Tuesday, February 20, 2018

ஸ்ரீ தாடீபஞ்சகம்

||ஸ்ரீமதே ராமாநுஜாய நம||
||ஸ்ரீமத் வரவரமுநயே நம||

தாடீபஞ்சகம்

இந்த அத்புதமான ஸ்தோத்ரம் ஸ்ரீகூரத்தாழ்வான் அருளிச்செய்தது என்றும், முதலியாண்டான் அருளிச்செய்தது என்றும் பெரியோர்கள் ஒருவாறு பணிப்பர். யார் அருளிச்செய்த ஸ்தோத்ரமானாலும், எம்பெருமானாரது விஜயங்களை எடுத்துரைப்பதாய், செவிக்கினிய செஞ்சொற்களாக அருளிச்செய்யப்பட்ட இந்த ஸ்தோத்ரம் நமக்கு நித்யாநுசந்தேயமாக இருக்க வேணும் என்னும் காரணத்தினால் ஸ்ரீ கூரத்தாழ்வான், ஸ்ரீ முதலியாண்டான் இருவருடைய தனியன்களையும் அவற்றின் பொருளோடு விண்ணப்பிக்கப்படுகின்றன.

ஸ்ரீ கூரத்தாழ்வான் தனியன்

பொருள்:

யவருடைய திவ்யஸ்ரீஸூக்திகள் எல்லாம் வேதமாகிற பெண்ணின் கழுத்துக்கு மங்களஸூத்ரமாக (மாங்கல்யமாக) விளங்க, அந்த ஸ்ரீவத்ஸசிஹ்நர் என்னும் திருநாமம் உடையவரான ஸ்ரீகூரத்தாழ்வானை வணங்குகிறேன்.

ஸ்ரீ முதலியாண்டான் தனியன்கள்

Audio Player

00:00

00:00

பொருள்:

1)யாரொருவர், எம்பெருமானாருடைய திருவடிநிலைகளாக (பாதுகைகளாக) அறியப்படுகிறாரோ, அந்த தாசரதி என்னும் திருநாமம் உடையவரான ஸ்ரீ முதலியாண்டானுடைய திருவடியிணைகளை அடியேனுடைய தலையால் தாங்குகிறேன்.

2)யாரொருவர் பக்தநகரமான தொண்டனூரில் (ராமாநுஜருடைய விஜயத்தைப் போற்றும்படி) தாடீபஞ்சகம் என்னும் உத்தமமான ஸ்தோத்ரத்தை அருளிச்செய்தாரோ, அந்த ராமாநுஜருடைய ப்ரியசிஷ்யரும், தாசரதி என்னும் திருநாமம் உடையவருமான ஸ்ரீ முதலியாண்டானை வணங்குகிறேன்.

முதல் ச்லோகம்

Audio Player

00:00

00:00

https://srivedanthasabhausa.files.wordpress.com/2018/01/dp01.mp3

பொருள்:

நாஸ்திகர்கள் பாஷண்டர்கள் எனப்படுபவர். காட்டுத் தீ வளர்த்தால் எவ்விதம் மரங்கள் அழியுமோ அது போன்று, எம்பெருமானார் பாஷண்டர்களை அழித்தார். சார்வாகர், பௌத்தர் முதலிய மலைகளை மிகவும் எளிதாக எம்பெருமானார் சாய்த்தார். பௌத்தம் என்ற இருளுக்குச் சூரியன் போன்று எம்பெருமானார் அவதரித்தார். ஜைனர்கள் என்ற யானைகளைச் சிங்கம் போன்று விரட்டினார். மாயாவாதிகள் என்ற நாகங்களைத் தனது நிழல் மூலமே அழிக்கின்ற கருடன் போன்று விளங்கினார். ஸ்ரீரங்கநாதனின் திருக்கோயிலைத் திருத்தி, பெருமையுடன் நின்றார்.

இரண்டாம் ச்லோகம்:

Audio Player

00:00

00:00

https://srivedanthasabhausa.files.wordpress.com/2018/01/dp02.mp3

பொருள்:

பாஷண்டம் (நாஸ்திர்கள்), ஷண்டம் (பௌத்தம் முதலானோர்) ஆகிய மலைகளை இந்திரனின் வஜ்ராயுதம் தண்டிப்பது போன்று எம்பெருமானாரின் த்ரிதண்டம் தண்டிக்கிறது. மறைமுகமான பௌத்தர்கள் என்ற பெரிய கடலைக் கலக்கும் மத்து போன்று எம்பெருமானாரின் த்ரிதண்டம் உள்ளது. “இருள் தருமா ஞாலம்” என்பதற்கு ஏற்ப வேதாந்தத்தின் ஆழ்பொருள்கள், இந்த உலகில் ஏகதண்டிகளின் (அத்வைதிகள்) பிடியில் சிக்கி நின்றது. அந்த இருளை நீக்கும் தீபமான த்ரிதண்டியாக எம்பெருமானார் நின்றார்.

