Tuesday, February 20, 2018

சிவசின்னமணிவது சிறுமை

அந்தனர்கள் சிலர்  விபூதி, இலிங்கம்,உருத்ராக்ஷம் முதலியவைகளைத் தரித்து சிவனை ஆராதித்து வருகிறார்கள்.
தை அணிவதற்கு சைவர்கள் கூறும் ஆதாரத்தையும், அதற்கு மறுப்பினையும் ஆராய்வோம்.

1.இலிங்கம் அணிவதன் காரணம்.

உத்தம இலிங்க தாரணத்தால் உயிரும் லிங்கத்தின் உருவமாம். எவ்வாறெனின்: பானையிலுள்ள நீருக்கு அக்கினியின் பரிசத்தால் உஷ்ணமுண்டாவது போலென்க.
இலிங்க ஸ்வரூபத்தின் சிறப்பெல்லாம் உண்மையாக நன்கறிந்து லிங்கத்தை அணிந்து கொள்பவன் தேகத்தை விட்டு ஆவி போகின்ற காலத்தில் ஆவியானது லிங்கமூர்த்தியை அதிஷ்டித்திருந்த திவ்ய சொரூபமும் செல்லும். பின்னர் அந்த லிங்கம் பிரேத லிங்கம் என்று பெயர் பெறும். அதன்மேல் ஆவியிழந்த தேகத்தையும், திவ்ய சொரூபமிழந்த லிங்கத்தையும் பூமியை அகழ்ந்து விதிமுறைப்படி சமாதி வைப்பது தக்காதாம் என்று வீரமஹேஸ்வர சித்தாந்தத்தில் சங்கரன் உமைக்கு உபதேசித்த வாசகமாகையால் சைவர்கள் ஒவ்வொருவரும் லிங்கதாரணம் செய்கிறார்கள் என்பர்.

2. விபூதி அணிவதன் விளக்கம்

ஒருவர் திருநீறு அணிந்துகொண்டால், அவர் எங்குமுள்ள புண்ணிய தீர்த்தங்களில் தோய்ந்த பலனும், ஆயிரம் வேள்வி செய்த புண்ணியமும் ஒருங்கெய்தப் பெறுவர் என்று 'சுப்பர பேதம்' என்னும் சைவாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் அதர்வசிரத்திலும் ஐந்தாவது காண்டத்தில் பாசுபத தீக்ஷையை உரைத்து அதற்கு அங்கமாகத் திருநீற்று உத்தூளான விதியும், அதற்க்கு மந்திரங்களும் அமைத்து இந்தத் திருநீற்றின் உத்தூளனமே முக்திப்பேற்றை அளிக்கவல்லது என்று சொல்லப்பட்டிருக்கிறது என்று சைவர்கள் விளக்குவர்.

3. உருத்திராக்ஷம் அணிவதன் உயர்வு

"உருத்திர மூர்த்தியின் கண்களினின்றும் தோன்றியதே உருத்திராக்ஷம். திரிபுரத்திலுள்ளவர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தினர். அவர்களது கொடுமையைத் தாங்காத அமரர்கள் கைலையங்கிரி அடைந்தனர். கைலைநாதனிடம் தாங்கள் படும் துன்பத்தினை எடுத்துரைத்தனர். தேவர்களது குறைகளை கேட்ட முக்கண்ணன் தனது கண்கள் மூன்றினையும் மலர விழித்தார்.. அக்கண்களிலிருந்து நீர்த்துளிகள் உதிர்ந்தன. அக்கண்ணீர்த்துளிகள் பல மணிகளாய்ப் பரிணமித்தன. அந்த மூன்று கண்களுள் வலக்கண்ணிலிருந்து உண்டான நீரில் பன்னிரண்டு உருத்திராக்ஷமரமும், இடக் கண்ணிலிருந்து உதிர்ந்த நீரில் பதினொரு உருத்திராக்ஷமரமும், நெற்றிக் கண்ணினின்று சிதறிய நீரில் பத்து உருத்திராக்ஷமரமும் தோன்றின. இவ்வாறு சடைமுடியண்ணலின் கண்கள் மூன்றிலிருந்து விழுந்த கண்ணீர்த் துளிகளே உருத்திராக்ஷச மரமாகி உருத்திராக்ஷத்தைக் கொடுக்கின்றன. இந்த உருத்திராக்ஷங்களில் பல முகங்களுண்டு என்பது சிவாகமத்தில் கூறப்பட்ட உருத்திராக்ஷத்தின் வரலாறு. இந்த உருத்திராக்ஷ மணிகளை சிரசிலும், காதிலும், கழுத்திலும், கையிலும் சைவர்கள் அணிவதை உயர்வாக கருதுவர்.

