||ஸ்ரீமதே ராமாநுஜாய நம||
"சர்வம் விஷ்ணு மயம் ஜகத்"
சைவர்களால் திருமாலான சர்வேஷ்வரனை சிறுமை படுத்த திட்டமிட்டு புனையப்பட்ட கதைகளில் ஒன்றுதான் "அடிமுடி தேடிய கதை" இந்த மூட பங்கத்தை நிர்மூலமாக்கவே இந்த பதிவு..!
சைவர்கள் இயற்றிய கதையை பார்ப்போம்;
முன்னொரு காலத்தில் திருமாலும் திசைமுகனும் தானே கடவுளென்று பிணங்கி நிற்க; அவர்கள் வேறுபாட்டை நீக்கும் பொருட்டு அண்ணாமலையார்(சிவன்) அக்கினிப் பிழம்பான மலைவடிவமாய் அவர்கள் முன் தோன்றவே, திருமால் வராகமாய் அவனடியைத் தேடியும், பிரமன் அன்னமாய் அவன் முடியைத் தேடியும் அலைந்தார்களாம்..😀 நல்ல நகச்சுவை கதையொன்று இது.!
இதற்க்கான மறுப்பு இனி:-
"அண்ட மளக்க வடிக்கீ ழொடுங்கியுல குண்ட பொழுதுதரத் துள்ளொடுங்கி--- துண்டமதி சூடினான் மாலருளாற் றோன்றினான் ஆங்கவனைத் தேடினான் மாலென்ப தென்".
இதன் கருத்து:--- அண்டங்களனைத்தையும் திருமால் அளந்தான், அப்பொழுது அனைத்துலகங்களும் அவனடிக்கீழ் ஒடுங்கியது. பிரளய காலத்தில் காப்பதற்காக உலகையெல்லாம் உண்டான். அக்காலத்தில் உலகனைத்தும் அவனது திருவயிற்றில் ஒடுங்கியது ஸ்ருஷ்டிகாலத்தில் அருள்கொண்டு உலகனைத்தையும் உமிழ்ந்தான். அச்சமயம் பிறைசூடியாகிய சிவபெருமான் முதல் சகல ஜீவர்களும் மறுபடியும் தோன்றினர். இவ்வாறிருக்க சிவனடியைத் திருமால் தேடினான் என்பது ஏனோ? என்பதாகும்.
அண்டமளந்த வரலாறு.
விரோசனன் மகன் மாவலி. இவன் பெருவலி படைத்தவன்; வரபலம் மிக்கவன். இவன் தன் ஆற்றலால் மூன்று உலகங்களையும் வென்று தன் ஆட்சிக்குட்படுத்தினான். ஒரு சமயம் மாவலி வேள்வியொன்று இயற்றினான். அதுகாலை, இந்திரன் வேண்டுகோளுக்கிணங்கித் திருமால் வாமனனாகி மாவலிபால் சென்று மூவடி மண் வேண்டினான். அப்பொழுது அசுரகுருவாகிய சுக்கிரன், 'வந்திருப்பவன் மாயத் திருமால்; இவனுக்குத் தானம் கொடுக்காதே' என்று தடுத்தான். மாவலியோ குருவின் சொல்லையும் மீறி வாமனனுக்குத் தாரை வார்த்து பாரைக் கொடுத்தான். தானம் கொடுத்த மண்ணைத் திருமால் அளக்கத் தொடங்கினான். நெடு வடிவங்கொண்டு ஓரடியால் மண்ணுலகையும், மற்றோரடியால் விண்ணுலகையும் அளந்து மூன்றாமடிக்கு இடமில்லாமலிருக்கவே மாவலியின் முடியில் வைத்து அவனைப் பாதாளத்துக் கிறைவனாக்கினான் என்பது இவ்வரலாற்றினை----
"ஒருகுறளா யிருநில மூவடிமண் வேண்டி உலகனைத்து மீரடியா லொடுக்கி ஒன்றும் தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன்......" என்பர் திருமங்கையாழ்வார்,
இனி திருமால் அண்டமளந்த வரலாற்றினை அடியில் வரும் சான்றுகள் கொண்டு தெளிக.
"கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை"(பரிபாடல் 3-20)
"ஞாலம் மூன்றடித் தாய முதல்வதற்கு" (கலித்தொகை- நெய்தற்கலி 7)
"மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்"(அகம் 220)
[நெடியோன்--திரிவிக்கிரமனாகிய திருமால்]
"ஏமம் ஆகிய நீர்கெழு விழவின் நெடியோன் அன்ன நல் இசை"
(பதிற்றுப்பத்து 2-5)
"இருநிலம் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன்..."
(பெரும்பாணாற்றுப்படை)
"நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போல்"
(முல்லைப்பாட்டு)
"நீரும் நிலனும் தீயும் வளியும் மாக விசும்பொரு ஐந்துடன் இயற்றிய மழுவாள் நெடியோன் தலைவன் ஆக" (மதுரைக்காஞ்சி)
"கோள்வாய் மதியம் நெடியோன் விடுத்தாங்கு" (சிந்தாமணி)
"மூவுலகும் ஈரடியால் முறைதிறம்பா வகைமுடியத் தாவிய சேவடி"(சிலம்பு)
"திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்! நின் செங்கமல ரண்டடியால் மூலவுலகும் இருள்தீர நடந்தனையே"(சிலம்பு)
"வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீணில மளந்தோன் ஆடிய குடமும்"
(சிலம்பு)
எனப் பல இடங்களிலும் தமிழ்நூல்களிலும் திரிவிக்கிரமாவதாரம் பேசப்படுவது காண்க.
"வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி நீணிலம் அளந்தோன் மகன்முன் ஆடிய" (மணிமேகலை மலர்வளம் புக்க காதை)
"நெடியோன் குறளுரு வாகி, நிமிர்ந்து, தன் அடியிற் படியை அடக்கிய அந்நாள் நீரிற் பெய்த, மூரி வார்சிலை, மாவலி...."
