||ஸ்ரீமதே ராமாநுஜாய நம||
சிவனின் பிறப்பு
ருத்ரனின் பிறப்பு பற்றி வேதங்களில் சொல்லபட்டிருக்கின்றன அவற்றை கீழே காண்போம்
"நாராயணாத்3 ப்3ரஹ்மா ஜாயதே | நாராயணாத்3 ரு3த்ரோ ஜாயதே |"
- நாராயணோபநிஷத்
(நாராயணனிடமிருந்து பிரமன் உண்டானான் ;நாராயணனிடமிருந்து ருத்ரன் உண்டானான் )
புநரேவ நாராயணஸ் ஸோந்யத்காமோ மனஸா த்4யாயத தஸ்ய
த்4யாநந்தஸ்த2ஸ்ய லலாடாத் தர்யக்ஷ சூலபாணி: புருஷோ ஜாயதே "
- மஹோபநிஷத்
(நாராயணன் மறுபடியும் மனஸ்ஸினால் ஸங்கல்பித்தார் . அவர் ஸங்கல்பம் பண்ணி முடிந்தவுடன் நெற்றியிலிருந்து மூன்று கண்களை உடையவனும் சூலத்தை கையில் தரித்தவனான ஒரு புருஷன் உண்டானான் )என்று மஹோபநிஷத் சிவனின் பிறப்பை பற்றி பேசிற்று.
"விரூபாக்ஷய த3ந்தாஞ்ஜயே ப்3ரஹ்மண : புத்ராய நம:" என்றுஸாமவேதம் முக்கண்ணன் பிரமனின் புத்ரன் என்றது.
"ஸ ப்ராஜாபதிரேக : புஷ்காரபர்னே ஸமப4வத் |
லலாடத் க்ரோத4ஜோருத்ரஸ்த்ர்யக்ஷ:க2ண்ட3பரசுரஜீஜநத் ||"
- அதர்வணவேதம்
(அந்த பிரமன் ஒருவனே தாமரையில் உண்டானான் . (அவனுடைய)நெற்றியிலிருந்து க்ரோதத்தினாலுண்டானவனும்,கண்டபரசு என்ற பெயரையுடையவனும் முக்கண்ணனுமான ருத்ரன் உண்டானான் ) . என்கிறது பண்டைய மறை.
இவ்வாக்கியங்களில் பரஸ்பர விருத்தமாக ஒரு வாக்கியம் நாராயணன் ருத்திரனை படைத்தான் என்றும் இன்னொரு வாக்கியம் பிரமன் ருத்ரனை படைத்தான் என்றும் இருக்கிறது. இதற்கு இரண்டுவிதமாக ஸமாதானம் சொல்லலாம். ஒரு கல்பத்தில் நாராயணனிடமிருந்தும், ஒரு கல்பத்தில் பிராமனிடமிருந்தும் சிவன் உண்டானதாக கொள்ளலாம் . இதை'கல்ப பேதத்தைக்கொண்டு பரிஹரிப்பது ' என்பார்கள். 'நாராயணனிடமிருந்து ருத்ரன் உண்டானான் ' என்று வரும் வாக்கியங்களிலுள்ள நாராயண பதம் பிரமனை சரீரமாகக்கொண்ட நாராயணனை குறிக்கிறப்படியால் 'நாராயணன் ஸ்வசரீரபூதனான நான்முகன் மூலமாக சிவனைப் படைத்தான்' என்பதாகவும் கொள்ளலாம்.'நாராயணனிடமிருந்து இந்திரன் உண்டானான் ' முதலிய வாக்கியங்களில் இப்படியே பொருள் கொள்ள வேண்டும்.
"ததி3தா3ஸ பு4வனேஷு ஜ்யேஷ்ட2ம் யதோ ஜஜ்ஞே உக்3ரஸ் த்வேஷ ந்ரும்ண :|
ஸத்3யோ ஜஜ்ஞானோ நிரிணாதி ச'த்ரூந் ||"
- ருக்வேதம் (8-7-1)
(தேவனிடமிருந்து இந்த உக்ரன் என்று பெயர் பெற்ற சிவன் பிறந்தானோ அந்த பிரமன் ஜ்யேஷ்டனாய் இருந்தான். (அந்த ருத்ரன்)பிறந்தவுடன் சத்ருக்களை அழித்தான்) என்று பிரமன் சிவன் உற்பத்தி பேசப்பட்டிருக்கிறது .