இனி இவற்றுக்கு மறுப்பும், அதற்க்கு சான்றுகளும் வருமாறு:-

"கபாலதேஹபஸ்மாஸ்தி ஸுக்திபாஷாணதாரிணம்|
த்ரிபுண்ட்ரதாரிணம் விப்ரம் சண்டாளமிவ ஸந்த்யஜேத்||"
[பராசரவிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம்]

[மண்டையோடு, பிணச்சாம்பல், எலும்பு, சங்கு, சிவலிங்கக்கல் இவைகளையோ, திரிபுண்ட்ரத்தையோ தரிப்பவனை, சண்டாளனைப்போலே விலக்க வேண்டும்.] என்பது மேலே கண்ட சுலோகத்தின் பொருள்.

"அக்நிதம் கரதஞ்சைவ லிங்கபாஷாண தாரிணம்|
திர்யக் புண்ட்ரதரத விப்ரம் ராஜா ராஷ்ட்ராத் ப்ரவாஸயேத்||"
[பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம்]

[வீட்டில் நெருப்பு வைப்பவன், உணவிலும், நீரிலும் விசத்தை கலப்பவன், சிவலிங்கத்தைத் தரிப்பவன், திரிபுண்டரத்தை தரிப்பவன் எனும் இத்தகைய அந்தனர்களை அரசன் தன் இராச்சியத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும்] என்பது மேலே கண்ட ஸ்லோகத்தின் பொருள்.

"ப்ராஹ்மண: குலஜோ வித்வாந் திர்யக்புண்ட்ரதரோ யதி|
தம் கர்த்தபம் ஸமாரோப்ய ராஜா ராஷ்ட்ராத் ப்ரவாஸயேத்||"
[பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம்]

[நற்குலத்தில் கல்வியறிவையுடையவனாகப் பிறந்த அந்தணன் திர்யக்புண்ரத்தைத் தரித்தானாகில், அரசன் அவனைக் கழுதையின் மேலேற்றி தேசப்பிரஷ்டம் செய்ய வேண்டும்] என்பது மேலே கண்ட சுலோகத்தின் பொருள்.

"ஊர்த்வ புண்ட்ரம் ம்ருதா கார்யம் யதீநாஞ்ச விஸேஷத:|
பஸ்ம சந்தந கந்தாதீந் வர்ஜ்யேத் யாவதாயுஷம்||"

[எல்லாருக்கும், விஸேஷமாக ஸந்யாசிகளுக்கும் ஊர்த்வ புண்ட்ரமானது மண்ணாலேயே தரிக்கத் தக்கது. பஸ்மம், சந்தனம், வாசனை திரவியங்கள் முதலியவற்றை விலக்க வேண்டியது] என்று வ்ருத்த வஸிஷ்ட ஸ்மிருதியிலும்,

"த்ரிபுண்ட்ரதாரிணோ நித்யம் பஸ்மோத்தூளந தத்பரா:|
பவிஷ்யதத்ரயீபாஹ்யா மித்யாஜ்ஞாந ப்ரலாபிந:||"
[பஸ்மத்தைப் பூசிக்கொண்டும், திரிபுண்டரத்தைத் தரித்துக் கொண்டும், பொய் அறிவைப் பிதற்றிக்கொண்டும் வேத பாஹ்யர்களாக ஆகக் கடவீர்கள்]

"ருஷீணாம் மாயயா ஸர்வமிதி ஸஞ்சிந்த்ய தத்ரவை|
ஸஸாப தாந் ஜடா பஸ்மமித்யாவ்ரத தராம்ஸ் ததா||"
[ரிஷிகளுடைய மாயையினாலேயே இக்காரியம் செய்யப் பட்டதென்றறிந்த கௌதமர் அவர்களை ஜடையையும், பஸ்மத்தையும், பொய்விரதத்தையும் தரிப்பவர்களாகும்படி சபித்தார்] என்று ஆதித்ய வராஹ புராணங்களில் சொல்லப் பட்ட கௌதம சாபத்தாலும்.