(மணிமேகலை சிறைக்கோட்டம் - அறக்கோட்டம் ஆக்கிய காதை)
"நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி" (மணிமேகலை உலகவறவி புக்ககாதை)
என்று மணிமேகலையிலும் பல இடங்களில் வாமனதிரிவிக்கிரமா வதாரங்கள் பற்றிக் கூறுவன நோக்குக.
உலகப் பொது மறை என்று கூறப்படும் திருக்குறளிலே வள்ளுவனாரும்.
"மடியிலா மன்னவன் எய்தும்; அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு"(திருக்குறள்-610)
என்று கூறுவது காண்க.
"கானின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன் கூனின் றளந்த குறளென்ப..." (பொன்முடியார்-திருவள்ளுவமாலை)
"மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியான் ஞாலம் முழுதும் நயந்தளந்தான்..." (பரணர் -திருவள்ளுவமாலை)
"கண்ணகன் ஞாலம் அளந்தூஉம் காமருசீர்த் தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம்---- நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும் பூவைப்பூ வண்ணன் அடி."
(திரிகடுகம் கடவுள் வாழ்த்து)
"வைய மகளை யடிப்படுத்தாய் வையகத்தா ருய்ய வுருவம் வெளிப்படுத்தாய் ---வெய்ய
வடுந்திற லாழி யரவணையா யென்று நெடுந்தகை நின்னையே யாம்".(புறப்பொருள் வெண்பா மாலை)
எனப் பிற நூல்களிலும் உலகளந்த செய்தி வருவது காண்க.
தமிழ் அணங்குக்குச் சிறந்த அணிகலனாய் மிளிர்வது இறையனார் அகப்பொருளாகும். சிவபெருமானால் அருளிச்செய்யப்பெற்ற காரணத்தினால் இந்நூலுக்கு இறையனார் அகப்பொருள் என்று பெயர். இதற்க்கு உரை கண்டவர் தெய்வப்புலமை நக்கீரனார். இவர் கடைச்சங்கத்தில் வீற்றிருந்த புலவர் பெருந்தகையாவர், நக்கீரனார் எழுதிய உரையிலே எடுத்துக்காட்டாக அமைந்த பாடல்களில் சில திருமாலின் திரிவிக்கிரமாவதாரம் பற்றிப் பேசுகின்றன. இதனை அடியிற் காண்க;
வேழம் வினாதல்
"வருமால் புயல்வண்கை மான்தேர் வரோதயன் மண்ணளந்த திருமா லவன்வஞ்சி அன்னஅஞ் சீரடிச் சேயிழையீர்! கருமால் வரையன்ன தோற்றக் கருங்கைவெண் கோட்டுச் செங்கட் பொருமால் களிறொன்று போந்ததுண் டோநும் புனத்தயலே"(இறையனார் அகப்பொருளுரை 57)
"கொடியார் நெடுமதிற் கோட்டாற் றரண்கொண்ட கோன் பொதியிற் கடியார் புனத்தயல் வைகலுங் காண்பல் கருத்துரையான் அடியார் கழலன் அலங்கலங் கண்ணியன் மண்ணளந்த நெடியான் சிறுவன்கொல் லோவறி யேனோர் நெடுந்தகையே" (இறையனார் அகப்பொருளுரை -88)
"சென்றார் வருவது நன்கறிந் தேன்செருச் செந்நிலத்தை வென்றான் பகைபோல் மெல்லியல் மடந்தைமுன் வெற் நின்றான் அளந்த நிலமும் குளிர்ந்தது நீள்புயலால்[பெடுத்து
பொன்தான் மலர்ந்து பொலங்கொன்றை தாமும் பொலிந்தனவே".
(இறையனார் அகப்பொருளுரை 317)
சங்கினை வாழ்த்துதல்
"தேனிற வார்கண்ணிச் செம்பியன் மாறன் செழுங்குமரி வானிற வெண்திரை மால்கடல் தோன்றினை மண்ணளந்த நீனிற வண்ணனும் ஏந்தினன் தம்முன் நிறம்புரைதீர் பானிற வெண்சங்கம் யார்நின்னின் மிக்க படிமையரே". (இறையனார் அகப்பொருளுரை 314)
"திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்" என்ற நம்மாழ்வார் வாக்கினுக்கிணங்க, திருமாலின் பெருமையினை அரசர்கள் மேல் ஏற்றிக் கூறுவது பண்டைக் காலத் தமிழ்ப் புலவர்கள் மரபு. இம்மரபுக்கேற்ப நக்கீரர் உரையிலும் மாலின் புகழை மன்னன்மேல் ஏற்றிக் கூறினார். மேலும் சில பாடல்களும் காண்க:--
"வானுற நிமிர்ந்தனை வையக மளந்தனை பான்மதி விடுத்தனை பல்லுயி ரோம்பினை நீனிற வண்ணநின் நிரைகழல் தொழுதனம்." (யாப்பருங்கலக் காரிகை மேற்கோள்)
"முன்புலக மேழினையுந் தாயதுவு மூதுணர்வோர் இன்புறக்கங் காநதியை யீன்றதுவும் --நன்பரதன் கண்டிருப்ப வைகியதுங் கான்போ யதுமிரதம் உண்டிருப்பா ருட்கொண் டதும்
வெந்த கரியதனை மீட்டுமக வாக்கியதும் அந்தச் சிலையினைப்பெண் ணாக்கியதும் -- செந்தமிழ்தேர் நாவலன்பின் போந்ததுவு நன்னீர்த் திருவரங்கக் காவலவன் மாவலவன் கால்." (தண்டியலங்காரம் குளகச் செய்யுள் மேற்கோள்)
[வெந்த கரி -- கரிக்கட்டையான பரீட்சித்து. செந்தமிழ் தேர் நாவலன் --திருமழிசைப்பிரான்]
உலகளந்த வரலாற்றைக் கூறும் பாடல்கள் தண்டியலங்காரத்தில் மேலும் பல உண்டு. விரிவுக்கஞ்சி விடுத்தனம். இனி கம்பர் கூறுவதைக் காண்போம்.
