||ஸ்ரீமதே இராமாநுஜாய நம||
பரம்பொருளான ஸ்ரீமந் நாரயணனின் பரத்வங்களை மறைப்பதற்காக ருத்ரப் பிரியர்கள் பல விதமான புனைப்பு கதைகளை கட்டி விட்டு அதற்கொரு தாமத ஸ்தலபுராணங்களையும் உருவாக்கினர். ஆனால் இந்த ஸ்தல புராணங்கள் இவர்கள் குறிப்பிடும் கதைகளான பகவான் ஸ்ரீவிஷ்ணுவை சிறுமைப் படுத்தும் அபத்தங்கள் யாவும் சங்க காலங்களிலும் அதற்கு முற்பட்ட காலங்கலிலும் கையாளப்பட்ட எந்த பழம் தமிழ் நூல்களிலும் இல்லை வட மொழிப் புராணங்களிலும் காணப்படவில்லை என்பதை அறியலாம் இவையெல்லாம் சைவ நாயன்மார்களின் பாடல்களில்தான் தலைக் காட்டத் தொடங்கின இதிலிருந்தே இவை அவர்கள் காலத்தில்தான் புனையப்பட்டது என்பது பாலகர்களுக்கும்
எளிதில் புலனாகும்.
இப்படி இட்டுக் கட்டிய புரட்டுக்களில் ஒன்றுதான் சிவன் சரபேஸ்வரராக வந்து நரசிங்க மூர்த்தியை அடக்கி வென்றார் என்பதும் இதற்கான பதிலை தக்கபடி கொடுப்பதே சிறந்தது.
இனி இதற்கான மறுப்பு:-----[பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய பரப்பிரம்ம விவேகத்தில்]
"புக்க கருடனையோர் புன்மசகம் வென்றதிறம் ஒக்கும் கனகனுரங் கீண்ட--- மிக்கதிறல் ஆளரியைப் பொன்னனுக்கா யஞ்சிக் கிடந்தசிவன் கோள்விளைத்தா னென்னுங் குறி.
"பொன்னனுரங் கீண்டதனுல் பொங்குசினம் ஆறிற்றோ? துன்னு சிவச்சரபஞ் சோரவுயிர் --அன்னதனைப் பற்றி வகிர்ந்தபின்னர் பாழி நரமடங்கல் உற்ற சினந்தணிந்த தூங்கு."
என இருபாடல்களைக் கூறி அதற்க்கு எடுத்துக்காட்டாக------
"இந்திரன்செய் வேள்விக் கிடரிழைக்க எண்ணுமரன் ஐந்தலையு மற்றவிழ ஆழியினால் --- முந்தரிந்த அச்சுதனை மைந்தரொடும் அம்பிகையாள் வேண்டிடலும் அச்சிவன்பெற் றானுயிரை அன்று."
என்ற மற்றொரு பாடலையும் கூறி, அவர்கள் கூற்றை மறுத்தல்.
இப்பாடல்களின் கருத்து:--- "புக்க கருடனை...குறி" ஆகாயத்தில் பறக்கும் பறவைக்கரசாகிய கருடனை அற்பமான கொசு ஒன்று வென்றது என்றால், அது நம்பத்தகுந்ததா? நம்பமுடியாததன்றோ? அதேபோல ஒப்பற்ற வலிமையோடு அவதரித்து இரணியன் மார்பை இரு பிளவாகப் பிளர்ந்து எறிந்த நரசிங்கமூர்த்தியை, அந்த இரணியனுக்குப் பயந்து பதுங்கிக் கிடந்த சிவன் பொருது வென்றான் என்றதுமாகும் என்பது கருத்து. மசகம்--கொசு, வடசொல், "நைவ தம்ஸாந்ந மஸகாந்" என்பது ஸ்ரீராமாயணம் சுந்தரகாண்டம் 36:44.
