||ஸ்ரீமதே ராமாநுஜாய நம||
"முன்பு ஜலந்தராசுரனை வதைப்பதற்காக திருமால், தாமரை மலர் ஓர் ஆயிரத்தைக்கொண்டு கைலாசாதிபதியை அர்சித்தார். அதில் ஒருமலர் குறைந்திருக்கவே, தம் கண் ஒன்றை இடந்து சிவனடியில் சாத்தினார். பரந்தாமனின் இச்செயலைப் பார்த்து மகிழ்ந்து பரமசிவன் அவருக்கு சக்கராயுதத்தை அளித்தார்"
என்னும் பெரும் மூட பங்கத்திறக்கு மறுப்பு..!
"சக்கரத்தை மிக்கமலர் சாத்தியுபா சித்ததனால் முக்கவட்டுச் சூலமுனம் பெற்றான் ---நக்கனெனலென்? தாமதநூற் பொய்யறியா தார்"
'சக்கரத்தை.....அறியாதார்' ---நக்க(திகம்பர) பிரானாகிய சிவன் திருவாழியாழ்வானாகிய சுதர்சன சக்கரத்தை ஏராளமான மலர்களைக்கொண்டு ஆராதித்து மூன்று பிளவாக உள்ள சூலாயுதத்தைப் பெற்றான் என்று வேதங்கள் கூறிநிற்க; தாமத நூல்களிலே கூறப்படும் பொய்யை உணராத நீங்கள் திருமாலுக்கு சிவன் சக்கராயுதத்தைக் கொடுத்தார் என்பது எக் காரணம் பற்றியோ? என்பது இதன் கருத்து.
இனி இதற்கு மேற்கோள்;
"மொழியிருக்கு வேதமதி லெட்டா மட்டகத்தின் மூன்றாமத் தியாயமதின் மூன்றெனும் வர்க்கத்து மெழில் கொளந்த வேதத்தி லெட்டா மட்டகத்தி
லேழாமத் தியாயமதி லெட்டெனும் வர்க்கத்து மிழிவிலெசு ரெனும் வேதாரணந் தனிலேயாதி யெனும் பிரசிநத்திற் பன்னொன்றெனு மநுவாகத்து மொழிவிலதர் வணவேத சிரத்து முயர்சாமத் துத்தர ருக்கினி லொன்பா னத்தியாயத்தும்"
"கருதரிய பாகவதந் தனிலிரண்டா மூன்றாங் கந்தத்துஞ் சுந்தரமால் விட்ணு புராணத்துந் தருமிராமா யணத்திரா வணற்கு மண்டோ தரியுரைக்கும் புத்தியினும் வராக புராணத்துண் மருவிய உத்தரகாண் டந்தனிலு மெங்கள் பெருமான் மாதவனைச் சங்காழி நாதனென வோதும் பொருளது நால்வேத புராணத்தின் வகைசொன்னேன் புரையறக் கண்டுணர்மின் எனப்புகலுவன் மேன்மேலும்"[கூரேச விஜயம்]
ரிக், யஜுர், ஸாம அதர்வணமென்னும் நான்கு வேதங்களிலும், விஷ்ணுபுராணம், வராஹபுராணம், இராமாயணம், பாவதம் முதலிய இதிகாசபுராணங்களிலும் திருமாலுக்குச் சக்கரம் அனாதியானது என்று முழங்கியிருப்பதாகக் கூரேச விஜயத்தில் இப்பாடல்களில் கூறப்படுவது காண்க.