"நின்றதாண் மண்ணெலா நிரப்பி யப்புறம் சென்றுபா விற்றிலே சிறிது பாரெனா ஒன்றவா னகமெலா மொடுக்கி யும்பரை வென்றதாள் மீண்டது வெளிபெ றாமையே."(கம்பராமாயணம்- வேள்வி 36)
பரம சைவராக விளங்கிய கவி ஒட்டக்கூத்தரும் இவ்வரலாற்றினை விட்டு வைக்கவில்லை. நக்கீரரைப் போல மாலின் பெருமையை மன்னன் மேலேற்றிக் கூறுகிறார்:----
"நவ்வி மடநோக்கான் ஞாலத்தை யோரடியால் வவ்வி யிருதோளில் வைத்தமால்."(குலோத்துங்க சோழன் உலா)
"மிக்கோ னுலகளந்த மெய்யடியே சார்வாகப் புக்கோ ரருவினைபோற் போயிற்றே-- அக்காலம்
கானகத்தே காதலியை நீத்துக் கரந்துறையும் மானகத்தேர்ப் பாகன் வடிவு." (புகழேந்திப் புலவர்: நளவெண்பா, கலிநீங்கு காண்டம் -7)
என்றார் புகழேந்தியும். கம்பர் ஒட்டக்கூத்தர், புகழேந்தி மூவரும் சமகாலப் புலவர்கள் என்பது பலர் கொள்கை. இவர்கள் மூவருமே உலகளந்த உத்தமன் வரலாற்றினைக் கூறுவது குறிக்கொள்ளத் தக்கது.
"போதங்கொண் மாணுருவாய்ப் புவியிரந்த அஞ்ஞான்று புகன்று கொண்ட வேதங்கள் நான்கினையும் வேதியர்பால் கேட்டருளி மீண்டும் கற்றே"
(கலிங்கத்துப்பரணி)
என்றார் சயங்கொண்டாரும்.
"தேடிய அகலிகை சாபம் தீர்த்ததாள் நீடிய உலகெலா மளந்து நீண்டதாள் ஓடிய சகடிற வுதைத்துப் பாம்பின்மேல் ஆடியுஞ் சிவந்ததா ளென்னை யாண்டதாள்"
(வில்லிபாரதம்)
என உலகளந்த திருவடியின் பெருமையினை வில்லிபுத்தூரார் பாரதத்தில் நயம்பட உரைப்பதை உணர்க.
"பூவரு மயன்முதல் யாவரு மறியா
மூவுல களந்தநின் சேவடி வாழ்த்தி"
(திருவரங்கக் கலம்பகம்)
"அடலவுணன் பாற்குறுகி அற்பநிலங் கையேற்றாய் கடலகிலம் யாவுமுந்தி காட்டுவது கண்டிலையோ."
(அழகர் கலம்பகம்)
என்பனவும் காண்க.
இதுவரை சங்க கால இலக்கியங்களிலிருந்தும், தொன்மையான சிறந்த தமிழிலக்கியங்களிலிருந்தும் சான்றுகள் காட்டப்பட்டன. இனி, காலத்தால் முற்பட்ட முதலாழ்வார்களுடைவும், திருமழிசைப் பிரானுடையவுமான அருளிச்செயலமுதத் திருவாககினை மட்டும் காண்போம். மற்றைய ஆழ்வார்கள் கூறுவதை திவ்யப்பிரபந்தத்தில் கண்டு தெளிக.
"நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால் சென்று திசையளந்த செங்கண்மால்"
(பொய்கையாழ்வார்)
"அடிமூன்றில் இவ்வுலகம் அன்றளந்தாய் போலும்
அடிமூன் றிரந்தவனி கொண்டாய்"
(பூதத்தாழ்வார்)
"வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால் மூவடிமண் நீயளந்து கொண்ட நெடுமாலே"
(பேயாழ்வார்)
"தாளால் உலகம் அளந்த அசைவேகொல் வாளா கிடந்தருளும் வாய்திறவான்"
(திருமழிசையாழ்வார்)
இனி, அடிமுடி தேடிய கதைக்கு மறுப்பான வெண்பாவின் மேல் பகுதியைக் காண்போம்.
உலகுண்டபொழுது......மாலென்பதென்?
இதன் கருத்து;
திருமால் பிரளய காலத்தில் அழியாமல் காக்க அனைத்துலகங்களையும் உண்டான். உலகங்கள் அனைத்தும் அவன் உதரத்துள் ஒடுங்கின. அக்காலம் பிரம்மன், சிவன், தேவர், மனிதர் முதலிய அனைவரும் திருமால் திருவைற்றுள் உறைந்தனர். சிருஷ்டி காலத்தில் தன் கருணையினால் உண்ட உலகனைத்தையும் உமிழ்ந்தான். அப்போது பிரம்மன் முதல் அனைத்துலகங்களும், பிறை சூடியாகிய சிவனும் தோன்றினர். உண்மை இவ்வாறிருக்க: சிவபெருமான் அடியைத் திருமால் தேடினான் என்பது எவ்வாறு பொருந்தும்? என்பது கருத்து. இக்கருத்தினை..
"அன்றுலக முண்டுமிழ்ந்தா யகிலசெகத் காரணனீ என்றுனக்கே யாளானோம் இமிழருவி வடமலைவாழ் மன்றல்கமழ் துழவோயுன் வயிற்றுளெங்களொடு கடை சென்றுறைந்து மீளவருந் தேவரை யாமதியோமே."[நாட்
என்று திருவேங்கடக் கலம்பகம் தெளிவாகக் கூறும்.
இனி இதன் சான்றுகள்:----
ஐம்பெரும் பூதங்கள், சூரிய சந்திரர்கள், மற்ற கிரகங்கள், பன்னிரு ஆதித்தியர், அஷ்டவசுக்கள், ஏகாதச ருத்திரர்கள், அசுவிநீ தேவர்கள், இயமன், உருத்திரன் முதலியவர்களும், மூவேழ்உலகமும், அவற்றில் உள்ள சராசரஜீவர்களோடு, உந்திக் கமலத்தில் தோன்றிய பிரமனும் திருமாலிடத்திலிருந்தே தோன்றினர் என்பதைப் பரிபாடல் தெளிவாக விளக்குவது காண்க;
"மா அயோயே! மாஅயோயே!