மூன்றாம் ச்லோகம்:

Audio Player

00:00

00:00

https://srivedanthasabhausa.files.wordpress.com/2018/01/dp03.mp3

பொருள்:

எம்பெருமானாரின் த்ரிதண்டம் இந்த உலகில் உள்ள சிஷ்யர்களுக்கும் ஞானத்தை அளிப்பதற்காக உள்ளது. இந்த உலகில் பல விதமான வாதங்கள் தோன்றின். அவற்றை சீர் செய்து, சரியான வாதத்தை நிலைநாட்டிய த்ரிதண்டம் இதுவாகும். வேதாந்தத்தில் உள்ள ஸத்வித்யை, வாச்வாநார வித்யை போன்ற பல வித்யைகளை விளக்கிட்டு நமக்குக் காண்பிப்பதற்காக உள்ளது இந்த த்ரிதண்டமாகும். “கலியும் கெடும் கண்டு கொண்மின்,” என்று நம்மாழ்வார் அருளிச்செய்தது போன்று, கலியின் கொடுமைகள் அனைத்தையும் அழிக்கும் காலதண்டம் போன்றது. வேதங்களுக்குத் தவறான பொருள் கூறும் மதங்களால் தளர்ந்து போன வேத புருஷனுக்குக் கைகொடுக்கும் தண்டம் போன்றது. மூன்று உலகங்களையும் வெற்றி கொண்டதற்கு ஈடாக உள்ள வெண்கொற்றக்குடையின் மணிக்காப்பு போன்றது. எதிர்வாதம் செய்பவர்களின் தலைகளைத் துண்டாக்கும் வஜ்ரதண்டம் போன்றது – எம்பெருமானாரின் த்ரிதண்டமாகும்.

நான்காம் ச்லோகம்:

Audio Player

00:00

00:00

https://srivedanthasabhausa.files.wordpress.com/2018/01/dp04.mp3

பொருள்:
வேதம் என்ற பெண்ணின் கழுத்தில் ஸ்ரீமந்நாராயணனே நாயகன் என்று அறிவிக்கும் தாலி போன்று எம்பெருமானாரின் யஜ்ஞோபவீதம் உள்ளது. த்ரியுகம் என்பது எம்பெருமானாரின் ஒரு திநாமம் ஆகும். அப்படிப்பட்ட அவரது திருவடிகளை அடைவதற்குப் பற்றிக் கொண்டு ஏறும் கயிறு போன்று, இவரது யஜ்ஞோபவீதம் உள்ளது. மிகவும் உயர்ந்த வித்யைகள் மேலும் ப்ரகாசமாக எரியும் திரிநூலாக இவரது யஜ்ஞோபவீதம் உள்ளது. கலியில் கொடுமைகளை அழிப்பதற்கு வந்த எமனின் பாசக்கயிறு போன்று இவரது யஜ்ஞோபவீதம் உள்ளது. எம்பெருமானாரின் திருவடிகளை அடைந்தவர்களது உள்ளம் ஒரு தாமரை என்று வைத்துக் கொண்டால், இவரது யஜ்ஞோபவீதம் அந்தத் தாமரையின் தண்டு போன்று உள்ளது. மற்ற மதத்தவர்கள், தங்கள் மதப்படி தங்களது யஜ்ஞோபவீதத்தை துறந்தால் மட்டுமே மோஷம் அடைவர். ஆனால் அவர்கள் எம்பெருமானாரின் யஜ்ஞோபவீத அழகைப் பார்த்தவுடனேயே மோக்ஷம் அடையலாம்.

ஐந்தாம் ச்லோகம்:

Audio Player

00:00

00:00

https://srivedanthasabhausa.files.wordpress.com/2018/01/dp05.mp3

பொருள்:
படபா என்பது ஒரு பெண் குதிரையின் பெயராகும். அது கடலுக்கு அடியில் தனது முகத்தில் எப்போதும் நெருப்புடன் உள்ளதாகும். ப்ரளய காலத்தின் போது கடலிலிருந்து வெளி வந்து உலகை அழிக்கும் என்பது புராணங்கள் கூறுவதாகும். பாஷண்டர்கள் என்ற கடலுக்கு இப்படிப்பட்ட படபா அக்னி போன்று எம்பெருமானார் உள்ளார். ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைத் தனது தலையில் வைத்தபடி நின்று நீச மதங்களை அழித்தார். ஸ்ரீமந்நாராயணன் அமர்ந்துள்ள பரமபதம் செல்லும் வழியைக் காட்டினார். இப்படிப்பட்ட எம்பெருமானாருக்குப் பல்லாண்டு, யதிகளின் தலைவருக்குப் பல்லாண்டு.

ஸ்ரீ கூரத்தாழ்வான் வாழிதிருநாமம்:


ஸ்ரீ முதலியாண்டான் வாழிதிருநாமம்:


No comments:

Post a Comment