மேலும், "சிவனைத் திருமால் சம்ஹாரகர்த்தாவாக்கும் காலத்தில் அதற்குரிய ஆயுதத்தை எனக்கு அருளவேண்டுமென்று சிவன் திருமாலைக் கேட்க; திருமாலும் எனது சுதர்சன சக்கரத்தைப் போற்றி அதற்க்குரிய படையினைப் பெறுவாயாக என்று கூறினார். அரனும் அவ்வாறே செய்து சூலாயுதத்தைப் பெற்றுக்கொண்டார் என்று அகஸ்திய சம்ஹிதையிலும், விஷ்ணுபுராணத்திலும் கண்டுகொள்ளுங்கள்" என்ற கருத்தமைந்த-----
"அரன்றனைச் சங்கார கர்த்தனாக்கிடும் போதவனங் கத்தொழிலுக் கியைந்த படையருளு மெனக்கேட்ப வரன்தருமென் சுதரிசனச் சக்கரத்தைப் போற்றி வன்படை கொளெனச் சூலமப்படியே கொண்டான் திரஞ்சொலிது வகத்திய சங்கிதையி லெழில் விட்ணு செய்யபுரா ணத்தினுங் கண்டுணர்மின் எனத்தெரிந்து பரம்பொருள் மாலாகு மரனன்றென் றேசைவப் பாவலரைப் பார்த்திபனைப் பார்த்துரை செய்திப்பால்".
[கூரேச விஜயம்]
எனும் கூரேச விஜயப் பாடலையும் நோக்குக.
இனி; தமிழ் நூல்களில் உள்ள சான்றுகள்;
சிவன், திருமாலைக் கூறுமிடங்களில், சிவனால் திருமாலுக்குச் சக்கரம் அளிக்கப்பட்டது என்ற கதை சங்கத் தமிழ் நூல்கள் எதிலுமே காணப்படவில்லை. சக்கரப்படை திருமாலுக்கே உரியது என்றும், அனாதிகாலமாகத் திருமால் அதனைத் தம் திருக்கரத்திலே தரித்திருக்கிறார் என்றுமே தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
"இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் என்ப தீதற விளங்கிய திகிரி யோனே"
[நற்றிணை: க.வா]
என்ற நற்றிணை கடவுள் வாழ்த்துப் பாடலில் 'திகிரியோனே வேதமுதல்வன்' என்று கூறுவதிலிருந்து திருமாலுக்குச் சக்கரம் அனாதி என்பது பெறப்படும். மேலும், திருமாலைக் கூறுமிடங்களிலெல்லாம் திருமாலையும் சக்கரத்தையும் இணைத்தே பழந்தமிழ் நூல்கள் கூறுவதை அடியிற் காண்க;
"பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய மன்னிய முதல்வன்" [பரிபாடல் 1]
[சக்கராயுதத்தை வலது திருக்கரத்திலே தரித்து(அழிவில்லாமல்) என்றும் நிலைத்திருக்கும் முதல்வன்] எனப் பரிபாடல் கூறுவது நோக்குக. மற்றும் உள்ள சங்கநூல்களிலும் சக்கராயுதம் திருமாலுக்கே உரியதாகக் கூறப்பட்டுள்ளதென்பதை அடியிற் காண்க;
"தொல்கதிர்த் திகிரியான் பரவுதும்" [முல்லைக்கலி 4]
இதில் "கதிர்களோடு கூடிய பழமையான சக்கரத்தை உடைய திருமால்" என்பது காண்க.
"பானிற வுருவிற் பனைக்கொடி யோனும் நீனிற வுருவி னேமி யோனுமென் றிருபெருந் தெய்வமு முடனின் றாஅங்கு."[புறம்: 58]
"நேர் கதிர் நிறைந்த நேமி அம்செல்வன் போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல்."
[அகம்: 175]
"வண்டூது பொலிதார்த் திருஞெம ரகலத்துக் கண்பொரு திகிரிக் கமழ்குரற் றுழாஅய் அலங்கற் செல்வன் சேவடி பரவி."
[பதிற்றுப்பத்து: 31]
"நனந் தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறிந்த மா தாங்கு தடக்கை."