மறுபிறப் பறுக்கும் மாசில் சேவடி
மணிதிகழ் உருபின் மா அயோயே!
தீவளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்
ஞாயிறுந் திங்களும் அறனும் ஐவரும்
திதியின் சிறாரும் விதியின் மக்களும்
மாசில் எண்மரும் பதினொரு கபிலரும்
தாமா இருவரும் தருமனும் மடங்கலும்
மூவேழ் உலகமும் உலகினுள் மன்பதும்
மாயா வாய்மொழி உரைதர வலந்து
வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீயென மொழியுமால் அந்தணர் அருமறை."(பரிபாடல்-3)
மேலும், பரிபாடலிலே திருமாலின் வராகாவதாரம் பேசபபடுகிறது. ஆனால் வராக வடிவெடுத்து சிவனடியைத் தேடியதாக எங்குமே கூறவில்லை. ஊழி காலத்தில் நீரினுள் அமிழ்ந்த பூமியை வராகாவதாரம் எடுத்து மீண்டும் நிலைநிறுத்திய திருமாலின் முதுமையை எவரும் அறியார் என்றே உள்ளது.
"கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின் முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா
ஆழி முதல்வ! நிற்பேணுதும் தொழுது". (பரிபாடல் - 2)
என்றும்,
"புருவத்துக் கருவல் கந்தரத்தால்
தாங்கி, இவ்வுலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்
ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்".(பரிபாடல்-4)
என்றும் பரிபாடல் முதலான சங்கநூல்கள் திருமால் பெருமையைப் பாடுகின்றனவேயொழிய, சிவனடியை வராக வடிவெடித்துத் திருமால் தேடியதாக எங்குமே இல்லை. இது ஸுதர்சனம் ஆசிரியரால் சங்ககாலத் தமிழர் சமயத்திலும், சாதிமத ஆராச்சியிலும் விரிவாக நிலைநாட்டப்பெற்றுள்ளது. ஸுதர்சனம் வெளியீடான சோலைமலைக்குறவஞ்சியும்.
"சாலவே அனந்தன் தலையில் இடுப்புவியெலாம்
கோலமோர் துகளெனக் கொடுவந்து வைத்ததால்
சுவேத வராக கல்பப்பேர் சொல்லி
இவேதியர் முதலாய் இனம்சங்கல் பிக்கிறார்
அப்படிக் கிருக்க அருணைக் கல்லடியை
எப்படி அறியா திருந்ததென் றிசைத்தாய்?."
என்று கூறிச் செல்வது காண்க.
இனி. கூரேச விஜயத்தில், 'அடிமுடி தேடிய கட்சி என்ற அத்தியாயத்தின் உரைத் தொகுப்பினை அடியிற் காண்க:
"பிரளய காலத்தில் சிவனையும், சிவனைப் பெற்ற பிரமனையும், அவனால் படைக்கப்பட்ட தேவ, மனுஷ்ய, திரியக்ஸ்தாவரங்களையும், சிவனால் வசிக்கப்பட்ட கைலை முதலிய அஷ்டகுல பர்வதங்களையும், தன்னுடைய குக்ஷியில் தரித்திருக்க, இந்தச் சிவன் விஷ்ணுவினுடைய குக்ஷியை விட்டு நழுவி இருந்தானோ? இப்படியிருக்க விஷ்ணு வராகாவதாரம் பண்ணி, சேதனனான சிவனுடைய பாதத்தைத் தேடினாரென்பது வேத விருத்தமன்றோ?.........
"திருவண்ணாமலையின் பிரபாவத்தைக் கேளுங்கள். அதற்கு சுதர்சனகிரியென்று திருநாமம். அதனுடைய சரித்திரமாவது--- ஜைமினி பாரதத்தில் ஆரண்ய பர்வத்தில் தர்மநந்தனனுக்கு ரோமசரிஷி திவ்யதேசங்களின் பிரபாவங்களில், திருக்கோவலூர் திவ்யதேசத்தின் சரித்திரம் சொன்னவுடனே சுதர்சநகிரி மகாத்மியத்தைச் சொல்லுகிறார்....
"அதாவது; ஜகத் சிருஷ்டியின் ஆதியில் திருவாழி ஆழ்வானை லோக சிருஷ்டி பண்ணச் சொல்லி அனுப்ப, அவர் அப்படிச் செய்யாமலிருந்ததின்பேரில் பிரம்மாவை சிருஷ்டித்து ஜகத் சிருஷ்டி பண்ணச் சொல்லி நியமிக்க, அவரும் அப்படியே வெகுகாலம் கழித்ததின்பேரில், சிவனை சிருஷ்டித்து ஜகத் சிருஷ்டி பண்ணும்படி அனுப்ப, அவரும் அப்படியே அலட்சியமாயிருந்ததின்பேரில் ஒரு வராஹத்தை சிருஷ்டித்து ஜகத் சிருஷ்டி பண்ணும் படி அனுப்பினார். அந்த வராஹத்தைக் கண்ட பிரம்மா, நீர் யார்? எதற்கு வந்தீர்?' என்று கேட்க, 'நான் சிருஷ்டி பண்ணும்படி ஸ்ரீமகா விஷ்ணு (வினாலே) அனுப்ப வந்தேன் என்ன. அதற்க்கு பிரம்மா கோபித்து, 'என்னை சிருஷ்டிங்கும் படி அனுப்பியிருக்கிறாரே' என்று வராஹத்துடன் வாதம் செய்கையில் சுதர்சந ஆழ்வான்,
'ஒருவருக்கொருவர் சம்வாதம் நேரிட்டால் மத்யஸ்தராவார்கள் இருவரையும் சமாதானம் பண்ணாமல் பார்த்துக்கொண்டிருப்பார்களாகில் அவர்களுக்கு நரகமுண்டு' என்று வேதத்திற்சொல்லுகையால் தான் மத்யஸ்தராய் வந்து, 'ஓய்! வராஹ மூர்த்தியே! நீர் லோக சிருஷ்டி பண்ண வந்தேன் என்று சொல்லுகிறீர், உம்முடைய வியாபாரம் மிகப் பெரிதாயிருக்கையால் இதோ நான் பர்வத ரூபமாயிருக்கிறேன், என்னை நீர் கெல்லுவீராகில், நீர் சிருஷ்டிக்க சாமர்த்தியமுடையவரென்று நம்புகிறேன்' என்று சொன்னார்."