"பொன்னனுரம்....ஊங்கு" வலிமை மிகுந்த நரசிம்மனுக்கு இரணியனைக் கொன்றதனால் மட்டும் பொங்கிவந்த கோபம் தனிந்ததோ? சரபமாகி வந்த சிவனைப் பற்றி அவனது உயிர் மாள உடலைப் பிளந்த பின்பன்றோ அச்சினம் ஆறிற்று என்பது கருத்து.(பாழி---வலிமை)
"இந்திரன்செய் வேள்வி....அன்று" இந்திரன் யாகம் ஒன்று இயற்றினான். சிவன் அதற்க்கு இடையூறு செய்தான். இதை உணர்ந்த திருமால், சக்கராயுதத்தைச் சிவன் மேல் ஏவினான். ஆழிப்படை சிவனது ஐந்து தலைகளை அரிந்தது. இதனை அறிந்த பார்வதி, தன் மக்களாகிய விநாயகன், முருகன் இவர்களோடு அச்சுதனின் அடிகளில் வீழ்ந்து தனக்கு மாங்கல்யப் பிச்சை தர வேண்டினாள். மாதவனும், மலையரையன் மடப்பாவைக்கு இரங்கி மறுபடியும் சிவனை உயிர்ப்பித்தார் என்பது இதன் கருத்தாகும்.[இதை கூரேச விஜயத்தில் விரிவாகக் காணலாம்].
நரசிங்க மூர்த்தியை அடக்கவந்த சரபரை சங்காரம் பண்ணினார் என்று: வாமனபுராணத்திலும், ஆதித்யபுராணத்திலும், காருடத்தில் இருபதாம் அத்தியாயத்திலும், ஆக்கினேய புராணத்தில் நாற்பதாம் அத்தியாயத்திலும், நாரசிங்க புராணத்திலும், பாகவதத்திலும் பரக்கக் காணலாம் என்று இருசமய விளக்கம் கூறும்.
ஸ்ரீவிஷ்ணுசித்த விஜயத்திலும் இவ்விஷயம் பின்வருமாறு நிரூபிக்கப்பட்டுள்ளது:-----
"ஹந்துமப்யாகதம் ரௌதரம் ஸரபம் நரகேஸரீ |
நகைர் விதாரயாமாஸ ஹிரண்யகஸிபும் யதா ||
நமோஸ்து நரஸிம்ஹாய லக்ஷ்மீஸ்திதிஜிதக்ருதே |
யத்க்ரோதாக் நௌபுராரௌத்ர: ஸரப: ஸலபாயித: ||"
[(தன்னைக் கொல்லவந்த) ருத்ராம்சமான சரபத்தை நரசிங்கன் ஹிரண்யகசிபுவைப் பிளந்ததுபோலே பிளந்தான். எந்த நரசிங்கனின் கோபத்தீயில் முற்காலத்தில் ருத்ராம்சமான சரபம் சலபமாக(விட்டிற்பூச்சியாக) ஆயிற்றோ, லக்ஷ்மியின் சாந்நித்யத்தாலே கோபம் அடங்கப்பெற்ற அந்த நரசிங்கனுக்கு நமஸ்காரம்.] என்று
ஸாத்விகபுராணத்தில் கூறப்படுவ தாகக் கூரத்தாழ்வானருளிய அதிமாநுஷஸ்தவம் பனிரண்டா வது ஸ்லோகத்தின் வ்யாக்யானத் தில் எடுக்கப்பட்டது. இப்படிப் பல பிரமாணங்களிற் பேசப்பட்டிருப்ப தாலேயே,
"க்ரீடாவிதே: பரிகரஸ் தவ யா து மாயா ஸா மோஹிநீ ந கதமஸ்ய து ஹந்த ஜந்தோ: |
ஹை மர்த்யஸிம்ஹவபுஷஸ் தவ தேஜஸோம்ஸே
ஸம்புர் பவந்ஹி ஸரப: ஸலபோ பபூவ ||"[அதிமா நுஷஸ்தவம் 12]
[உனக்கு விளையாட்டுக் கருவியாய் (ஜீவரை) மயக்குகின்ற மாயை என்னும் பிருகிருதி எவனைத்தான் மயக்காது? நரசிங்க உருக்கொண்ட தேஜஸ்ஸின் ஒரு பகுதியிலே சரப உருக் கொண்ட சிவன் விட்டிற் பூச்சிபோலலே பட்டொழிந்தா னன்றோ?].
மேலும்...
ப்ரஹ்மாண்ட புராணத்தில் அஹோபில மஹாத்மியத்தில் எட்டாம் அத்தியாயத்தில்:
“தத: க்ருத்தோ மஹாகாயோ ந்ருஸிம்ஹோ பீம நி:ஸ்வந:!
ஸஹஸ்ரகரஜைஸ்த்ரஸ்த: தஸ்ய கா
த்ராணி பீடயந்!!
தத: ஸ்புரச்ச டாசோடோ ருத்ரம் ஸரபரூபிணம்!
வ்யதாரயந்நகை ஸ்தீக்ஷ்ணை ஹிரண்ய கசிபும் யதா!!
நிஹதே ஸரபேதஸ்மிந் ரௌத்ரே மது நிகாதிநா!
