சைவர்கள் கூறுவர் 'உலகத்தில் உயர்வாகப் போற்றப்படும் சைவ ஆகமத்தையும், மற்றும் பல நூல்களையும் விரித்து திருவாய்மலர்ந்தருளியவர் பரமசிவக் கடவுளே யன்றோ? அவர் திருவாக்கு பிரமாணமாகாதோ? என்று இதற்கு பதிலாக;.
"மோகனநூற் பல்சமய முன்னியற்றுந் தீயவினை போகநறு நாவலின்கீழ்ப் போந்துமையாள் --- பாகனன்னீர் பம்புசீ ரரங்கற் பணிந்துதவஞ் செய்ததன்றோ சம்புகே சுரப்பேர்த் தலம்".
என்று கூறி.
மங்கை பாகன் ஆகம நூல்கள் என்று பல மோகன நூல்களைச் செய்தார். வேதத்திற்குப் புறம்பான அந்நூல்களைச் செய்த பாவம் தொலைய ஒரு நாவல் மரத்தின்கீழ் இருந்து திருவரங்கனைத் தியானித்தார். அவ்வாறு திருமாலை வணங்கித் தவமிருந்த இடமே ' ஜம்புகேச்வரத் தலமாகும்' என்பது இதன் கருத்து.
இனி இதன் எடுத்துக்காட்டுகள் அடியில் வருமாறு;
சிவன் மோகனநூல் பலவற்றைச் செய்தார் என்பதையும், அதன்வழி நடந்தோர் பாஷண்டர்களாவார் என்பதை பத்ம புராணம்(உத்ர காண்டம், 263ஆம் அத்தியாயத்தில்) கூறுவதைக் காண்க,
பார்வதி தேவி சிவப்பிரானைப் பார்த்து பாஷண்டர்கள் என்பது நாஸ்திகர் என்றீர். அவர்களுடன் பேசவே கூடாதென்று நீர் சென்னீர். அப்பாஷண்டர்களின் லக்ஷணம் என்ன என்று கேட்டாள். அதற்கு சிவப்பிரான் சென்னார்.
நாராயணனைக் காட்டிலும் வேறான ஒரு தேவனைப் பரமாத்மாவாக யார் கூறுகிறார்களோ, அவருக்கு சமமாக ப்ரஹ்மருத்ராதியான பிரம்மா சிவன் போன்ற தேவர்களை யார் கூறுகிறார்களோ, கபாலம், பஸ்மம் என்ற சாம்பல் எலும்பு முதலிய அவைதிகமான என்னும் சாஸ்த்திரத்திற்கு எதிரான அடையாளங்களை யார் தரிக்கிறார்களோ ஸந்யாஸ ஆஸ்ரமத்திற்குத் தகுதியில்லாமலே சடை,மரவுரிகளை யார் தரிக்கிறார்களோ சாஸ்த்திரத்திற்கு எதிரான பல செயல்களை யார் செய்கிறார்களோ அவர்கள் நாஸ்திகர்கள் என்று விரிவாக கூறுகினார்.
இதை கேட்ட பார்வதி இதுவே நாஸ்திகார்கள் லக்ஷணம் எனில் நீர் ஏன் கபாலம்,பஸ்மம்,எலும்பு முதலிய் சாஸ்த்திரத்திற்கு எதிரான அடையாளங்களை ஏன் தாரிக்கிறீர் என்று கேட்க, இதற்கு முக்கண்பிரான் ஒருவருமில்லாத இடத்திற்கு பார்வதியை அழைத்துச்சென்று நீ இதை எவரிடமும் சொல்லாதே என்று ஆணையிட்டு, முற்காலத்தில் நமுசி முதலான அஸூர்கள் வேததர்ம நிஷ்டர்களாய் விஷ்ணு பக்தர்களாய் இருந்தமையாலே வெல்லவரிய பலம் வீரங்களை பெற்றிருந்தனர். அவர்களால் அடக்கப்பெற்ற தேவர்கள் பரமபுருஷரான விஷ்ணுவிடம் முறையிட்டனர்.