வராஹ மூர்த்தியும் அப்படியே அந்த சுதர்சநகிரியை தம்முடைய கோர தந்தங்களினாலே பேர்த்தெறிந்தது மல்லாமல் விஸ்வரூபம் தரித்து மஹத்தான உக்கிரத்துடனே சேவை சாதிக்கையில், திருவாழியாழ்வானும் பிரம்ம ருத்திரர்களும் வேத வாக்கியங்களினாலே தோத்திரம் செய்து, கோபத்தை சாந்தம் பண்ண வேண்டும் என்று பிரார்த்திக்கையில், அப்படியே ஸ்ரீஸ்வாமியானவர் திருவுள்ளத்தில் சந்தோசமுண்டாய் பிரம்மாவை அழைத்து 'நீர் லோக சிருஷ்டியைப் பண்ணக்கடவீர்' என்றும், ருத்திரனை அழைத்து 'நீர் சங்காரத் தொழிலைப் பண்ணக் கடவீர்' என்றும் நியமிக்க; அப்போது சிவன் ஸ்வாமியை மிகவும் தோத்திரம்செய்து, 'இந்த கொடிய வியாபாரம் அடியேனுக்கு நியமிக்க வேண்டாம், என்று கண்ணுங் கண்ணீருமாய் அழுததின்பேரில், ஸ்வாமி கிருபை கூர்ந்து, 'ஆகில் நீர் சூரியனைப் பார்க்கக்கடவீர், அவனிடத்தில் நின்றும் வைவஸ்வத மனு என்கிற இயமன் உண்டாவான், அவனைக்கொண்டு நித்ய சம்ஹாரங்களைப் பண்ணுவிக்கடவீர், முடிவில் நீர் சுதாவாய் பிரளயகால ருத்திர ரூபத்தைத் தரித்து சர்வ சம்ஹாரம் பண்ணக்கடவீர்' என்று நியமித்தார்
"சிவனுக்கு அந்த சுதர்சநகிரியின் அடிவாரத்தில் ஒரு ஆலயம் பிரஷ்டை பண்ணும்படியும், தம்மையும் அவ்விடத்தில் விஷ்ணுஸ்தலமாய் பிரதிஷ்டை பண்ணும்படியாகவும் நியமித்து, உத்ஸவங்கள் நடந்தேறி வருகிறதாய் ஜைமினி பாரதத்தில் ஏழு அத்தியாயங்களில் இந்தச் சரித்திரம் சொல்லப்பட்டிருக்கிறது"
"அதன் பின் வல்லாளகண்டன் என்ற அரசனால் அந்த விஷ்ணுஸ்தலம் சிவஸ்தலமாக்கப் பட்டது. அதற்க்கு ஒரு மாகாத்மியமும் உண்டாக்கப்பட்டது".
"இந்த சுதர்சநகிரிக்கும் அண்ணாமலை என்ற பெயருண்டாக்கி, சிவனுக்குப் பாட்டனான விஷ்ணுவானவர் வராஹரூப மெடுத்துப் பேரனுடைய பாதத்தைத் தேடினார் என்றும், சிவனுக்கு பிதாவான பிரம்மாவானவர் குமாரனுடைய சிரசைத் தேடினார் என்றும், இந்தப் பொய்களுக்குத் தகுதியாய், தாழம்பூ பொய்சாட்சி சொன்னதாயும், அதற்க்காகத் தாழம்பூ தேவார்ஹமல்லாதே போகக்கடவதென்று சபித்ததாயும் இந்தக் கதை ஸ்காந்தபுராணத்தின் பூர்வபாகத்தில் சொல்லப்பட்டிருக்கிறதென்றும் சொல்வது வேதங்களுக்கும் இதிஹாசமாகிய பாரதத்திற்கும், புராணங்களுக்கும் விரோதிக்கிரதுமல்லாமல் பௌத்திரன் காலைப் பாட்டன் தேடுகிறதும், புத்திரன் சிரசைப் பிதா தேடுகிறதுமாகச் சொல்லுகிறது யுக்தி விரோதமுள்ளதாய், பரிஹாஸாஸ்பதமாகவிருக்கிறது."
"விஷ்ணுவானவர் பாதளத்தில் கீழே ஆதிகூர்மமாயும், அதற்க்குமேல் ஆதிசேஷனாயும், அவதரித்திருக்கச் சிவனுடைய காலைத் தேடிக் காணாதே போய்விட்டாரென்று சொல்வது புராண விரோதமென்று கண்டித்தார்."
[கூரேச விஜயத்தின் உரைத் தொகுப்பு]
எனவே அடிமுடி தேடிய கதை ஒரு பொய், புரட்டு, புனைப்பு கதை என்பது தெரிகிறது.
"சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
எம்பெருமானார் திருவடிகளே சரணம்..!
கூரேசர் திருவடிகளே சரணம்...!
ஆதாரம்:-[திவ்யகவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய 'பரப்பிரம்ம விவேகம்' என்னும் மகத்தான படைப்பில் இருந்து]
பரபிரம்ம விவேகம் pdf கிடைக்குமா ஸ்வாமி
ReplyDeleteபரபிரம்ம விவேகம் புத்தகம் வேணும் ஸ்வாமி. 8608229400
ReplyDeleteபஞ்சராத்திரக் கழுதையே! உனது உலறல்களைக் கண்டித்தும் நீ நிறுத்தாமல் பேசுகிறாய் வில்லிபாரதப் பாடலே அடிமுடி தேடிய கதையச் சொன்னபோது உனக்கு இந்த விபரீத புத்தி ஏன் வந்ததோ தெரியவில்லை.