துஷ்டுவு: புண்டரீகாக்ஷம் தேவா: தேவர்ஷயஸ்ததா!!””
பொருள்-[அதன் பின் நரசிம்ஹர் பிரஹ்மாவை நோக்கி சதுர்முகரே! உண்மையில் நமக்கு கோபம் இல்லை. அந்தந்த காரியம் செய்கிறபோது அதற்கு தக்கபடி கோபம் கொள்கிறோம். தற்போது, சரபம் கொல்லப்பட்டது. ஆகவே என் கோபம் செயற்கையானது.]
ஸ்ரீ வராஹ புராணத்தில்:
"ஹந்துமப்யாகதம் ரௌத்ரம் சரபம் நரகேஸரீ!நகைர் விதாரயாமாஸ ஹிரண்ய கசிபும் யதா!!
பொருள்- நரசிம்ஹன் தன்னை கொல்ல வந்த சரபத்தினை ஹிரண்யனைக் கொன்றது போல் நகங்களினால் கிழித்துக் கொன்றார்”
என ஸாத்வீக(பகுதி)புராணங்கள்
சிவ, லிங்க, ஸ்கந்த போன்ற தாமஸபுராணக்கதையை நிரசித்து விட்டன.
மேலும்;...
உபநிஷதங்களுள்
நரசிம்ஹதாபனீய உபநிஷத்தில் நரசிம்மருடைய பெருமைகள் விஷேஷமாக விவரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக 'ம்ருத்யும்ருத்யும'
என்ற மந்திரபதத்தை விவரிக்கும்போது
'யஸ்மாத ஸ்வபக்தாநாம ஸம்ருத ஏவ ம்ருத்யும்பமருத யுஞ்ச மாரயதி |தஸ்மாதுசயதே ம்ருத்யுமருதயுமிதி'
தன்னுடைய பக்தர்களால் நினைக்கப்பட்டவுடனேயே ஸம்ஹாரபந்தத்தையும் அகாலமரணத்தையும் அவர்களுக்கு போக்குகின்றாகையால் மிருத்யுவுக்கு மிருத்யுவெனப் படுகின்றான்
என பூர்வதாபினியில் உத்கோஷிக்கப்
பட்டது. உத்தரதாபினியில் இரண்டாவது கண்டத்தில் இறுதியில்
"ஸர்வஸம்ஹாரஸமர்த: பரிபவாஸஹ: ப்ரபுர்வ்யாப்த: ஸதோஜஜ்வலோऽவித்யாதத்கார்யஹீன: ஸ்வாத்மபந்த ஹர: ஸர்வதா த்வைதரஹித ஆனந்தரூப: ஸர்வாதிஷ்டான: ஸன்மாத்ரோ நிரஸ்தாவித்யாதமோமோஹோऽஹமேவேதி தஸ்மாதேவமேவேமமாத்மானம் பரம் ப்ரஹ்மானுஸந்தத் யாதேஷ வீரோ ந்ருʼஸிம்ஹ ஏவேதி"
'அனைவரையும் ஸம்ஹாரம் செய்வதில் வல்லவனாய் ஒருவராலும் அவமதிக்க ஒண்ணாதவனாய் ஸர்வேஸ்வரனாய், ஸர்வவியாபியாய் எப்போதும் பிரகாசிப்பவனாய் அஞ்ஞானமும், அதன் காரியமும் அற்றவனாய், ஜீவாத்மாவின் ஸம்ஸாரபந்தத்தைப் போக்குபவனாய், எப்போதும் தனக்கு ஒப்பற்றவனாய், ஆநந்தரூபனாய் எல்லாவற்றுக்கும் இருப்பிடமாய், எப்போதும் உள்ளவனாகவேயிருப்பவனாய் அவித்யையெனப்படும் கருமம், தமோகுணம், மயக்கம் ஆகியவை அற்றவனாயிருப்பவன் இந்த வீரனான நரசிங்கனே!'
மேலும்;.. சங்ககால இலக்கியமான பரிபாடலில் நரசிங்காவதாரத்தின் பெருமை பேசப்படுகிறதேயொழிய சரபர் கதையே இல்லை.