[முல்லைப்பாட்டு]
"வெறிகொ ளறையருவி வேங்கடத்துச் செல்லி னெறிகொள் படிவத்தோய் நீயும்--- பொறிகட் கிருளீயும் ஞாலத் திடரெல்லா நீங்க அருளீயும் ஆழி அவன்."[புறப்பொருள் வெண்பா மாலை]
"பகையணங் காழியும் பால்வெண் சங்கமுந் தகைபெறு தாமரைக் கையி னேந்தி நலங்கிள ரார மார்பிற் பூண்டு பொலம்பூ வாடையிற பொலிந்து தோன்றிய செங்க ணெடியோ னின்ற வண்ணமும்."
[சிலம்பு: காடுகாண்காதை 47-51]
"கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ண னிடத்துளாள்"
[சிலம்பு: ஆச்சியர் குரவை 2856]
"பொன்னணி நேமி வலங்கொள் சக்கரக்கை மன்னுயிர் முதல்வன்.."
[மணிமேகலை]
"அக்கணத் தனுமனு மவணின் றேகியத் திக்குறு மானத்தைச் செல்வ னெய்தியச் சக்கரத் தண்ணலைத் தாழ்ந்து நின்றனன் உக்குறு கண்ண நீ ரொழுகு மார்பினான்."[கம்பராமாயணம்: யுத்த 328]
"நின்றவ னிருந்த வேந்தன் வரவினை நிகழ்த்த நேமிப் பொன்றிகழ் படையோன் அந்தப் பொய்த்துயிற் பாயல் நீங்கி."
[வில்லிபாரதம்: வாசுதேவனைப் படைத்துனை அழைத்த சருக்கம் 11
மேலே கண்ட பாடலுக்கு; "எம்பெருமானுக்குச் சக்கரம் முதலியன---பகைவர்களுக்கு அச்சம்செய்து ஆயுதகோடியிலும், அடியார்களுக்கு அழகுசெய்து ஆபரணகோடியிலும் அமைதலால், நேமிப் பொன்திகழ் படை' என்றார" என்ற வை.மு.கோ. உரை நயம் காண்க.
"புனையாழி அங்கைப் புயல்வளர் பாற்கடற் பூங்கொடிவாழ்"
[தஞ்சைவாணன் கோவை]
"பண்டுவசு தேவன்மக னாகிநில மாதின் படர்களையு மாயனிவ னென்றுதெளி வெய்தத் தண்டுதனு வாள்பணில நேமியெனு நாமத் தன்படைக ளானதிரு வைம்படைத ரித்தே."
[கலிங்கத்துப்பரணி: 240]
"சக்கரமு தற்படையொ ரைந்துமுத னாளே தன்னுடைய வானவத னாலவைந மக்குத் திக்குவிச யத்தின் வரு மென்றவைப யிற்றிச் செங்கைமலர் நொந்திலசு மந்திலத னக்கே."
[கலிங்கத்துப்பரணி: 247]
பரணிகளில் முதன்முதல் தோன்றியது கலிங்கத்துப் பரணி.
"பரணிக்கோர் செயங்கொண்டான்" என்ற புகழ் கொண்ட பேராசிரியரால் பாடப்பட்டது. ஒட்டக்கூத்தர் தாம் பாடிய தக்கயாகப் பரணியில், தென்றமிழ்த் தெய்வப் பரணிகொண்டு' என இதனை தெய்வப் பரணி என்று கூறுவர். கவி ஒட்டக்கூத்தராலே புகழ்பெற்ற பெரும்புலவர் செயங்கொண்டார்.
இவரது கலிங்கத்துப் பரணியில்
'தண்டுதனு வாள்பணில நேமியெனுநாமத் தன்படைகளான திரு வைம்படை தரித்தே' எனவும்
'சக்கரமு தற்படையொ ரைந்துமுத னாளே, தன் னுடைய வானவதனால்' எனவும் கூறுவதிலிருந்து திருமால் ஒருவனே அனாதிகாலமாகச் சக்கரம் முதலிய ஐம்படைகளையும் தரித்திருக்கிறான் என்பது பெறப்படுகிறது.