ReplyDelete"இன்னம் பலபல யோனியில் எய்தா நெறிபெறவே முன்னம் பலரடிமுடி தேடவுமெட்டா
அன்னம் பலபயில்வார் அணிதில்லையுள்" என்று தீர்த்த யாத்திரைச் சருக்கத்திலும்
"ஓரேனம் தனைத் தேட ஒளித்தரும் இருபாதத் தொருவன்" ,
"புள்மிசைக் கொடியோர் இருவருங் காணாப் புண்ணியன்" என்று அருச்சுனன் தவநிலைச் சருக்கத்திலும் சொல்லியிருந்தும் வாயடங்கவில்லையே
உன்னைப் போன்றவர்களை வைவஸ்தனே திருத்த வேண்டும்.
மகாமூடனான நீ சிவநிந்தை செய்யவே இப்படி எல்லாம் பேசுகிறாய் நீ கெட்டதோடு அல்லாமல் மற்றவர்களையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்குகிறாய்
பிள்ளைப் பெருமாள் ஒரு திருடன். அவனுடைய பாடலைக் கொண்டு நீ பரத்துவம் சாதிக்கப் புகுந்தது முடவன் கொம்புத்தேனுக்கு
ஆசைப்படுவது போன்றது.
அப்பர் சுவாமிகள் தேவாரத்தைப் பாரத்து அப்படியே புலம்பியழுத அவனுடைய திருட்டுப் பாடல் செல்லுமோ?
அண்ணாமலை விஷ்ணுத்தலம் எனில் உனது பேயாழ்வார்கள் பன்னிருவரும் ஏன் பாசுரம் செய்யவில்லை?
'ப்ரஹ்மா விஷ்ணு ரஜஸாபத்தவைரெளமத்யே தயோந்த்ருச்யதி ஜாதவேதா: ஸ்தாணு ருத்ரஸ்திஷ்டத் புவனஸ்ய கோப்தா| த்ருஷ்ட்வா ஸ்தாணு முப்ரம்ய யுத்தம் ப்ரதஸ்ததுர் தூர மஸெளதித்ருக்ஷ¤:| வரஹெள விஷ்ணுர்ணிம மஜ்ஜபூமெள ப்ரஹ்மோத்பபாத பூமேர்த்தி வமாசுக் ருத்ர:' (பிரம விஷ்ணுக்கள் இராஜஸ மேலிட்டுச் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில் இருவருக்கும் நடுவில் ஸ்ரீருத்ரபகவான் அக்னி ஸ்தம்பமாகப் புவனங்களை ரக்ஷ¢க்கும்படி தோன்றினார். அதைப் பார்த்த மாத்திரத்தில் தங்கள் சண்டையை நிறுத்திவிட்டுத் தூரமாய் விலக்கிவிட்டார்கள். பின்னர் விஷ்ணுவானவர் வராகமாகிப் பூமியிலிருந்து கீழே தேடிக்கொண்டு போனார். பிரம்ஹாவானவர் பட்சியாகிப் பூமியிலிருந்து மேலே தேடிக்கொண்டு போனார்) என்ற பாஸ்கர ஸம்ஹிதையும் அக்கதைக்கு ஆதாரமாக இருக்கிறது
மூதேவி ஒருவன் எழுதிய கூரேச விஜயத்தையும் பரப்பிம்ம விவேகத்தையும் வைத்துக் கொண்டு கூத்தாடும் பரதேசியே!.
ReplyDeleteநீ எங்கே உருப்படப் போகிறாய்?
அருணாசலம் சிவஸ்தலம் என்பதலாலல்லவா வில்லிபாரதம் தீர்த்த யாத்திரைச் சருக்கத்தில்
"பெற்றாள் சக அண்டங்கள் அனைத்தும் அவை பெற்றும்
முற்றா முகிழ் முலையாளொடு முக்கண்ணர் விரும்பும்
பற்றாம் என மிக்கோர் இகழ் பற்று ஒன்றினும் உண்மை
கற்றார் தொழும் அருணாசலம் அன்போடு கைதொழுதான்" என்று கூறியது?
சுருதிஸ்மிருதி விரோதமானதும் பொய் எல்லாம் சேர்ந்து ஓர் உருக் கொண்டதும் அவைதிகர்கள்
கொண்டாடுவதும் நரகத்திற்கு வாயிலாவதுமான கூரேச விசயம்,பரப்பிரம்ம விவேகம், பிரபந்தம்,இருசமயவிளக்கம் போன்ற நூல்களைப் புலையர்களைத்
தவிர வேறு யாரும் படிக்கமாட்டார்கள்.
ஸ்கந்தபுராணம் முதலான புராணங்களனைத்தும் அதனை முத்தித்தலம் என்றும் அந்த மலையே சிவன் என்றும் கூறுகிறது.
மூடமதி படைத்தவனே!உங்கள் விஷ்ணுபுராணங்களில் அருணாசலம் விஷ்ணுஸ்தலம் என்று சொல்லப்பட்டிருக்கிறதா? புராணங்களில் சில விஷ்ணுஸ்தலங்கள் தவிர வேறு 108 விஷ்ணுஸ்தலமும் சொல்லப்படவே இல்லை. அவைகள் எல்லாம் பின்னால் எழுந்தன.
பேராசை மதியோடு காசியையும் அருணாசலத்தையும் விஷ்ணுத்தலம் என்று வஞ்சகமாகப் பிரசங்கித்தால் அது செல்லாது.ஏற்கனவே மூடர்கள் திருவேங்கடத்தையும் பழமுதிர்ச்சோலையையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டனர். இப்போது அருணாசலத்தின் மேலும் உனக்குப் பேராசையா?
அது நடக்காது! நடக்காது!
