும்.அதுபற்றி பரசுராமன், பலராமர் ஆகிய இவர்கள் தாரகப் பிரமம் ஆவார்களா? அஃதாகார்.அதுபோலவே இரகுராமரும் தாரகப் பிரமம் ஆகமாட்டார்.
கண்ணன், திருமால் வீபூதிதாரண சிவபக்தர்கள்
ReplyDelete///////மகாபாரதம்
ஆதி பர்வம்,அத்தியாயம் 241 :
“கிருஷ்ணன்…மகாதேவ பூஜைக்காக முப்பத்து நான்கு தினம் இரவும் பகலும் மஹோத்சவம் நடப்பதென்று சொல்லி ...."
வனப் பர்வம்:
i) அத்தியாயம் 20 : “க்ருஷ்ணர் ‘நான் சிவபெருமானை தலையால் வணங்கினேன்’ என்றார் ”
ii) அத்தியாயம் 82 : ‘விஷ்ணு ருத்ரரை ஆதாரித்தார்’
துரோணப் பர்வம் :
i)அத்தியாயம் 81 : ‘ க்ருஷ்ணரும் பார்த்தனும் … ஆசமனஞ் செய்து கைகளை குவித்துக் கொண்டு…. ருத்ரரை நமஸ்கரித்து ‘
ii)அத்தியாயம் 202 :‘நாராயணர் ருத்ரரைக் கண்டு நமஸ்கரித்தார்’ ‘ருத்ரரை புண்டரிகக்ஷர் பக்தியுடன் நமஸ்கரித்து ஸ்தோத்திரம் செய்யலானார்’
கர்ணப் பர்வம் :
i)அத்தியாயம் 21 :
‘அர்ஜுனனும் கேசவரும் பகலில் செய்யவேண்டிய வைதிக
கர்மாநுஷ்டானங்களை முடித்துக் கொண்டு,முறைப்படி பிரபுவான ருத்ரரைப் பூஜித்து’
ii)சாந்திப் பர்வம் ,அத்தியாயம் 110 :
‘இந்திரனும் விஷ்ணுவும் ருத்திரரும் ….பிரம்ம தேவரும்,தேவர்களின் தேவரான எந்த மகேஸ்வரரை ….துதிக்கிறார்களோ
கண்ணன் உபமன்யு முனிவரிடம் சிவதீட்சை பெற்றதாக மகாபாரதம் கூறுகின்றது.
மேலும் சிவகீதை(பத்மபுராணத்தில் உள்ளது)யில் இராமர் அகத்தியரிடம் சிவதீட்சை பெற்று, திருநீறை உடல்முழுதும் பூசி, இராவணனை வெல்வதன்பொருட்டு பசுபதாஸ்திரம் பெறுவதற்காக, பாசுபதவிரதம் இருந்தார் என்கின்றது
////உடையவர் சூர்ண விளக்கம் எனும் வைணவ சுவடி கூறுகிறது, “ஸ்ரீ பெரும்பூதூரில் இவ்வருஷத்திற்கு 870 வருஷமான கலி நாலாயிரத்து நூற்றெட்டுக்கு பிங்கள வருஷம்…திருவவதரித்தருளிய ஸ்ரீ பாஷ்யக்காரர் காலத்திற்கு முன்பு இப்போதுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் பஸ்மாதிதாரணராய் இருந்தார்கள்…அப்படியிருந்த இவ்வைஷ்ணவர்களுக்கு ச்வேத பீத வர்ண புண்டரங்களையும் -நூதனமாக வெளியிட்டு அவைகளை திக்விஜயஞ் செய்வித்து தாபித்தார் கிடாய்..அதற்கு முன் இவர்களுக்கு திருமண்ணேது சிவந்த ஸ்ரீ சூர்ண மேது காண் ” .மேலும்,வடகலைக் குருபரம்பரை கூறுகிறது ,”சகவர்ஷம் ஆயிரத்திருபத்தொன்றான பகுதான்ய வர்ஷம் பங்குனி மாதத்தில் -திரு நாராயணப் பெருமாளைக் கண்டு திருமஞ்சனஞ் செய்வித்துக் கல்யாண ஸரஸின் வட மேற்கில் திருமண்ணையும் கண்டெடுத்துக் கோயில் நகர் முதலியவைகளைத் திருத்தி ” .ஆக,ராமானுஜர் தாண்,சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்,திருமண்ணை அறிமுகப்படுத்தியவர் என்று நமக்கு புலனாகிறது..ஆக,ராமானுஜருக்கு முன் வாழ்ந்த ராமர்,கிருஷ்ணர் எல்லோரும் திருமண்ணையா அணிந்திருப்பார்கள் ??/////
ReplyDeleteஇனி எவனாவது சிவனுக்கு எதிராக எழுதி
ReplyDeleteவெளியிட்டால் அவன் சூத்திரனாவான்
இந்த மதிகெட்ட வைஷ்ணவர்களுக்கு விஷ்ணுவும் அருள் செய்யமாட்டார்
ReplyDeleteஇந்த அர நிந்தை வைஷ்ணவர்கள் பாஷாண்டர்கள். வேத சிவாகம விரோதிகள்.இந்திரனுக்கு உடம்பெல்லாம் பெண்குறி இருப்பதைப் போல இவர்கள் தங்கள் நெற்றியிலும் மற்ற இடங்களிலும் பெண்குறியாகிய யோனி புண்டரத்தைத் தரிக்கும் மகாபாவிகள்.இவர்களை எவனொருவன் நேரில் கண்டாலும் உடனே ஸ்நானம் செய்வது அவசியம்
ReplyDeleteநீங்கள் திருந்த மாட்டீர்கள். நீங்கள் நரகம்செல்வது உறுதி...