"சேய ரும்பொருள் செல்வ மிவையென நேயம் வைக்கி னிகரில் வெருத்தரும் ஆயுங் காலிவ் விருப்பறுத்து ஆழிசேர் மாயன் தாளில் மனவைத்தி மன்னனே."[பாகவதம் 1531]
ஆழ்வார்களும்; 'வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு'
'சங்கொடு சக்கரமேந்துந் தடக்கையன்' 'சுடராழியானடிக்கே சூட்டினேன் சொன்மாலை' 'தழலெடுத்த போராழி ஏந்தினான்'
'என்னாழி வண்ணன் பால் பொன்னாழி கண்டேன்' 'கார்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்' கைகழலாநேமியான்' என்று கூறுவது நோக்குக.
குறிப்பாகச் சங்ககால இலக்கியங்களிலும் பிற பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிவபெருமானிடமிருந்து திருமால் சக்கரம் பெற்றார் என்ற கதை எதிலுமே காணப்படவில்லை. அனாதி காலமாகத் திருமால் சக்கராயுதத்தைத் தரித்திருக்கிறார் என்றே தமிழிலக்கியங்கள் உரைக்கின்றன என்பது கருதத்தக்கது.
எனவே சக்கரத்தானான சர்வேஸ்வனுக்கு சுதர்சன சக்கரம் அனாதியானது என்பது தெரிகிறது.
துஷ்டர்களை அழிப்பது போல் பாஷாண்ட புனைப்பு கதைகளையும், பாஷாண்டார்களையும். எம்பெருமான் சுதர்சன ஆழ்வாரை ஏவி சங்காரம் பண்ணிடுவான் என்பதும் சத்யம்.
"சுதர்சனாழ்வார் திருவடிகளே சரணம்..!
"எம்பெருமானார் திருவடிகளே சரணம்...!
"சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்"
ஆதாரம்:-[திவ்யகவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய "பரப்பிரம்ம விவேகம்" என்னும் உன்னத படைப்பில் இருந்து]
எதிலும் ஸமஸ்கிருத குறியீடு இல்லை .. எல்லாம் தற்போதய இடை சருகள்கள்... சென்று ISCON இடம் சென்று சொல்லுங்கள் நாரயணனே இல்லை எல்லாம் கி்ருஷ்ணர் என்பார்கள்... உங்களை போல அவர்களிடமும் பல இடை செருகள்கள் உண்டு
ReplyDeleteநாராயணன் இல்லை என இஸ்கான் கூறுவதில்லை !
Deleteநாராயணனும் கிருஷ்ணரின் ஒரு விரிவாங்கமாக தானே சொல்கிறார்கள் !
நீங்க யாரை வேண்டுமானாலும் வழிபடலாம். நாராயணர், கிருஷ்ணர், விஷ்ணு, ராமர், நரசிம்மர் .... இப்படி யாரை வழிபட்டாலும் இறைவனை அடையலாம்.
இதோ வேதத்தில் நாராயணர் கிருஷ்ணர் என்கிறது...
யஜீர் வேதம் - நாராயண உபநிஷத்தில்
ப்ரஹமண்யோ தேவகீ-புத்ர:
தேவகியின் மைந்தனான கிருஷ்ணரே முழுமுதற் கடவுள்" என்றும் கூறப்பட்டுள்ளது.
மூடனே ச்சீ ச்சீ சாத்திரப் புரட்டு பல செய்து பரமென நிரூபிக்கபட்ட தெய்வம் எதுவாயினுமாக அந்தோ! பாவி என்ன காரியம் செய்தனை என்னையும் கெடுத்தாய் என்று அஞ்சி அலறுமென்க.
Deleteதாமரைக்கண்ணன் என்னும் பெயரிலிருந்தே விஷ்ணு சிவபூசைசெல்வர் என்பது தெரியவேண்டாமோ?
அற்ப பரிபாகிகள் இப்படியே புலம்பித் திரிவர்.சிவபுராணக் கதைகளை மறுத்து உனது திருட்டுச் சுவடிகளில் எழுதிவிட்டால்
அதனை அனைவரும் நம்பிவிடுவார்களோ?