விஷ்ணு என்னைப்பார்த்து தேவ த்வேஷிகள் என்னும் விஷ்ணுவை நிந்தனை செய்பவர் சாஸ்த்திரத்திற்கு எதிரானவர்களாகவும் என்னிடம் பக்தியற்றவர்களாகி பலங்குறைந்தவர்கள் ஆவதற்காக நீ நேரேயும் பல அந்தணர்களை ஆவேசித்து நின்றும் பல பாஷண்ட சாஸ்த்திரங்களை அவர்களுக்கு உபதேசிப்பாயாக என்று நியமிக்க இதனால் எனக்குப் பெரும் பாவம் வந்து சேருமே என்று நான் நடுங்க தேவதைகளின் நலத்துக்கும் பாவிகளான அஸூரர்களை அழிவதற்கும் நீ இப்படி செய்தே தீரவேண்டும். ஆயினும் இதற்கு ப்ராயச்சித்தமாக என்னை நெஞ்சில் தியானித்து என்னுடைய தாரக மந்திரத்தை ஜபித்துக் கொண்டேயிருந்தால் உன்னிடம் பாபம் ஒட்டாது என்று விஷ்ணு கூறியதாக சிவன் பார்வதியிடம் கூறினார்.
இதைக் கேட்ட பார்வதி; குற்றமற்ற தேவர் தலைவனே! பகவத்பக்தியற்ற அந்தணர்களாலே சொல்லப் பெற்ற தாமஸ சாஸ்த்திரங்களை வரிசையாகக் கூறுவீராக,
அதற்கு சிவபிரான் தேவியே! தாமஸ சாஸ்த்திரங்களைக் கூறுகிறேன் கேளாய். இந்தத் தாமஸ சாஸ்த்திரங்களை நினைத்தால் கூட அறிவாளிகளுக்கும் பதிதத்தன்மை ஆவான் அதாவது பாவியாக ஆவான்.
முதல்முதலில் பாசுபதம் முதலான சைவாகமங்கள் என்னும் சிவபூஜை, பஸ்மம் பூசுதல் என்னால் நேரே சொல்லப்பட்டன. என்று தொடர்ந்து செல்கிறது நிற்க.
மேலும்; சிவன் மோகன நூல் பலவற்றைச் செய்தார் என்பதை---வராஹபுராணம், ஆதித்தியபுராணம், கூர்மபுராணம், வாமனபுராணம், பிரம்மாண்ட புராணம், முதலிய பல புராணங்களிலும், விஞ்ஞானேச்வரம் பிராயச்சித்த காண்டத்திலும் சொல்லிருப்பதா கவும், இவ்வாறு நடப்பது கலியுக தர்மம் என்றும்,
"நிலமெலாம் விளைவு குறைந்திடுங் கடையர் நீசரே தலைமையாய் நிற்பார் அலகிலா மருந்தும் பலித்திடா அரச னறந்தவிர்ந் தரும்பொருள் வெஃகும் புலமைசேர் மறையோர் நிட்டையை மறந்து புன்றோழி லேபுரிந் திடுவார் வலிமைசொன் மடவார் கணவரைப் பேணார் மைந்தரும் தந்தையை மதியார்".
"உண்டதே யுறுதி மாதரார்க் கலவி யுவகையே முத்தியிவ் வுலகில் கண்டதே காட்சி பரத்தையா ரறிவார் காயமுஞ் சீவனும் வேறோ? வெண்டியே முயலுந் தவவிர தமெலா மேனியை யொறுப்பதே யென்ன எண்டகு முலோகா யதமதத் தவர்கள் இகத்தையே குறித்திசைப் பதுவும்".
என்று கலியுகத்தில் நடக்கப்போகி றதையும் இருசமய விளக்கத்தில் விரிவாகக் காணலாம். இங்கு விரிவுக்கஞ்சி விடுத்தனம்.
மேலும்; இக்கலியுகத்தில் வேதத்திற்கு மாறுபட்ட சிவாகம நூல்களைக் கற்று அதன் வழியொழுகி மாதவனை மறந்து மக்கள் மாக்களாவார்கள்; இது கலியுக தர்மம் என்பதை---
"முதற்பெருந் தேவெனு முகுந்தன் பூசனை அதர்ப்பட வாற்றிடா ரரிய மாமறை விதத்தொடு முரணிய விரியும் ஆகம மதத்தொடு மருவுவர் மாக்க ளென்னவே".
[பாகவதம்: 4132]
என்று பாகவதம் பன்னிரண்டாவது ஸ்கந்தம் கலிதர்மம் உரைத்த அத்தியாயத்தில் கூறுவது காண்க.