"பூ4தாநாம் ச ப்ரஜாபதிஸ் ஸம்வத்ஸரயா தீ3க்ஷித:| பூ4தநாம் பதிர் க்4ருஹபதிராஸீத் | உஷ : பத்நீ| ... பூ4தநாம் பதிஸ் ஸம்வத்சர உஷஸி ரேதோsஸிஞ்சத் |ஸம்வத்சரே குமாரோ ஜாயத | ஸோரோதீ3த்| தம் ப்ரஜாபதிரப்3ரவீத்| குமார கிம் ரோதி3ஷி| யச்ச்2ரமாத் தபஸோதி4ஜாதோஸீதி| ஸோsப்3ரவீத் அநபஹதபாப்மா வா அஹமநாஹிதநாமா| நாம மே தே3ஹி பாப்மநோsபஹத்யா இதி | தம் புந: ப்ரஜாபதிர3ப்ரவீத் ருத்3ரோsஸீதி|... ருத்3ரோப4வச் சர்வ ஈசாந : பதிர்பீ3ம உக்3ர: இதை சப்த நாமாநி ||"
-சதபதப்ராஹ்மணம்(யஜுர் வேதம்)
(பூதங்களுக்கு பதியான பிரமன் ஒரு வருஷத்திற்கு தீக்ஷையுடன் இருந்தான். அவன் க்ருஹஸ்தனாய் இருந்தான். (அவனுடைய)பத்னி உஷஸ். ப்ரஜாபதியும் ஸம்வத்சரத்திருக்கும் தேவதையான பிரமன் (விடியற்காலை வேளைக்கு அபிமானி தேவதையான ) உஷஸ்ஸிடம் ரேதஸ்ஸை விட்டான். ஒரு வருஷத்தில் குமாரன் பிறந்தான். அவன் அழுதான் . அவனிடம் "குழந்தாய்! ஏன் அழுகிறாய் ? மிகவும் சிரமப்பட்டுத் தவம் செய்து பிறந்தவனாயிற்றே" என்று பிரமன் கேட்டான். அக்குமரன் 'பெயரிடப்படாத நான் பாபம் நீங்காதவனாக இருக்கிறேன். என்னுடைய பாபம் ஒழிவதற்காக நாமத்தைத் த்ருவாயாக என்று சொன்னான். அவனிடம் மறுபடியும் பிரமன் "ருத்ரன் என்னும் பெயரை உடையவனாயாவாயாக " என்றான் ..... ருத்ரன், சர்வன், ஈசானன் , பசுபதி, பீமன் உக்ரன் என்ணயும் ஏழு நாமங்களும் (பிரமனால் கொடுக்கப்பட்டன ).)
இதன் மூலம் ரேதஸை விட்டதால் பிரமனும் : பாபம் நீங்காமல்(கர்மம் காரணமாக) பிறந்ததால் ருத்ரனும் ஜீவர்களே என்பது வேதம் எடுத்துரைக்கிறது.
"ஏகோ ஹ வை நாராயண அஸீத் ந ப்3ரஹ்மா நேசாநோ.."
-ஸுபாலோபநிஷத்
(ஸ்ருஷ்டிக்குமுன் நாராயணன் ஒருவனே இருந்தார் . பிரமனும் இல்லை ஈசானனும் இல்லை....) என்று கூறப்படுவதால் பிரமனும் சிவனும் நித்யர்களில்லையாகிறது , அவர்களும் ப்ரளயகாலத்தில்அழிவுக்குஉட்பட்டவர்களே என்பதாகிறது .
ப்ரஹ்மா ,சிவனின் பிறப்பு பகுதி- 1
ப்ரஹ்மாவின் பிறப்பு
ஸ்ருஷ்டிகர்த்தா என்று புகழப்படும் ப்ரஹ்மா படைக்கப்படுபவர்களின் ஆயுள் முதலியவற்றை விதிப்பவனாகையாலே அவன் விதி என்னும் பெயருடன் விளங்குகிறான் . ஆனால் அப்பிரமனுக்கும் பிறப்புண்டு ஆயிளுண்டு,அழிவுண்டு. படைக்கும் பிராமனையும் பிறப்பித்தவனே பரதத்வம் என்பது நிச்சயம் .