நீ கதைகளை மறுக்கவில்லை அதனை எழுதிய வியாசமுனிவரையே அவமதிக்கிறாய்.உனது வாயடங்க மகாபாரதத்திலும் வேதத்திலிருந்தும் ஆதாரம் காட்டுகிறேன்
"குற்றமற்றவரே! ரிஷபக்கொடியுடைய சிவபெருமானால் முன்னர் உண்டாக்கப்பட்டதும் ஜ்வலிக்கின்ற அக்கினியைப் போன்றதும் சக்தியினால் யாராலும் வெல்லமுடியாத ஆச்சரிய முள்ளதும் சங்க்ரரைத்தவிர மற்றவரால் பார்க்கவு முடியாததுமான சக்ராயுதம் ஜலத்துக்குள் ஸஞ்சரிப்பவனும் பலத்தினால் கர்வங் கொண்டவனுமான அஸ¤ரனைக்கொன்று அந்தப்பகவனால் உமக்களிக்கப்பட்டதன்றோ? அந்தச்சக்கரம் ஸ¤தர்சன மென்னும் பெயர் உலகத்தில் நிலை நின்றது' என்பது அநுசாசனம் 45-ம் அத்தியாயம்.'விஷ்ணுவினது அந்த உக்கிரமான சக்கரமும் இந்திரனுடைய வஜ்ராயுதமும் மந்தாரன் என்னும் பெயருள்ள க்ரஹன் என்னும் அஸ¤ரனுடைய தேகத்திற்பட்டுச் சிதறிப்போயின்....அந்தச்சக்கரம் கிரகனுடைய அங்கங்களில் தெறித்துப்போயிற்று.....கிரகனுடைய உடம்பில் நூற்றுக்கணக்கான சக்கரம் வஜ்ர முதலிய ஆயுதங்களும் செல்வதில்லை' என்ற அநுசாஸனம் 45 கூறுவதை படிக்கவில்லையா?
அந்த சுதர்சனச்சக்கரத்தை சிவபக்த சிரேஷ்டரான ததீசி முனிவரின் மேல் ஏவ அது வச்சிரம்போன்ற அவருடலில் பட்டுச் சிதறி அவமானமடைந்த கதை தெரியாதோ?கிரகன் என்னும் அசுரனிடம் அவமானப்பட்ட கதை தெரியாதோ?
வேதோபநிடதமான சரபத்திலிருந்து உனக்கு ஆதாரங் காட்டுகிறேன்
"யோவாமபாதார்ச்சித விஷ்ணு நேத்ரதஸ்மை ததெள சக்ரமதீவஹ்ருஷ்ட: தஸ்மை ருத்ராய நமோ அஸ்து" (எவன் இடது பாதத்திலே பூசிக்கப்பட்ட விஷ்ணுவின் நேத்திரத்தையுடையவராய், அதனால் மிகமகிழ்வுற்று அந்த விஷ்ணுவுக்குச் சக்கரத்தைக் கொடுத்தாரோ, அவ்வியல்பினராகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம் உளதாகுக) என்ற சரபம்.
இதனால் இனிமேலாவது வாயடங்கிக் கிடப்பாய்
இதனால் சிவதுவேஷியான பிள்ளைப் பெருமாள் என்னும் மூட சிகாமணியின் திருட்டுப் பாடல்கள் கற்றறிந்த வித்துவான்கள் முன் நெருப்பிலிட்ட பஞ்சுபோன்ற நிலையை அடையும்.
ReplyDeleteஅப்பாடல்களைக் கொண்டு ஒருவன் சபையேறினால் வேதபண்டிதர்களால் செருப்படி படாமல் தப்பமாட்டான்.
வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் பதினெட்டு புராணங்களுக்கும் விரோதமாக அந்தப் பஞ்சராத்திரப் பதடி எழுதிய பாடல்கள் அரைக் காசுக்கும் செல்லாது.