இனி சிவபிரான் நாவல் மரத்தடியிலிருந்து தவமியற்றித் தனது பாபங்களைப் போக்கிக் கொண்டதை----
" ஸ்ரீரங்கத்தைச் சுற்றிலுமுள்ள தீர்த்தங்களில், இந்திர தீர்த்தத்திற்கு அக்கிநி மூலையில் 'சம்பு தீர்த்தம்' என்றொரு தீர்த்தம் உண்டு. அந்தத் தீர்த்க் கரையில் சிவன் எப்போதும் வாசமிருப்பான் அது எதனால் என்றால்; 'பிரமதேவ னுடைய ஆணையினால் உலகத்தி லிருக்கப்பட்ட சகல ஜீவராசிகளுக் கும் மயக்கம் உண்டாகும்படி பாஷாண்டமதமும், அந்த மத சித்தாந்தத்திற்குத் தகுந்த பலவித சாஸ்த்திரங்களும் உண்டு பண்ணி சகல ஜனங்களையும் மயங்கச் செய்வித்த தோஷம் தீர வேண்டு மென்று நினைத்து, அந்த மரத்தின் கீழ் வெகுகாலம் இருந்து தபசுசெய்து சிவன் தன் பாபம் நீங்கப்பெற்றான்" என்று ஸ்ரீரங்க மகத்துவத்தில் கூறுவது காண்க.
எனவே, சைவ ஆகம நூல் மோகன நூல் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
அறிவிலிகளே!விஷ்ணு புராணங்களை
ReplyDeleteசைவர்கள் தாமஸம் என நிந்தித்து உண்டா?
வேதங்களே சிவாகமங்களை வந்தித்திருக்க அதற்கு புறம்பாக அதனை மோகன நூல் என்பது சிவநிந்தையே அன்றி வேறல்ல
சரியாக சொன்னீர்கள்..ஞான வேதங்களாகிய சிவாகமங்களை இப்படி தூற்றுவது பொய் என சாதாரண சமய அறிவுடையோருக்கே விளங்கி விடும். விஷ்ணுவை காட்டிலும் ஸ்ரீ சிவபெருமானின் முதன்மையை சிறுவர் சிறுமியர் கூட அறிய முடியும். அரைகுறை அறிவை வைத்து அடுத்தவர்களை, எளியவர்களை ஒடுக்க முயலும் பேர்வழிகளின் பிதற்றலே இது.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபஞ்சராத்திரம் என்ற சொல் வேதங்களில் எங்கும் சொல்லப்படவில்லை. ஆனால் சிவாகமங்களை வேதம் வந்தித்து இருக்கிறது.
ReplyDeleteஅம்ருதநான உபநிஷதம்"ஆகமஸ்யா விரோதேநஊஹ நம் தர்க உச்ய தே"(ஆகமத்திற்கு தர்க்கமில்லாமல் ஊகிப்பதே தர்க்கம் எனப்படும்)என்றும் தேஜோபிந்து உபநிஷதம் "ஸகலாகம கோசர:"(எல்லா ஆகமங்களிலும் விஷயமாயிருப்பவன்
"ஸர்வாகமாந்தார்த்த வியாவிதோஸி"(எல்லா ஆகமங்களின் உட்பொருளென்று சொல்லப்பட்டிருக்கிறது)என்றும் நாரத பரிவ்ராஜகம உபநிடதம்"ஸர்வாகம மய:சிவ"(சருவாகம மன்னு சிவன்)என்றும் ஸர்வாகமாந்தார்த்த விஷேவேத்யம்...சர்வேஸ்வரம்...சிவசாச்யுதம்...போருஹ கர்ப பூருஹம்...சிவம்(எல்லா ஆகமங்களின் அர்த்தங்களாலே விசேடமாய் அறியப்படுபவனும் சர்வேஸ்வரனும் உருத்திரன் விஷ்ணு பிரமன் என்னும் முவரையும் கருப்பத்துள் வைத்தவனாகிய சிவபிரான்) என்றும் அந்தபூர்ண உபநிடதம்,"சிவ:சைவாகஸ்தாநாம்"(சைவாகஸ்தாநானங்களிற் சிவபிரான்)என்றும் கருடத்ர உபநிஷதம்,"ஸர்வ வேதாந்த சித்தாந்த
சாரம்"(சருவவுபநிஷத்துகள் ஆகமங்களின் இவற்றின் சாரம்) என்றும் கூறி அந்த இருபத்தெட்டு சிவாகமங்களையும் வந்தித்து இருப்பதை அறியாமல் போனது மிகவும் பரிதாபம்
பஞ்சராத்திர நூல் வேதங்களில் சொல்லப்படாததால் அதுவே மோகன நூல் ஆகும்
ReplyDeleteஇராமனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தியை நீக்கினார் சிவபிரான்.அதுமட்டுமின்றி அவ்விஷ்ணுவே அவைதிக மதங்களை பரப்பிய குற்றத்திற்கு தவம் செய்து பாபம் நீங்கப் பெற்றார்
ReplyDeleteபஸ்மத்தையும் உருத்திராக்ஷத்தையும் நிந்திக்கும் முடர்களே! பஸ்மத்தையும் ருத்ராஷத்தையும் சாபால உபநிஷதம் வந்தித்து இருப்பதை போல அதிசூர்ணம் மஞ்சள் இவற்றை வேத உபநிஷதம் வந்திக்கவே இல்லை.அதனால் பஞ்சராத்திரம்,வைகாசானம்,மாயாவாதம்,அதிசூர்ணம்,இவையே பாஷாண்டமாகும்
ReplyDeleteசிவநிந்தகர்களே!திருவரங்கத்தில் பெருமாள் கோவில் கொண்டிருக்கும் காரணம் என்ன என்றால் திருவானைக்காவில் வீற்றிருக்கும் சிவனாரைத் தரிசிக்கத்தான்.