"செயிர் தீர் செங்கட் செல்வ! நிற்புகழ - புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின் - பிருங்கலாதன் பலபல பிணி பட வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து அலர்ந்த புகழோன், தாதை ஆகலின் இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி, ஒன்றா நட்டவன் உறுவரை மார்பின் - படிமதம் சாம்ப ஒதுங்கி, இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப, வெடி படா ஒடி தூண் தடியொடு தடி தடி பல பட---வகிர் வாய்த்த உகிரினை."[பரிபாடல் 4]
மேலும்; ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியிலும் நரசிங்காவதாரம் பற்றிய குறிப்பு இருக்கிறது. ஆனால், சரபக்கதையைக் காணவில்லை ஆகவே முற்கால இலக்கியங்களில் எங்குமே சரபக்கதை இல்லை சல்லடை இட்டுத் தேடினும் கிடைக்காது என்பது தெளிவு.
எனவே, நாம் மேற்கண்ட ஆதாரங்கள் மூலம் ஸ்ரீ நரசிங்க மூர்த்தியின் மூச்சிகாற்றிலே சரபம் பயந்து நடுங்கி இருக்கும் என்பதே புலப்படுகிறது. சரபத்தால் எம்பெருமானை அசைக்கவே இயலாது என்பதும் இங்கு நிறுபணமாகிறது.
சரபம் ஸ்ரீ நரசிங்க பிரானை அடக்கியது என்னும் தாமஸ கல்பிதங்கள் இவ் சாத்விக ப்ரமாணங்களால் பட்டொழிகிறது.
பிரமாண்டப் புராணத்தில்,நரசிம்மர் சரபரை அடக்கியதாக உள்ளது என்று கூறுகிறார்.முதலில் புராணம் என்பது ஆதார நூல் வரிசையில் கடைக்கோடியில் இருப்பது.புராணங்களில் இடைசெருகல்கள் மிகுதியாக காணப்படுவதால்,புராண ஆதாரத்தை சந்தேகிக்க நேரிடும்.புராணத்தைவிட ஸ்மிருதி வலிமையானது,ஸ்மிருதியைவிட ஸ்ருதி வலிமையானது.நரசிம்மம் சரபத்தை அடக்கியதாக எந்த ஸ்ருதி(வேதம்) ஆதாரமும் இல்லை.ஆனால் நரசிம்மத்தை சரபர் கொன்றதாக வேத ஆதாரம் உண்டு.ஸ்ரீ சரப உபநிஷத்தில் :
ReplyDelete1. " எவர் விஷ்ணுவையும் விஷ்ணுவின் அவதாரங்களான மச்சம்,கூர்மம்,வராகம்,நரசிங்கம் முதலியவற்றையும் வாட்டி பீடிக்கின்றாரோ அந்த ருத்ரருக்கு நமஸ்காரம் ஆகுக
2."பயங்கரமான சரப வேஷம் தாங்கி உலக பீடிதமாயிருந்த நரசிம்ஹத்தை ஹிம்சித்தவரும்,பாதங்களால் ஹரியை ஹரிக்கின்றவரும்,புருஷ ரூப விஷ்ணுவை வதம் செய்யாமல் தேவரீரது பராக்கிரமத்தை மாத்திரம் காட்டியருள வேண்டும் என்று சர்வ தேவர்களாலும் மகாராத்திரியில் பின்தொடர்ந்து பிரார்த்திக்கப்பட்டவரும்,கிருபையினால் நரசிங்கத்தின் உடம்பினது தோலை கிழித்து உரித்து எடுத்து,வஸ்திரமாக அணிந்துக் கொண்டவரும்,மஹாப்லமுள்ள வீரபத்திர மூர்த்தி ஆனவரும், ஆகிய எவர் உண்டோ,அந்த ருத்திரர் ஒருவரே தியேயர்"
இதே போல்,உபநிஷத் வாக்கியம் காட்ட முடியுமா இவர் ? கடைசியில்,சரப உபனிஷத்,பிற்காலத்து இடைசெருகல் என்று அத்வைதிகள்,விசிஷ்டாத்வைதிகள்,மாத்வர்கள் கூறுவது போல் கூறலாம்.ஆக,வேதம் மொத்தத்தையும் எந்தக் கேள்வியோ,மாற்றுக் கருத்தோ இல்லாமல் பின்பற்றுபவர்கள் சைவர்கள் மட்டுமே என்பது வெளியாம்.நாங்கள் வேதத்தின் கர்மகாண்டத்தையும்,ஞானகாண்டமாகிய 108 உபநிஷத்துக்களையும் பின்பற்றுகிறோம்.ஆக,உண்மையான வைதீகர் சைவர் அன்றி பிறர் அல்லர்.