"தஸ்மாத்3 விராட3ஜாயத விராஜோ அதி4பூருஷ:
ஸ ஜாதோ அத்யரிச்யத பச்சாத் பூ4மிமதோ2 புர:"
- புருஷஸூக்தம்
(அந்த விஷ்ணுவிடமிருந்து ப்ரஹ்மாண்டம் உண்டாயிற்று. ப்ரஹ்மாண்டத்தில் பிரமன் உண்டானான். அந்த நான்முகன் பூமியை பக்கங்களிலும் கீழும் மேலும் அக்கிரமித்தனன் .)
இந்த வேத வாக்கியம் புருஷ சம்ஹிதையில் பின்வருமாறு பொருள் உரைக்கப்பட்டது .
"தஸ்மாத்3 விராடி3த்யநயா பாத3நாராயணாத் ஹரே:
ப்ரக்ருதே: புருஷஸ்யாபி ஸமுத்பத்தி :ப்ரத3ர்சிதா "
- புருஷ சம்ஹிதா
('தஸ்மாத்3 விராட ......' என்னும் மந்திரத்தினால் நாராயணனுடைய ஓர்அவதாரமாகிய ஹரியினிடமிருந்து ப்ரக்ருதியினுடையவும் ,பிரமனுடையவும் உற்பத்தியானது காட்டப்பட்டது .)
"ஸ ப்ராஜாபதிரேக : புஷ்காரபர்னே ஸமப4வத் |
லலாடத் க்ரோத4ஜோருத்ரஸ்த்ர்யக்ஷ:க2ண்ட3பரசுரஜீஜநத் ||"
- அதர்வணவேதம்
(அந்த பிரமன் ஒருவனே தாமரையில் உண்டானான் . (அவனுடைய)நெற்றியிலிருந்து க்ரோதத்தினாலுண்டானவனும்,கண்டபரசு என்ற பெயரையுடையவனும் முக்கண்ணனுமான ருத்ரன் உண்டானான் ) .
"நாராயணாத் ப்3ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்3ரோ ஜாயதே "
-நாராயணோபநிஷத்
(நாராயணனிடமிருந்து பிரமன் உண்டானான் நாராயணனிடமிருந்து ருத்ரன் உண்டானான் )
"அத2 புநரேவ நாராயணஸ் ஸோந்யத்காமோ மனஸா த்4யாயத தஸ்ய
த்4யாநந்தஸ்த2ஸ்ய லலாடாத் ஸ்வேதோ3பதத் -தா இமா: ப்ரததா
ஆப:தத்தேஜோ ஹிரண்யமண்ட3ம் - தத்ர ப்3ரஹ்மா சதுர்முகோ2ஜாயத "
- மஹோபநிஷத்
(அந்த நாராயணன் மறுபடியும் மனஸ்ஸினால் ஸங்கல்பித்தார் . அவர் ஸங்கல்பம் பண்ணி முடிந்தவுடன் நெற்றியிலிருந்து வேர்வை விழுந்தது , அதுவே இங்கு எங்குமுள்ள ஜாலமாயிற்று . அந்த நாராயணனிடமிருந்து ஒளிமயமானதும் , பொன்மயமானதுமான அண்டம் உண்டாயிற்று , அதில் நான்முகனாகிய பிரமன் பிறந்தான்)மேலும்
"ஏகோ ஹ வை நாராயண அஸீத் ந ப்3ரஹ்மா நேசாநோ.."
-ஸுபாலோபநிஷத்
(ஸ்ருஷ்டிக்குமுன் நாராயணன் ஒருவனே இருந்தார் . பிரமனும் இல்லை ஈசானனும் இல்லை....) என்றும் கூறப்பட்டுள்ளது . இதனை மேலும் பல இடங்களில் விவரிக்க உள்ளோம் . இவ்வேத வேதாந்த வாக்கியங்களிலிருந்து பிரமனும் ப்ராக்ருதமான பிறப்பு உடையவனே என்பது நிச்யமாக தெரிகிறது .
No comments:
Post a Comment