ReplyDeleteஅப்படியல்லாம் ஒன்றும் இலை அரங்கனின் திருவடிபட்ட தீர்தத்தில் நீராட தான் ஈசனார் அங்கு எழுந்தருளினார்
Deleteமூடனே சங்கரனின் தேவியுடைய வேர்வை தான் கங்கா தேவி என்பதை உணராத நீ
Deleteஎல்லாம் பேச வந்துவிட்டாய்
நான் சொன்ன மற்ற கருத்துகளுக்கு பதிலிருக்கிறதா உன்னிடம். வேதம் சிவாகமங்களை வந்தித்திருக்க அதற்கு புறம்பாக பஞ்சராத்திரம் என்னுமொரு பாஷாண்ட ஆகமத்தை பிராமணமாகக் கொள்ளும் வைணவர்கள் எப்படி உருப்படுவார்கள்?
Deleteசங்கரன் தான் பரம்பொருள். இதுவே வேதம் சொல்லும் முடிந்த முடிவு.மற்ற தெய்வங்களுக்கு சொன்ன துதிகளெல்லாம்
Deleteவெறும் உபசாரங்களே
சங்கரன் திருவானைக்காவில் எழுந்தருளியுள்ளது சிலந்தி,யானை இவற்றின் பக்திக்காக. திருமாலை தரிசிக்க அல்ல.வைஷ்ணவர்கள் தங்கள்
Deleteபுராணங்களில் நிறைய புரட்டு செய்து எழுதியிருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.அதுபோலவே மகாபாவியான பிள்ளைப்பெருமாள் ஐயங்கானும் திருவரங்கத்தை சங்கரன்
வணங்கினாரென எழுதி வைத்தான்
சிவன் எதற்கு மோகன சாஸ்திரம் செய்ய வேண்டும்?அவர் மோகன நூல் செய்ததாக
Deleteபுராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது
என்றொரு புளுகு முட்டையை அவிழ்த்து விட்டால் அதனைக் கண்டு சாமானியர்கள்
மயங்குவார்களன்றி அறிவுடைய நல்லோர் மயங்கமாட்டார்கள்
சிவாகமங்களை வேதம் வந்தித்து இருக்கிறது என்பதை பல உபநிடத ஆதரங்களுடன் எடுத்துக் காட்டினோம்.சிவாகமங்கள் வேதத்திற்கு மாறுபாடானவை அல்ல.வேதங்களில் சுருக்கமாகவும் நுட்பமாகவும் சொல்லப்பட்ட சிவ வழிபாட்டு முறைகளை விரித்துச் சொல்வதற்கே சிவாகமங்கள் தோன்றின.
ReplyDeleteமுடர்களே!நீங்கள் வழிபடும் அந்த விஷ்ணு தான் அவைதிகமாகிய பௌத்தம்,சமணத்தைப்
ReplyDeleteபரப்பியவர்.எங்கள் சிவனாருக்கு அவைதிகத்தைப் பரப்புவதற்கு யாதொரு தேவையுமில்லை.கிருஷ்ணன் மகாபாரதம் ஆதிபர்பவத்தில் "கலியுக ஆரம்பத்தில் புத்தனாகி அனைவரையும் மோகிப்பேன்"என்று
சொல்லியிருப்பதனால் பாஷாண்டத்தைப் பரப்பியவன் விஷ்ணுவே அன்றி சிவனல்லன்.
சிவனார் அணியும் ருத்ராக்ஷம்,எலும்பு,பஸ்மம் இவற்றிற்கு காரணம் தெரிந்து கொள்.அவர் பிரம்ம,விஷ்ணு,மற்றுமுள்ள தேவர்களை மகா சம்ஹார காலத்தில் ஒடுக்கி அவர்களின் எலும்புகளை மாலையாக அணிந்து தானொருவனே நித்தியம் என்பதை உலகவருக்கு காட்டி ஏனைய தேவர்கள் அனைவரும் சாகறிவர்களே என்பதை உலகவருக்கு காட்டுவர்.இது தெரியாமல் சிவபிரானை நிந்திக்காதே.
