Tuesday, February 20, 2018

ஸ்ரீ ப்ரார்த்தநா பஞ்சகம்

||ஸ்ரீமதே ராமாநுஜாய நம||
||ஸ்ரீமத் வரவரமுநயே நம||

ஸ்ரீ ப்ரார்த்தநா பஞ்சகம்

முதல் ச்லோகம்:

Audio Player

00:00

00:00

பொருள்:

யதிகளின் தலைவரே! கைங்கர்ய ஸ்ரீயை உடையவரே! பரமமான க்ருபையோடே (அடியேனுடைய) ஆசார்யரான நடாதூர் அம்மாளைப் பார்த்து, அடியேனுடையதான இந்த விண்ணப்பத்தை தேவரீர் திருச்செவிசாற்றியருள வேணும்.

இரண்டாம் ச்லோகம்:

Audio Player

00:00

00:00

பொருள்:

எண்ணற்ற காலங்கள் பாவங்களையே செய்து, அதன் வாசனையானது என்னுள்ளே ஊறிக் கிடக்கிறது. யதிராஜரே! இதனால் நான் தவறுகளைத் தொடர்ந்தபடி உள்ளேன். இவ்விதம் இருக்கின்ற உலக விஷயங்களில் இருந்து எனது புலன்களை மீட்கவேண்டும்.

மூன்றாம் ச்லோகம்:

 Audio Player

00:00

00:00

பொருள்: 

யதிராஜரே! நான் உம்மிடம் புத்திரன், வீடு, செல்வம் முதலானவற்றைக் கேட்கக் கூடும். ஆனால் அவற்றை விலக்கி, நீவீர் எனக்கு வைராக்யத்தை அளிக்கவேண்டும் – காரணம் எனது நன்மையை மட்டுமே அல்லவா நீவிர் எண்ணியபடி உள்ளீர்.

நான்காம் ச்லோகம்:

Audio Player

00:00

00:00

பொருள்:

யதிராஜரே! முக்தி அடியும் வரையில், இந்த உடலுடன் இங்கு வாழும் நான், ஒருபோதும் பகவானையோ அவனது அடியார்களையோ அவமானப்படுத்திவிடக்கூடாது.

ஐந்தாம் ச்லோகம்:

Audio Player

00:00

00:00

பொருள்:

லக்ஷ்மணமுனியே! இந்த உடல் பிரியும் காலம்வரை நான் உமது ப்ரபந்தங்களையே ஆராய்ந்தபடி, அவற்றையே காலக்ஷேபம் செய்தபடி எனது பொழுதைக் கழிக்கவேண்டும்.

பலச்ருதி ச்லோகம்:

Audio Player

00:00

00:00

பொருள்:

யதிராஜரின் திருவடிகளின் மீது வைக்கப்பட்ட இந்த ஐந்து விண்ணப்பங்களை யார் ஒருவர் பக்தியுடன் படிக்கிறார்களோ, அவர்கள் எம்பெருமானாரின் திருவடிகளின் மீது மேலும் பக்தி பெறுவர்.

தானுகந்த திருமேனி

தானான திருமேனி

எம்பெருமானார் வாழி திருநாமம்:

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே
சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே

எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வருக்கும் எண்ணான்குரைத்தான் வாழியே
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே
தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே
தெண்டிரை சூழ்பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்யதிருவாதிரையோன் வாழியே

சீராருமெதிராசர் திருவடிகள் வாழி
திருவரையிற்சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்யவடிவெப்பொழுதும் வாழி
இலங்கிய முன்னூல்வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்யசெய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞானமுத்திரை வாழியே

அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறுகலியைச் சிறிதுமறத் தீர்த்துவிட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்திவைத்தான் வாழியே
மறை அதனில் பொருளனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே
மாறனுரைசெய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே
அறமிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாருமெதிராசர் அடியிணைகள் வாழியே

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

No comments:

Post a Comment