Deleteஇவ்வளவு ஆதாரம் காட்டியும் இராமர் சிவபூசை செய்யவில்லை என்று கூறுவாயானால் நீ நிச்சயமாகக் அறிவிலியே என்பதற்கு தடையில்லை
DeleteThis comment has been removed by the author.
Deleteசைவர்களுக்கு நரகமா வைணவர்களுக்கு நரகமா என்பதை நீ செத்த பிறகு தெரிந்து கொள்வாய்
Deleteஇராமானுசன் ஒரு சிவநிந்தகன்.பொய் புரட்டுகளில் கைதேர்ந்தவனாதலால் தான் மரவுரதரித்த அவன் வெள்ளாடையை உடுத்திக்கொண்டு சோழராசனுக்குப் பயந்து 12
ReplyDeleteவருடங்கள் ஓடி தலைமறவு ஆயினான்.
இந்த வைணவமென்னும் சமயம் இராமானுசனால் ஏற்படுத்தப்பட்டது தான்.அவன் காலத்திற்கு சங்கரர் காலத்திற்கு முன்பு வைணவ சமயமில்லை.மற்ற தெய்வங்களோடு விஷ்ணுவையும் சேர்த்து வணங்கினார்கள் அவ்வளவுதான்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteச்சீ வெட்கமாக இல்லை உமக்கு.வடமொழிப் புலமையில் உனக்கு சூனியமா இல்லை கண் தான் குருடா என்பது புரியவில்லை.மஹாதேவம் என்பதற்கு சிவபிரான் என்றே பொருள் கொள்ள வேண்டும்.அதற்கு வருணன் என்று பொருள் கொள்ளலாகாது.இராமபிரானின் குலதெய்வம்
ReplyDeleteசங்கரனே என்பதற்கு "ராமோதாசரதிச் சைவ"
என்ற வான்மீகத்தாலும் "சிவபூஜாரத் சைவ" என்ற ராம ஸகஸ்ரநாமத்தால் வெளி.
சாஸ்திரப்பரட்டு செய்தால் அனைவரும் மயங்கிவிடுவார்களா?
"ஸ்ரீமதோ நீலகண்டஸ்ய க்ருத்யம்ஹி துரதிக்ரமம்' ,அத்ரபூர்வம் மஹாதேவ ப்ரஸாதமகரோத் ப்ரபு'( ஸ்ரீமத் நீலகண்டன் சிறியனாகிய எனக்கருளினான் குற்றமற்ற பிரபு அவனே) என்பது அதன் பொருள்.
இதிலிருந்தே சங்கரனின் அடியவரே இராமர் என்பது விளங்கவில்லையா?
நீ "அத்ரபூர்வம் மஹாதேவ ப்ரஸாதமகரோத்
பிரபு" என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு
"ஸ்ரீமதோ நீலகண்டஸ்ய க்ருத்யம்ஹி துரதிக்ரமம்"என்பதை வஞ்சகமாக மறைத்துக் கொண்டு
பொருள் சொன்னால் அனைவரும் நம்பிவிடுவார்களா? அதிலும் மஹாதேவம் என்பதற்கு சிவபிரானென்றே பொருள்கொள்ள வேண்டும்.வருணன் என்று பொருள்கொண்டால் அதனை விடவும் மடமை வேறுண்டோ?வருணன் இராமனுக்கு பயந்து சரணடைந்தவன்.அவன் இராமனுக்கு அருளினான் என்பதை அறிவுடைய நல்லோர் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தாதோ?
"தஸ்யாம் ராஜர்ஷ்ய: பண்யஸ்த்கதாதேவர்ஷயா மலா:
ReplyDeleteயமம் வைவஸ்தம் காதப்ரஹ் ஷ்டா:பர்யுபாஸதே யயாதிர் நஹூஷ பூரூர் மாந்தாதா ஸோம கோந்ருக: ராமோதாசரதிச்வை லக்ஷ்மணச்ச ப்ரதர்தந:"என்பது பாரதம் ஸபாபர்வம் 8ஆவது அத்தியாயம் .
அதன் மொழிப்பெயர்ப்பு:
'அந்த யம சபையில் புண்ணியஞ் செய்த மகரிஷிகளும் பரிசுத்தர்களான பிரம்ம ரிஷிகளும் மகிழ்ச்சியுடன் ஸூர்யப் புத்ரனான யமனை ஸேவிக்கின்றனர்.யயாதி,
நகுஷன்,பூரு,மாந்தாதா,
ஸோமகன், நிருகன், தசரத புத்திரர்களான இராம இலக்குமணர்கள் யமலோகத்தில் யமதர்மனைப் பணிந்து ஸேவிக்கின்றனர்
என்று கூறுகிறது.யமதர்மனைப் பணியும் அவதாரபுருஷனான இராமனை யமனைத் தன் காலால்
உதைத்து மார்க்கண்டேய முனிவருக்கு என்றும் 16 வயதுடன் இருக்கும் சிரஞ்சீவித்துவத்தை வழங்கிய சிவபிரானா வணங்குவார்?வெட்கம்!வெட்கம்!
யமனை வணங்கிய இராமன் யமனுக்கும் கீழ் .யமனை யுதைத்து அவன் உயிரை வாங்கிய சிவபிரான் யமனுக்கும் மேல் .
இதனாலும் சிவபிரானின் பரமான்ம இலக்கணம் நன்கு விளங்கும்