ReplyDeleteஎவனாவது இனி சிவாகமங்களை பற்றி வாயெடுத்தீர்கள்? பிறகு நடப்பதே வேறு.
ReplyDeleteஇறைவனுக்கு எண்குணம் உண்டு என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.
ReplyDelete"கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத்தலை" என்னும் குறளுக்கு பரிமேலழகர் "இறைவனுக்கு உள்ள எண்குணங்களும் சிவாகமங்களில் கூறப்பட்டுள்ளது"என்று உரை எழுதியிருப்பதை அறியாத பாமரன் தான் சிவாகமங்களை மோகன நூல் என்று பிதற்றுவான்.மிகச் சிறந்த திருக்குறள் உரையாகப் போற்றப்படும் பரிமேலழகர் உரையிலேயே சிவாகமங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது என்றால் அதன் சிறப்பை வேறு என்ன வென்று கூறமுடியும்?
இந்த அர நிந்தை வைஷ்ணவர்கள் பாஷாண்டர்கள். வேத சிவாகம விரோதிகள்.இந்திரனுக்கு உடம்பெல்லாம் பெண்குறி இருப்பதைப் போல இவர்கள் தங்கள் நெற்றியிலும் மற்ற இடங்களிலும் பெண்குறியாகிய யோனி புண்டரத்தைத் தரிக்கும் மகாபாவிகள்.இவர்களை எவனொருவன் நேரில் கண்டாலும் உடனே ஸ்நானம் செய்வது அவசியம்
ReplyDeleteதன் பக்தனாகிய மாபலியை வஞ்சித்தவனும் சலந்தராசூரனின் மனைவியாகிய பிருந்தையை
ReplyDeleteஅவன் இறந்தவுடன் அவன் உடலில் புகுந்து கற்பழித்தவனும் திரிபுரத்தவர்களின் மனைவியரை அரச மரத்தில் புகுந்து அவர் அறியாதவாறு அவர்களைக் கற்பழித்தவனும்
வாலியை நேரில் எதிர்க்க வலிமையின்றி மறைந்திருந்து கொன்றவனும் ஜராசந்தனிடம்
பதினெட்டு முறை போரில் தோற்றுப் புறமுதுகிட்டு ஓடியவனும் மாயமானையும் மாயாசீதையையும் மாயாவசுதேவனையும் உண்மையென்று மயங்கி மூர்ச்சையானவனும்
துர்வாசரின் எச்சில் பாயசத்தால் உடல் வலிமையானவனான திருமாலா பரம்பொருள்?
அவரையா திரிகுணரஹிதரான சங்கரர் வணங்குவார்?வெட்கம்!வெட்கம்!
ஏய் மூதேவி பேசு டா
ReplyDeleteஅவன் கோழை... எப்படிப் பேசுவான். சிவனோடுக்கும் தெய்வம் இல்லை என்ற மறை பொருளை அறியா மூடன்.
Deleteதாங்கள் இத்தனை ஆதாரம் காட்டியும் ஒரு பேச்சு எழுந்ததா?
ReplyDeleteஅந்தப் பிள்ளைப் பெருமாள் என்னும் மூடசிகாமணி
ReplyDelete"செங்கையால் இரந்தவன் கபாலமார் அகற்றினார்" என்றான்
அயனது கபாலத்தை ஏந்திய சிவனுக்கு பிரம்மஹத்தி ஏற்பட்டது என்றாய் ! பிரமன் தலையரிந்த பின்னும் சாகாமல் இருக்க சிவனார் க்கு ஹத்தி வந்தது எங்ஙனம்??
Rakshasargalin kadharal Vainavargalai ondrum seiyadhu.
ReplyDeleteஅரநிந்தை வைணவனே! தைரியம் இருந்தால் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்
Deleteபரிமேலழகரே சைவாகமங்களை மேற்கோள் காட்டினார்.
வில்லிபாரதத்தில் பலவிடங்களிலும் முக்கியமாக
அருச்சுனன் தவநிலைச் சருக்கம் , தீர்த்த யாத்திரை சருக்கம் முதலியவற்றில் சிவாகமங்களின் பெருமை பேசப்படுகிறது.
வியாச முனிவர் நாமம் அணியவில்லை திருநீறு அணிந்தார் என்று சம்பவச் சருக்கம் கூறி வைணவர்களின் வாயில் மண் போட்டது