ச்சீ தூ
ReplyDeleteதமிழர் வரலாறு எல்லாம் போலி பொய் புராணமாக
ReplyDeleteநீங்கள் கூறும் அனைத்து கட்டுகதையே சிவனின் அடியையும் முடியையும் விஷ்ணு காணமுடியாமல் தோற்று ஓடினார் என்பதே உண்மை கிருஷ்ணர் விஷ்பரூபம் எடுத்தார் என்று நீங்கள் உருட்ட வில்லையா🤣🤣🤣🤣🤣🤣🤣
ReplyDeleteஆதி முதல் அந்தம் வரை எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரே இறைவன் பரமசிவன் மட்டுமே விஷ்ணு எடுத்த பத்து அவதாரத்திலும் அவர் சிவபெருமானையே வழிப்பட்டார் சிவன் ஒருவனே இறைவன் அவனுள் விஷ்ணு அடக்கம்
ReplyDeleteஉலகையே படைத்த பிரம்மாவுக்கும் உலக மக்களை ரட்சிப்பதே தன் கடமை என அருளை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவுக்கும் எப்படியிருக்கும் , யோசித்துப் பாருங்கள்.
ReplyDeleteஇந்த உலகையே படைக்கும் பிரம்மனுக்கு,, தான் மிகவும் உயர்ந்தவன் என்ற கர்வம் உதித்தது. ஆணவம் தலைக்கேறியது. அரவணையில் துயில் கொள்ளும் திருமாலை வலியத் தேடிச் சென்றார். ‘இந்த உலகமே எனது படைப்பு. ஆகவே, நானே பெரியவன்; பெருமைக்கு உகந்தவன்’ என்று எகத்தாளத்துடன் சிரித்தார்.
அதைக் கேட்டு இடிமுழங்கச் சிரித்தார் மகாவிஷ்ணு. ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருந்தவர் விருட்டென்று எழுந்தார். மரம் வைத்தால் போதுமா. தண்ணீர் ஊற்ற வேண்டாமா. மரத்தை வைத்தது பிரம்மா. மக்களுக்கு அருள் செய்யும் பணி செய்வது திருமால். மனதில் நினைத்துக் கொண்டார். ’இனிய பிரம்மாவே... நீயே என் உந்தியில் இருந்து உதித்தவன் என்பதை மறந்துவிட வேண்டாம். ஆகவே படைத்தவனை விட, படைப்பைக் காப்பவனே உயர்ந்தவன். மறந்துவிடாதே’ என்றார் மகாவிஷ்ணு.
அப்போது அங்கே வந்தார் நாரதர் பெருமான். அவ்வளவுதான். இனி சொல்லக் கேட்கணுமா? சொல்லித் தான் தெரியணுமா?
பிரம்மா உயர்ந்தவர்தான். மகாவிஷ்ணுவாகிய நீங்களும் உயர்ந்தவர்தான். அதேசமயம் உங்களை விட உயர்ந்தவர் சிவபெருமானே என்று கொளுத்திப் போட்டார். இரண்டுபேரும் கோபமானார்கள்.
இதையெல்லாம் அறிந்த ஈசன், அங்கே தோன்றினார். கள்ளச்சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் நாரதர்.
’சரி... இருவரில் யார் எனது அடியையோ அல்லது முடியையோ தொடுகிறீர்கள் என்று பார்ப்போம். அப்படி யார் தொடுகிறார்களோ காண்கிறார்களோ அவரே முதன்மையான வர், பெருமைக்கு உரியவர்’ என்றார் சிவனார்.
அதன் பிறகுதான் நடந்தது சிவனாரின் திருவிளையாடல்.
ஈசனின் அடியையும் முடியையும் தேடும் படலத்தில் இறங்கினர் இரண்டுபேரும். சிவனார் விஸ்வரூபமெடுத்து நின்றார். பெருமாள், அடியை... சிவனாரின் திருவடியைத் தேடிப் புறப்பட்டுப் போய்க் கொண்டிருக்க, பிரம்மாவோ, சிவனாரின் முடியைத் தேடி அதாவது சிரசைப் பார்க்கும் நோக்கத்தில் மேலே மேலே என போய்க் கொண்டே இருக்க, சிவனாரின் விஸ்வரூபமெடுத்தபடி இருக்க... தேடிக் கொண்டே இருந்தனர்.
பிறகு ஒருகட்டத்தில், ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியாக திருவடிவம் கொண்டு ஓங்கி உயர்ந்து நின்றார். பரமேஸ்வரன். ம்ஹூம்... முடியவே இல்லை. ஆனாலும் தொடர்ந்தனர் பிரம்மாவும் மகாவிஷ்ணுவும்.
அவரது திருவடி பாதாளங்கள் ஏழினையும் தாண்டியது. கிடு கிடுவெனக் கீழே இறங்கிக் கொண்டே சென்றது. மகாவிஷ்ணுவால் தொடரவே இயலவில்லை. திருமுடியோ அண்டங்களின் மேல் முகடுகளைப் பிளந்து கொண்டு மேலே மேலே, இன்னும் இன்னும் என உயர்ந்தபடி சென்றிருந்தது. .
உடனே , வராக அவதாரம் எடுத்த திருமால், பூமியை, பாதாளத்தைக் குடைந்து குடைந்து சென்றூ கொண்டே இருந்தார். சிவனின் திருவடி வளர்ந்துகொண்டே சென்றதால், முயற்சியைக் கைவிட்டு முழு முதல் மூர்த்தியாம் சிவனைத் தொழுது நின்றார். இரக்கம் காட்டக் கூடாதா என்று உள்ளே பிரார்த்தித்தார்.
அடுத்து, அன்னப் பறவையென உருவம் கொண்டார் பிரம்மா. பற பற என மேலே பறந்தபடி இருந்தார். சிவனாரின் திருமுடியைக் காணும் முயற்சியில் முழு மூச்சுடன் முனைந்தார்.
அழல் உருவின் ஆற்ற வொண்ணா வெப்பத்தால் வெந்தது அன்னத்தின் சிறகுகள். கீழே விழுந்தார் பிரம்மா. அப்படி விழும்போது சிவனாரின் தலையில் இருந்து தாழம்பூ ஒன்று, மேலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தது. அந்தப் பூவின் இதழைக் கண்டதும் உற்சாகமானார் பிரம்மா. அந்தத் தாழம்பூவைச் சாட்சியாக்கிக் கொண்டார். பொய்சாட்சி. ‘சிவமுடியைப்
பொய்சாட்சி. ‘சிவமுடியைப் பார்த்தேன்’ என்று பிரம்மா சொல்ல, தாழம்பூவும் ஆமாம் ஆமாம் என்றது பிரம்மாவுக்காக!