வராக புராணம் சைவ புராணமாகும்.அது வைணவ புராணமல்ல.நீங்கள் பல இடைச்செருகல்களை ஆங்காங்கு சொருகியிருக்கிறீர்கள்.அதனால் உங்கள் கூற்றுகளை விவரமற்றவன் தான் நம்புவான்
ReplyDeleteவேறு எவனும் நம்பமாட்டான்
வைணவர்களே இன்னமும் உங்களுக்கு கூறுகிறேன் பிள்ளைப் பெருமாளையங்கார் எழுதிய பாடல்களெல்லாம் முழுப் பொய்யானது.விஷ்ணு சிவனுக்கு உயிர்தந்தார்
ReplyDeleteஎன்று அந்த ஐயங்கார் பரப்பிரம்ம விவேகத்தில் இயற்றியிருப்பது முழு அவைதிகமாகும்.அதற்கு வேதத்திலும் ஸ்மிருதி
புராண இதிகாசங்களிலும் ஆதாரமில்லை. நாயன்மார்கள் காலத்தில் தான் சரபமூர்த்தி பற்றிய செய்தி வெளிவருகிறது அதனால் அது பொய்யென்று மறுப்பாயானால்.அவர்கள் காலத்திற்கு பிற்பட்ட பிள்ளைப் பெருளாளையங்கார் கூற்றும் பொய்யானது தானே
108 உபநிடதங்களும் வைதிகமே.இராமர் அனுமனுக்கு 108 உபநிடநிடதங்கள் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.அவற்றுள் சரப உபநிடதமும் ஒன்று.வேத வாக்கியமான சரப உபநிடதம் சரபமூர்த்தி நரசிம்மத்தை அடக்கியது என்று கூறுவதால் அக்கதை உண்மையே என்க
ReplyDeleteசிவபுராணங்களை மட்டும் ஏன் தாமஸமென நிந்திக்கவேண்டும்?அதனையும் வியாசர் தானே
ReplyDeleteஇயற்றினார்.சிவோத்கர்ஷங்களையும் விஷ்ணுஅபகர்ஷணங்களையும் விளக்கும் பத்து புராணங்களை வியாசர் இயற்றினார்.எண்ணிக்கையில் சிவபுராணங்களே அதிகம்.
நீங்கள் சொல்வது படி பார்த்தால் "குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிகக் கொளல்" என்னும் குறளின் படி அதிக தாமஸ புராணங்களை இயற்றிய வியாசர் மிகுந்த தாமஸியாகி அவர் முழுத்தாமஸி என்று ஒதுக்கப்படுவார்.
மேலும் "கல்லாதா னொட்பங் கழியநன் றாயினுங் கொள்ளா ரறிவுடையார்" என்னும் குறளின்படி அவர்
இயற்றிய விஷ்ணு புராணங்களும் மற்ற புராணங்களும்
தன்மதிப்பை இழக்குமே.அதனால் சிவபுராணங்களையே சாத்வீகம் எனக் கோடல் வேண்டும்
பதினெட்டு புராணங்களையும் வேதமானது வந்தித்து இருக்கிறது.
"கிம் தத்வம் ப்ரஹ்மவாதிநம் புராணேஷ் வஷ்டாதகஸூ ஸ்ம்ருதிஷ்வஷ்டாத சஸ்வபி"(பிரமவாதிகள் பதினெட்டுப் புராணங்களிலும் பதினெட்டு ஸ்ம்ருதிகளிலும் அறிதற்குரிய தத்வம் என்ன?) என்று ராமரஹஸ்ய உபநிடதம் சிவபுராணங்களையும் வந்தித்து இருக்கிறது.
சிவபிரானின் பெருமைகளைக் கூறுவதால் அப்புராணங்கள் அனைத்தும் தாமஸம் எனின்
ReplyDeleteவேதங்களில் உள்ள சதருத்ரீயம் ருத்ரமூர்த்தியின் பெருமை பேசப்படுகிறது.அதுமட்டுமின்றி பஸ்மஜாபாலம்,ராமரஹஸ்யம்,
பிருஹஜ்ஜாபாலம்,தேஜோபிந்து,ருத்ராட்ச ஜாபாலம்,அதர்வசிகை,பஞ்சபிரம்மம்,பாசுபதப் பிரம்மம்,சரபம்,நாராயண உபநிடதம் போன்ற உபநிடதங்டள் சங்கரனைப் புகழ்கிறதே அதனையும் நீங்கள் தாமஸம் என்று ஒதுக்குவீர்களோ?அப்படி ஒதுக்குவீர்களானால் அது வேத நிந்தனையாய் முடியுமே?