"குலீநோ ப்ராஹ்மணோ வித்வாந்பஸ்மதாரீ பவேத் யதி|
வர்ஜயேத் தாத்ருஸம் தேவிமத்யோச்சிஷ்டகடம் யதா||"
[தேவியே! நற்குலத்திற்பிறந்து ப்ராஹ்மணனாய் வித்வானாயிருக்கும் ஒருவன் பஸ்மத்தைத் தரித்தானாகில், அவனைக் கள்குடத்தைப்போல் விலக்கவேண்டும்.] என்று வராஹ புராணத்திலும்,

"தீபாக்நிர் தீபதைலஞ்ச பஸ்ம சாஸ்தி ரஜஸ்வலாம்|
ஏதாநி ப்ராஹ்மண: ஸ்ப்ருஷ்ட்வா ஸவாஸா ஜலமாவிஸேத்||"
[தீபாக்னி,தீபதைலம், பஸ்மம், எலும்பு, தூரஸ்திரீ ஆகிய இவைகளைத் தொட்டானாகில் ப்ராஹ்மணன் வஸ்த்ரத்துடன் கூட குளிக்கவேண்டும்.] என்று ஸங்க ஸ்ம்ருதியிலும்,

"ந பஸ்மகேஸ துஷ கபாலாமேத்யாந்யதிதிஷ்டேத்" என்று கௌதம சூத்திரத்திலும்,

"பஸ்மதுஷாதிஷ்டாநம் பதா பாதஸ்ய
ப்ரக்ஷாளநமதிஷ்டாநஞ்ச வர்ஜயேத்"
என்று ஆபஸ்தம்ப சூத்திரத்திலும் பஸ்மதாரண ஸ்பர்சாதிகள் நிஷேதிக்கப்பட்டன என "விஷ்ணுசித்த விஜயம்" 442,443 பக்கங்களில் கூறுவது காண்க. மேலும் விளக்கம் வேண்டுவோர் ஸ்ரீவிஷ்ணுசித்த விஜயம் அதர்வசிரோ விசாரம் முழுவதையும் கண்டு தெளிக.

இனி இதற்க்கு விளக்கமாக "இருசமய விளக்கம்" உரைத் தொகுப்பினை இதனடியில் காணவும்----

"திருநீற்றின் விசேஷமெல்லாம் ஆகமத்தில் இயம்பியது ஒருபுறமிருக்க, சிறந்த அதர்வசிரசில் திருநீற்றைப் பற்றி உரைத்தது பற்றிக் கூறுவோம். அந்த அதர்வசிரசில் முதற் கண்டத்தில் சிவன், 'தேவர்களோடு எனக்கும் அந்தர்யாமியாய் விளங்குகிறவன் திருமாலேயாமென்றுரைத்தனன்.' என்று சொல்லப்பட்டுள்ளது. இஃதல்லாமலும் சிவனுக்கு உபாஸனா மூர்த்தியாயிருப்பவனும் செங்கண்மாலே என்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இன்னும் அந்த அதர்வசிரசில் ஐந்தாம் கண்டத்தில் பசுபதிதீக்ஷைக்கிலக்கணம் வெண்ணீறணிந்து கொள்வதாமென்றுரைத்து, வேதியர்கள் வெண்ணீறணிந்து கொள்ளலாகாதென்றும் விதித்துள்ளது, ஆதலால் திருநீறுணிந்து கொள்வது பிராம்மணர்கட்குச் சர்வசாதாரணமாகாதென்பது தெளிவாம்."

"திருபுண்ட்ரத்தை வேடிக்கைகாகவாவது அணிந்து கொள்வது வேதியர்க்குத் தகாதென்றும், அப்படித் தரித்து விடுவானாகில் அப்பொழுதே பதிதனாவானென்றும், மரீசி கூறிய ஸ்மிருதி செப்பாநிற்கும்"

"தக்க அந்தணர்குலத்தில் பிறந்து திரிபுண்ட்ரம் தரித்துச் சங்கரனை அர்ச்சிப்போர் அப்பொழுதே அதர்மர்களாய்விடுவார்கள்; இந்தத் திரிபுண்ட்ரம் தரித்தல் முதலிய ஆசாரங்கள் சூத்திரரையும் பதிதரையும் நோக்கி விதிக்கப்பட்டன என்று வாசிஷ்ட சங்கிதை வகுத்துரைக்கும்''

"வேதியருக்கு ஊர்த்துவபுண்ட்ரமும், க்ஷத்திரியருக்குப் பிறையின் கீற்றும், வணிகருக்கு வட்டமும், சூத்திரர்க்குத் திரிபுண்ட்ரமும் உரியனவாம்; பிராம்மணர்கள் மறந்தும் அந்தத் திரிபுண்ட்ரம் தரிக்கப்பெறார். உண்மையுடைய பெரியோர் அப்புண்ட்ரத்தை ஆசரித்தல் அவருக்கு இயல்பன்று' என்று ஆக்கினி வேசிகிரி அறையாநின்றது"

இதுபோல் இன்னும் பல பிரமாணங்கள் இருசமய விளக்கத்தில் விளக்கப்பட்டிருக்கிறது.

ஆதாரம்:- பரப்பிரம விவேகம்.

No comments:

Post a Comment