ReplyDeleteசிவனாரின் திருவடியையோ திருமுடியையோ பார்க்காததும் பார்க்க முடியாததும் குற்றம் அல்ல. ஆனால் உண்மையாக இல்லை பிரம்மா. பொய் வேறு சொல்ல... கொதித்துப் போன சிவபெருமான். பிரம்மாவுக்கு ஆலயம் இல்லாது போகவும் தாழம்பூ, பூஜைக்கு உகந்ததாகப் பயன்படுத்தமாட்டார்கள் என்றும் சபித்தார்.
சிவபெருமானே முழு முதற் பரம்பொருள் என்பதை திருமாலும் பிரம்மாவும் உணர்ந்தனர். நமஸ்கரித்தனர். மாமலையாக, ஜோதியாக உருவெடுத்து விஸ்வரூபமாக இருந்த பரமேஸ்வரன், அவர்களுக்கு லிங்கோத்பவராக திருக்காட்சி தந்தருளினார்.
ஆதியும் அந்தமுமாக விஸ்வரூபம் காட்டி நின்ற இடம்... மலையென ஓங்கி உயர்ந்து நின்ற இடம்... ஜோதியென திருவுருவம் காட்டி நின்றருளிய இடம்... திருவண்ணாமலை. அதனால்தான் இங்கே உள்ள இந்தத் தலத்தின் நாயகனுக்கு, சிவனாருக்கு, அண்ணாமலையார் என்றும் அருணாச்சலேஸ்வரர் என்றும் திருநாமங்கள் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்!
சிவனார் கருணாமூர்த்தி. அம்பாள் கருணைக் கடல். அவளின் திருநாமம் - உண்ணாமுலை அம்பாள். அதாவது சம்ஸ்கிருதத்தில் அபிதகுசாம்பாள்!
மலையைப் போலவே ஊரின் அளவுக்கு பிரமாண்டம் காட்டி நிற்கிறது அண்ணாமலையார் ஆலயம். எத்தனையோ மன்னர் பெருமக்கள், அவரவர்களின் ஆட்சியில், இந்தத் தலத்தின் உன்னதங்களையும் மகோன்னதங்களையும் அறிந்து, வியந்து, சிலிர்த்து ஏராளமான திருப்பணிகளைச் செய்திருக்கிறார்கள்.
ஆறு பிராகாரங்கள். ஒன்பது கோபுரங்கள். நான்கு திசைகளிலும் நான்கு உயரமான கோபுரங்கள் எனக் கம்பீரமாகக் காட்சி தருகின்றன அருணாச்சலேஸ்வரர் கோயில். ஒவ்வொரு கோபுரத்தின் பின்னணியிலும் சுவையான வரலாறு பொதிந்திருக்கிறது.
ராஜகோபுரத்தின் வழியே நுழைந்தால் சுமார் நூறு, நூத்தம்பைது அடி தூரத்தைக் கடந்தால்தான் முதல் பிராகாரத்தையே அடைய முடியும். ராஜகோபுரத்தின் உட்புறம் நடக்கும்போது வலப் புறமும், இடப்புறமும் பார்த்தால் கோபுரத்தின் உட்புறத்தில் அவ்வளவு அற்புதமான நுட்பமானச் சிற்பங்கள்!
வலப்புறத்தில், எதிரே... விஸ்தாரமாக அமைந்திருக்கிறது ஆயிரங்கால் மண்டபம். இந்த ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் இருக்கும் பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி, விசேஷமானது. அபூர்வமானது. மகா சக்தியை உள்ளடக்கியது. அந்த இடத்தில் நின்று வழிபடுவோருக்கெல்லாம் உன்னத சக்தியை வழங்கக் கூடியது. அதை உணர்ந்து அங்கே தபஸ் செய்தவர்கள் பலர் உண்டு. அவர்களில் முக்கியமானவர் யார் தெரியுமா?
அதற்கு முன்னதாக, அங்கே இடதுபுறத்தில் கம்பத்து இளையனாராக அருணகிரிநாதருக்குக் காட்சி கொடுத்த முருகப்பெருமானின் கோயில் அமைந்துள்ளது. இந்த முருகன் கோயிலுக்குத் தெற்கில் சிவகங்கை தீர்த்தக் குளம். அருணகிரிநாதருக்கு அருளும் ஞானமும் கிடைத்த அற்புதச் சந்நிதி இது.
அண்ணாமலையையும் திருவண்ணாமலையின் தொன்மையையும் உணர்ந்து புரிந்து கொண்டிருந்த ராம்சுரத் குன்வர், அருணகிரியாரையும் அறிந்து கொண்டார். மெய்சிலிர்த்தார். முருகப்பெருமான், அருணகிரிநாதருக்கு அருளிய விளையாடல்களில் மனம் லயித்தார்.
அப்படியே, அந்த பாதாளலிங்கேஸ்வரரையும் அவர் அமைந்திருக்கும் சந்நிதியின் சாந்நித்தியத்தையும் உணர்ந்து வியந்தார். அங்கே தபஸ் செய்தவரையும் அறிந்தார். புரிந்தார். உணர்ந்தார். சிலிர்த்தார். தரிசிப்பது என விரும்பினார்.
அங்கே... பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதியில் தவமிருந்தவர், ராம்சுரத் குன்வர் தரிசிக்க வேண்டும் என விரும்பிய அந்த மகான்... பகவான் ஸ்ரீரமண மகரிஷி!
திருப்பதியே முருகன் கோவில் அதனை ஆட்டைய போட்டு விட்டு வெட்கம் இல்லாமல் Post போடுற
ReplyDeleteதிருச்சியில் இருக்கும் அரங்கநாதர் கோவில் ஒரு சிவாலயம் அதனை வைணவர்கள் திருவிட்டனர்
ReplyDelete